Thursday, October 20, 2011

‘அடப்பாவி’ வேலை செய்த ‘அப்பாவி’ நேருவுக்கு, கருணாநிதி அட்வைஸ்!

 “திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள், தி.மு.க.வுக்கு சாதகமாகவே உள்ளன” என்று அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி. இந்தக் கணிப்புக்கு அவர் எப்படி வந்தார் என்பதுதான், ஆச்சரியம்.
 
இதே தொகுதியில் 5 மாதங்களுக்குமுன் தேர்தல் நடைபெற்றபோது, தி.மு.க.வின் இதே வேட்பாளர் கே.என்.நேரு சுமார் 7,000 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது 14,000 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளார். அப்படியிருந்தும், முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளன என்று சொன்னால் எப்படி?
“இந்தத் தேர்தலில், காலை கட்டிப் போட்டுவிட்டு ஓட்டப் பந்தயத்தில் ஓட விடுவதைப் போல, நேருவை சிறையில் போட்டுவிட்டு, இடைத் தேர்தலை நடத்தினார்கள். அப்படி நடத்தியவர்களின் வீரத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். அந்த நிலையில் கூட, தற்போதுள்ள ஓட்டு வித்தியாசத்தைப் பார்க்கும்போது, தி.மு.க.,வுக்குச் சாதகமாகத் தான் உள்ளது.” என்றுதான் கருணாநிதியின் கணிப்பு சொல்கின்றது.
இதில் பெரிய கன்ஃபிளிக்ட் ஒன்று உள்ளது.
தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு முதல்நாளே கே.என்.நேரு ஜாமீனில் வெளியே வந்தும், அவர் பிரச்சாரத்துக்குச் செல்லவில்லை. சிறையில் இருந்து நேரே சென்னைக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். அதன்பின் தொகுதிக்குள் வந்து ஒருமுறை தலையைக் காட்டிவிட்டு, வீட்டில் போய் முடங்கிக் கொண்டார். அது ஏன்? சொந்தக் காலை இவர்களே ஏன் கட்டிக் கொண்டு ஓட முயன்றார்கள்?
இதற்கு பதில், தேர்தல் களத்தில் கே.என்.நேரு இல்லாமலேயே தேர்தலைச் சந்திக்கவே தி.மு.க. விரும்பியது என்கிறார்கள் திருச்சி தி.மு.க. வட்டாரத்தில்.
காரணம் என்ன? “அப்பாவியான நேருவை அநியாயமாகப் பொய்க் குற்றம் சுமத்தி சிறையில் அடைத்து விட்டார்கள்” என்று தி.மு.க. மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்னாலும், தி.மு.க. ஆட்சியில் இந்த ‘அப்பாவி’ திருச்சியில் செய்த லீலைகள் ‘அடப்பாவி’ ரேஞ்சில் இருந்தன என்பது தி.மு.க. தலைமைக்கும் தெரியும், லோக்கல் கட்சிக்காரர்களுக்கும் தெரியும். திருச்சி மக்களுக்கும் தெரியும்.
அப்படியான ஒருவரை மக்கள்முன் காட்டி வாக்கு கேட்டால், ஓட்டு விழுமா என்ற சந்தேகம் கட்சித் தலைமைக்கே இருந்தது.
இதனால்தான், தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு ஒரு தினம் முன்னரே நேரு வெளியே வந்துவிட்ட போதிலும், “போசாம போயி வீட்டுல ரெஸ்ட் எடுய்யா” என்று கருணாநிதி சொல்லி விட்டாராம்.
வாக்களிக்கும்போது மக்களும் அதையே ஃபலோ பண்ணி விட்டார்கள். “பேசாம போயி வீட்டுல இருய்யா”

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...