Wednesday, August 10, 2011

நிதியும் போர்க்குற்றவாளி தான் :சபையில் அ.தி.மு.க., உறுப்பினர் பேச்சு

""இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதில், கருணாநிதிக்கும் பங்கு இருக்கிறது. எனவே, கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளி தான்,'' என்று, சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர் கலைராஜன் பேசினார். பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் அவர் பேசியதாவது: "அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராது' என்று, துரைமுருகன் கூறினார். ஆனால், இன்று அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. இலங்கைத் தமிழர் நலன் காக்க, முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அவர்களுக்காக பாடுபடுவதுபோல் நாடகம் நடத்தினார். ராஜபக்ஷே வீட்டிற்கு மகள் கனிமொழியை அனுப்பி, பரிசுப் பொருள்களை வாங்கிவரச் செய்து மகிழ்ந்தவர் தான் கருணாநிதி.இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதில், ராஜபக்ஷே மட்டும் போர்க்குற்றவாளி கிடையாது. கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளி தான். தி.மு.க., ஆட்சியில், எதிர்க்கட்சித் தலைவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியதை கண்டித்து, நான் பேசினேன். அதற்காக, என் வீட்டிற்குள் ஆட்களை அனுப்பி தந்தையை தாக்கினர். வீட்டை சூறையாடினர். இந்த வழக்கில், கடைசிவரை தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.நகர் பஸ் ஸ்டாண்ட் மிகவும் சிறியதாக உள்ளது. மூன்று தளங்கள் கொண்டதாக, பஸ் ஸ்டாண்டை மாற்றி அமைக்க வேண்டும் என்று, முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால், காதில் வாங்கவே இல்லை. அதை செயல்படுத்துவதற்கு, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கலைராஜன் பேசினார். சட்டசபையில், கலைராஜன் பேசும்போது குறிப்பிட்டதாவது: முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு, உயர்மட்ட அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவருக்கு, இப்படிப்பட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு, ரயில் நிலையத்தில் அவர் மீது கத்திக்குத்து நடக்க முயற்சி நடந்ததாக நாடகம் நடத்தினர். அதன் காரணமாக, அவருக்கு இப்போதும் பாதுகாப்பு இருந்து வருவதாக தெரிகிறது. இந்த பாதுகாப்பை, தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு வழங்கும் பாதுகாப்பாக இருந்தால், அதை மத்திய அரசு வாபஸ் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுக்க வேண்டும். தி.நகரில், ஏராளமான சூதாட்ட கிளப்புகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும், அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த கிளப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கலைராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...