Monday, August 1, 2011

கண்ணீரில் மூழ்கி கதறியழும் க(கொ)லைஞர்!

ன் வினையால் தத்தளிக்கும் க(கொ)லைஞர்!

தன் மகளின் நிலையெண்ணி வாடுகிறார் கலைஞர்
தமிழர்களின் கண்ணீரால் நொந்து போனார் கவிஞர்
இன்னலது தன் உடலை வாட்டவில்லை என்றாலும்;
ஈழ மக்கள்- மீனவர்கள் கனவில்; தொல்லைதனை
அண்ணலுக்குத் தந்து விட்டுப் போகின்றார்;
தன் மகளும் கைதாகி தத்தளித்து வாடுகின்றார்
என்னை இங்கு விட்டு விட்டுச் சென்று விட்ட கனியே
எட்டிக் கொஞ்சம் கூப்பிட்டால் வந்திடுவேன் தனியே!!
ஜாக்கிரதை இல்லேன்னா பணம் காலி!

உத்தமியின் பெயரோ 
உடுப்பிமலை ஊர்மிளா
அத்தையோடு சேர்ந்து 
அவுட்டிங் போவாளாம்
உத்தியோகம் ஏதுமில்லை; 
உடலிழைத்து வருவாளாம்
மொத்தமாக ஆண்கள் பாக்கட்டினை
மோகத்தினால் காலியாக்கி விடுவாளாம்! 

சீரியலால் சிக்கல் பட்ட சிங்காரி!

வாரியே சுருட்டி தலை 
வாரினாள் சுகந்தா
வாசலில் உட்கார்ந்து
வாஞ்சையோடு பார்த்தாள் தென்றல்
காரிருள் படர, கைக்குழந்தையோ தொலைய
கண்களில் நீர் குளமாய் வழிய
கூப்பாடு போட்டழுதாள் சுகந்தா
சாப்பாட்டு நேரத்தின் பின்னர்- நாதஸ்வரம்
சத்தமாய் ஆரம்பிக்கும் என்பதனால்
பெத்திட்டாப் போச்சு ஒரு குழந்தை- தொலைந்து
போனது போகட்டும் என தேற்றினாள் 
அவள் சீரியல் மடந்தை- சீரியஸ் மங்கை!!

காற்றில் பறக்கும் ஜெயலலிதாவின் வாக்குறுதிகள்!

அம்மா ஜெயலிலிதா, நீ வரும் போது சொன்ன தென்னம்மா
சும்மா இருந்த மக்களுக்கு மிக்ஸி தந்து சொக்கவைத்த தே(ன்)னம்மா
இன்றோ நீ பதவியேற்ற பின் காலம் வேகமாய் ஓடுதம்மா
நன்றாய் ஏழைகள் வாழ்வும் உன் அருளால் ஒளிருதம்மா
அன்றில் நீ தான், அடுத்த தேர்தல் வருகையிலும்-எம்
முன்றல் வந்து கையெடுத்து வணங்கு- மறக்க மாட்டோம்
மீண்டும் இலவசத்தை தந்து நீயும் ஜெயித்து விடு
வேண்டும் வரம் தருவேன் என சொல்லி ஏமாற்றி விடு! 

பிற் சேர்க்கை: இக் கவிதைகளைத் தமிழகத்தில் வாழ்ந்து எழுதுவது போன்ற, உணர்வோடு எழுதியிருக்கிறேன். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...