அழகிரி கோட்டை சரிகிறது!
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?
அழகிரியின் மதுரை சாம்ராஜ்ஜியத்தின்ஊழல், அதிகார வேர்களை தெஹெல்கா வார இதழ் கொஞ்சம் எளிதில் புரிகிற மாதிரி ஒரு சார்ட் தயாரித்து 06-08-2011 தேதியிட்ட இதழில் வெளியிட்டிருக்கிறது. கொஞ்சம் குறைச்சலாகத்தான் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது!
ஏனென்றால் அடிப்பொடிகளே, ஐநூறு கோடி, ஆயிரம் கோடி என்று சம்பாதித்திருப்பதாகச் சொல்லப்படும்போது தெற்கு மண்டல சுல்தானுக்கு மட்டும் கம்மியாக இருக்க முடியுமா, சாத்தியமா என்பதை வாசகர்கள் தான் ஊகித்துச் சொல்ல வேண்டும்.
படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்
பொட்டு சுரேஷுக்கு ஐநூறு கோடி, கோ.தளபதிக்கு நானூறு கோடி, அட்டாக் பாண்டிக்கு முன்னூறு கோடி என்று அடிப்பொடிகள் ஒவ்வொருவருக்கும் உத்தேசமாக எவ்வளவு தேறும் அல்லது தேற்றியிருப்பார்கள் என்று சிறு குறிப்பும் இந்தக் கட்டுரையில் வெளியாகியிருக்கிறது.ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அ'னாதான் என்றாலும், அண்ணன் மதுரையை சுற்றியே தன்னுடைய கோட்டையைக் கட்டிக் கொண்டிருந்ததில், அங்கே அவருக்குப் பிராக்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்த இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா என்ன செய்து கொண்டிருந்தார் என்பதே தெரியாத அண்ணன் மேலேயே முழுப் பழியையும் சுமத்திவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.
ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு! சிக்கல்கள் பெரிதாகிக் கொண்டே வருகிற இந்தத் தருணத்தை விட்டால் பிரதமராகிற வாய்ப்பு வேறெப்போதும் கிடைக்காது என்று பிரணாப் குமார் முகர்ஜி சில உள்வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
மன்மோகன் கழன்று கொள்கிறாரா என்ன!!
கேடி பிரதர்ஸ். பிரணாப் தயவில் மிக சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கலாநிதி மாறன் நாடு திரும்பியாயிற்றா, போலீஸ் சம்மன் என்ன ஆயிற்று என்பதே தெரியாத நிலையில், சன்டீவீ மீது புகார் கொடுத்தவர்கள் எல்லாம், புகாரில் சமரசம் ஏற்பட்டுத் தங்களுக்கு சேர வேண்டியது கிடைத்துவிட்டதாகப் புகார்களை வாபஸ் வாங்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கும் சித்து விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதைத்தான், முந்தைய பதிவில், தாத்தா பேரன்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது என்றும் சொல்லியிருந்தேன்.
சிபி ஐ மூன்றாவது துணைக் குற்றப்பத்திரிகையை எப்போது தாக்கல் செய்யப் போகிறது என்பதோ, எவரெவர் பெயர்கள் அதில் இருக்கும், கைதுகள் இருக்கும் என்பது தெளிவாக இல்லாத நிலையில் அழகிரி, அட்டாக் பாண்டி என்று லோகல் ரேஞ்சில் மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டியது தானா?
சிபி ஐ மூன்றாவது துணைக் குற்றப்பத்திரிகையை எப்போது தாக்கல் செய்யப் போகிறது என்பதோ, எவரெவர் பெயர்கள் அதில் இருக்கும், கைதுகள் இருக்கும் என்பது தெளிவாக இல்லாத நிலையில் அழகிரி, அட்டாக் பாண்டி என்று லோகல் ரேஞ்சில் மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டியது தானா?
கல்மாடிக்குக் கம்பனி....?
டாட்டா, அம்பானி,ஷீலா தீட்சித், சால்வை அழகர்கள் எல்லாம் திஹாருக்குள் கம்பனி கொடுக்கப் போக மாட்டார்களாமா?
No comments:
Post a Comment