Monday, October 3, 2011

கருணாநிதியை கீழே தள்ளிய "மொழி" எது?

மொழி என்றாலே கலைஞருக்கு எப்போதுமே பிரச்சினைதான்.....ஆரம்பகால கட்டத்தில் இந்தி மொழியை ஒழிப்போம் என்று சொன்னார். ஆனால் தயாநிதி இந்தியில் வெளுத்து வாங்குவாரு, கனிமொழி அக்கா அல்லா மொழியும் பேசும்,ஆனா தமிழை மட்டும் கொஞ்சம் கொத்தி கிளறித் தான் பேசும். அப்படி அவரு ஒழிச்சிருந்தா தயாநிதியும், கனிமொழியும் எப்படி அதுல சூப்பெரா பேச முடியும். அடுத்தது கலைஞரோட பேரன்கள், பேத்திகள் எல்லோருக்கும் இந்தி அத்துப்படி...அப்படினா நாமதான் இளிச்சவாயனுங்க அப்படித்தானே...

ஊருக்குள்ள ஒரு பிரச்சாரம் செய்யுரப்ப நாம அந்த தப்பை செய்யக்கூடாதுன்னு காந்தியும், காமராசரும், அப்துல்கலாமும், பாரதியாரும் இருந்தாங்க...ஆனா இவரு தான் மட்டும் எல்லா சந்தோசத்தையும் அனுபவிச்சுக்கிட்டு மத்தவங்களை கலட்டி விட்டிருவாரு. இன்னிக்கும் எத்தனை எத்தனை இளைஞர்கள் ஹிந்தி பேசுறது புரியாம, எழுத்து தெரியாம மும்பைல போய் கஷ்டப்படுரானுங்க தெரியுமா?

இப்போ நான் என்ன யோசிக்கிறேனா? ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு இறங்குனதுக்கு பதிலா தமிழ் வளர்ப்பு போராட்டம் னு இறங்கி இருக்கலாமே..ஏன் செய்யலை? நீங்களும் யோசிங்க

சரி அப்படி தமிழ்ல என்னதான் எழுதிட்டாரு னு பார்த்தா ஒன்னும் கிடையாது. அவர் சினிமாவிற்கு கதை வசனம் எழுதினாரு. அதுல ஹிட் ஆனாரு. ஆசை விடலை. அதே கதை, வசனத்தை அரசியல் பக்கம் திருப்பினாரு..கொஞ்சம் மருவாதை கிடைச்சது. அப்புறம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கேரளாக்காரன், தமிழ்நாட்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரி நுழைஞ்சு அரசியல்ல பேரு வாங்கிட்டாரு. அதுக்கப்புறம் அரசியல் செல்வாக்கை மட்டும் அவர் வளர்க்கலை , மனைவி செல்வாக்கு, குடும்ப செல்வாக்கு, மகன்கள் செல்வாக்கு, சொத்து செல்வாக்கு, பினாமி செல்வாக்கு, தொலைக்காட்சி செல்வாக்குன்னு செல்வாக்கை மட்டும் பெருசுபடுத்திக் கிட்டு இன்னிக்கு மக்களோட வாக்கு செல்வாக்கை கோட்டை விட்டுட்டு நிக்குறாரு.

கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் பதிவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்...அவர்கள் இதை படிக்கும் பட்சத்தில் எனக்கு விளக்கம் தர வேண்டுகின்றேன். இவர் கடவுளே இல்லை என்று சொல்கின்றாரா? அல்லது இந்த கடவுள்கள் மட்டும் இல்லை என்று சொல்கின்றாரா? இதை தைரியமாக சொல்வதற்கே தைரியம் இல்லாத மனிதர். இந்துக்கள் எப்போதுமே விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட்டவர்கள். அதனால் யார் என்ன தூற்றினாலும் அவர்கள் அதைப் பற்றி கவலை கொள்வதில்லை. அதனால்தான் இவரெல்லாம் பேசி நாம் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்துக்களை இப்படி இழிவுபடுத்தி பேசுகின்றாரே என்று யாரும் வருந்த வேண்டாம்...அவருடைய பேச்சினை அவருடைய மனைவியும் கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவிகித பங்கு கொண்டவருமான தயாளு அம்மாள் கூட கேப்பதில்லை. ஏன் அவரிடம் பணிபுரியும் ஊழியர்கள் கூட அந்த தொலைக்காட்சியில் கடவுள் வழிபாடு பற்றி அவ்வப்போது ஒலிபரப்பு செய்துகொள்வார்கள். அப்படி இருக்கும் போது அவருடைய குழந்தைத்தனமான பேச்சிற்கு யாரும் செவி சாய்க்க வேண்டிய அவசியமே இல்லை.

கடந்த ஆட்சி காலத்தில் அவர் தமிழர்களின் குறிப்பாய் இந்துக்களின் உணர்வுகளை தொடர்ச்சியாக புண்படுத்தினார். எதற்கு இந்த நாடகம்? இசுலாமிய, கிருத்துவ சகோதர, சகோதரிகளின் வாக்கினையும் சேர்த்து பெற வேண்டும் என்ற எண்ணத்தில். கடைசியில் எல்லோருமே சேர்ந்து அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கி அடித்து விட்டார்கள்.

உண்மையில் பெரியார் சொன்னது மூட நம்பிக்கைகளை ஒழிப்போம் என்றார்...ஆனால் இந்துக்களை அவர் என்றுமே சாடியதில்லை. அப்படி இந்துக்களை வெறுப்பவராக இருந்திருந்தால் அவர் வைக்கம் சென்று போராட்டம் நடத்தி இருக்க மாட்டார். ஆனால் கலைஞரோ ஒரு படி மேலாக சென்று இந்துக்களின் பண்டிகைகளை கொச்சைப்படுத்தி வேறு மாநிலத்தானின் பண்டிகைக்கு அரசு விடுமுறை கொடுத்து அதே சமயம் நமது பல ஆண்டு காலமாய் இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி என்பதை மிக கேவலமாய் விடுமுறை தினம் என்று சொல்லி யாரோ ஒரு வக்கிர கும்பலுக்கு சந்தோசத்தை கொடுத்தார். அது போல ஆண்டாண்டு காலமாய் கொண்டாடிய தமிழ் வருடபிறப்பை மாற்றி யமைத்தார். தனது மகன்களின் சண்டைகளை தீர்த்து வைக்கத் தெரியாத ஒரு உத்தமர். ஒருமுறை தயாநிதி மாறனின் ௨ ஜி வழக்கு பற்றி பத்திரிகை கேள்வி கேட்ட போது அவருக்கு எவ்வளவு கோபம் வந்தது பார்த்தீர்களா?  இந்தியாவில் மட்டும்தான் பத்திரிகைகள் ஆட்சி செய்கின்றன? அவர்கள் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் களங்கம் ஏற்படுத்த முடியும் என்று சொன்னார்.

ஒரு விஷயத்தை அவர் மறந்து விட்டார் போலும், அல்லது தமிழர்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கின்றார் போலும்...கடந்த ஆட்சியை அவர் கைப்பற்றியதே, பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவால்தான், தான் ஒரு முறை கைது செய்யப்பட்டதை பல கோடி முறை தனது குடும்ப தொலைக்காட்சியில் போட்டு போட்டு அதை வைத்து வியாபாரம் செய்து நாற்காலியை பிடித்தவர் என்பதை அவர் மறந்து விட்டார் போலும். அன்று சொல்ல வேண்டியதுதானே பத்திரிகைகளால் தான் ஒவ்வொரு ஆட்சியையும் அழிகின்றன? என்று..அப்படி சொல்லி இருந்தால் கடந்த கால ஆட்சி பீடத்தில் அமர்ந்த்திருக்கவே மாட்டார். ஏன் சொல்லவில்லை?

வள்ளுவனின் திருக்குறளை முழுவதுமாக கரைத்து குடித்து விட்டால் போதுமா? அவர் எழுதிய திருக்குறளில் ஏதாவது ஒரு விஷயத்தை பின் தொடர்கின்றார் என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்...காமத்து பாலைத் தவிர.

  
இந்த திருக்குறளுக்கேற்ப இப்படி வாழ்கின்றார் என்று ஏதாவது ஒன்றை ஒப்பிட்டு பார்க்க முடியுமா? எல்லாமே போலியாய் சித்தரிக்கப் பட்ட ஒன்று. அதே திருக்குறளின் பொருளை, உண்மையை உணர்ந்து அப்படியே வாழும் எத்தனையோ ஆசிரியர்கள், புலவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் தனக்குத்தானே பந்தல் போட்டு பாராட்டு நடத்தி கொள்ள வேறு எவருக்கும் தெரியவில்லை, கைகளில் பணம் இல்லை, அதுதான் நிதர்சன உண்மை.

திமுக தொண்டர்கள் ஒரு விஷயத்தை நன்கு கவனிக்க வேண்டும். தனது சொந்த கரங்களால் தனது சொந்த நிதியில் இருந்து அதாவது முதலமைச்சர் அல்லாத கருணாநிதி பொது மக்களுக்காக இவ்வளவு செய்தார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்...நானும் திமுகவின் அடிப்படை உறுப்பினராகி விலகியவன் தான். எனக்கும் தெரியும், அவரது நிதி உதவி நடவடிக்கைகள். தமிழ் நாடு ஒரு முறை கடுமையான வெள்ளத்தால் தத்தளித்தது. அப்போது கூட அவர் திமுக சேமிப்பு நிதியில் இருந்து இவ்வளவு செய்யப்படும் என்றுதான் அறிவித்தார். தொண்டர்களிடம் வசூலித்து தொண்டர்களிடமே திருப்பி கொடுக்கும் அவர் பெரிய மனிதர் ஆகி விடுகின்றார், இல்லை ஆகிவிடப் படுகின்றார்.

அந்த தமிழ் மொழிதான் அவரை பாடாய் படுத்துகின்றதே...சரி அந்த மொழிக்காக தான் இப்படி செய்தேன், அப்படி செய்தேன் என்று பிலீம் காட்டுகின்றார் அல்லவா? காமெடி பசார், பிளாக் பஸ்டர் மூவி, சூப்பர் ஹிட் மூவி,, இவை அனைத்துமே தமிழ் வார்த்தைகள்தான்....இதன் பிறகு இந்த தொலைக்கட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினிகள் பேசும் தமிழில் எனக்கு நான் படித்த மொத்த தாமிலும் மறந்து போய் தொழயும். ஆனால் அதையே மக்கள் டிவி சிறப்பாகத்தான் செய்கின்றது. உடனே நான் மக்கள் டிவி பதிப்பாளன் என்று முத்திரை குத்த வேண்டாம்.

ஒரு விஷயம் செய்கின்றேன்...நான் இப்படித்தான் செய்வேன் என்று துணிந்து கூட சொல்லத் தெரியாத ஒரு தலைவர். இவரை நம்பி இத்தனை நாள் இந்த கட்சி இருந்ததே பெரிய விஷயம் என்றே நான் நம்புகின்றேன். தேமுதிக விசயகாந்த் திருப்பதிக்கு போனதை அதிகமாய் கொச்சை படுத்தினார், செயலலிதா கோவிலுக்கு செய்தால் அதையும் கொச்சை படுத்துவார். தான் திராவிட கழகங்களில் இருந்தாலும் தனது கடவுள் நம்பிக்கைகளின் மீது அசாதாரண நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அவர்களால் துணிந்து கோயில் பூசைகள், பரிகாரங்கள் செய்ய முடியும். அது இவரால் முடியுமா?

வாழும் வள்ளுவரே என்று ஏன் இவரை சொல்கின்றார்கள் என்று யாராவது ஒருவர் விளக்க முடியுமா? உண்மையில் லட்சக்கணக்கான உண்மையான வள்ளுவர்கள் இன்றும் பல கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். எளிமை, குடும்பத்தலைமை, தமிழ் புலமை, ஏகபத்தினி விரதன் என்று இப்படி எத்தனையோ குனாதிசியங்களோடு நம்மோடு வாழ்கின்றார்கள்.

ஆரம்பத்தில் தமிழ் மொழியால் வாழ்ந்தவர் இன்று கனி 'மொழியால்' அதை மொத்தமாய் இழந்து நிற்கின்றார். காலச்சக்கிரம் சுழலுகின்றது. எப்போதுமே கோபுரத்தின் உச்சத்திலேயே இருக்கலாம் என்று நினைத்த குடும்பத்திற்கு கீழே இருக்கும் குப்பை த்தொட்டி அவர்களை மீண்டும் அழைக்கின்றது. ஆனால் அவரது குடும்பம் இத்தனை நாட்கள் தமிழ் "மொழி" பெயரை சொல்லி கொள்ளையடித்த பணத்தை கனி "மொழி" க்காக இழக்க தயாரில்லை என்பதே உண்மை.

கனிமொழி வெளியே வந்துவிடுவார் என்று கவலைப்படும் அவர் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த சரத்குமார் என்ற இளைஞரை என்ன செய்யும்? காப்பாற்றுமா? அல்லது கழட்டி விடுமா? சக்சேனா, ஐயப்பன் காப்பாற்றப் படுவார்களா? அல்லது கழட்டி விடப்படுவார்களா? சொந்த மகளுக்காக தனது பேரனையே காட்டி கொடுக்கவும் தயங்க மாட்டார் கருணாநிதி என்று சமீபத்தில் ஊடகங்கள் செய்திகள் கசியவிடுகின்றது.

ஸ்டாலினின் பெயரை அடிக்கடி உச்சரிக்கும் கருணாநிதி அழகிரியை உச்சரிக்க மறக்கின்றார்...காரணம் என்ன? குடும்பத்திர்க்குள்ளாகவே இத்தனை குளறுபடிகள்...இவரை நம்பி திமுகவின் எதிர்காலம்? கனிமொழியின் எதிர்காலமே இனி திமுகவின் எதிர்காலம் என்று முடிவெடுத்து விட்டார் கருணாநிதி...............

குறிப்பு : இது தனி ஒரு மனிதரை சாடும் நோக்கில் எழுதப்படுபவை அல்ல...நாளை வேறு ஒருவர் இதே மாதிரி இரட்டை வேடம் போடும் பட்சட்ச்சில் நிச்சயம் நான் உயிரோடு இருந்தால் அவர்களை ப்பற்றியும் விமர்சனம் செய்ய தயங்க மாட்டேன். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...