Tuesday, October 4, 2011

தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., சந்தித்த பிரச்சினைகள்





ம்பாயில் பத்திரிகையாளரை சந்தித்த ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் தமிழகத்தில் கலைஞர் ஆட்சியை கவிழ்க்க இந்திராகாந்தி சதி செய்கிறார். அதற்காக,தி.மு.க.,வில் போட்டித் தலைமைக்கு 3 பேரை தேர்ந்தெடுத்துவிட்டார்..என்று பேட்டியளித்தார். உடனே, தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது. தமிழக பத்திரிகைகள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.

யார் அந்த மூன்று பேர் என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே, அதிருப்தியில் இருந்த எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகிய மூவரோடும் அந்த செய்தியை இணைத்து கிசுகிசுத்தனர்.


 எம்.ஜி.ஆர்., அதிருப்தியில் இருந்தார் சரி, முதல்வர் பதவி கிடைக்காத நாவலர் அதிருப்தியில் இருந்தார் சரி. இதில் பேராசிரியர் க.அன்பழகன் எப்படி வந்தார்?
கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டால் என் வீட்டில் என் மனைவி கூட என்னை மதிக்கமாட்டாள் என்று அன்பழகனும் தன் அதிருப்தியை தெரிவித்திருந்தார்.



ஆக, தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது உறுதியாகிவிட்டது. அடுத்து, செங்கல்பட்டு மாவட்ட தி.மு.க.,மாநாடு 1972- ஏப்ரல் மாதம் னடந்தது. அதில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க.,பிளவு படவேண்டும், கழகத்தினரிடையே பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற நப்பாசையில் நடத்தப்படும் ஏடுகளுக்கு தி.மு.க.,வினர் ஆதரவளிக்கக்கூடாது.
எம்.ஜி.ஆர்.,ஒருவரை வைத்து கழகம் வளரவில்லை, வேறு எந்த ஒருவருக்காகவும் கழகம் இல்லை. கழகத்தை பிளவு படுத்த யாரும் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்கப்போவதில்லை என்று பேசி அப்போதைக்கு அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.




அடுத்த பிரச்சினை மு.க.முத்து மூலம் வந்தது. கலைஞரின் மூத்த மகனான முத்து சினிமாவில் நடிக்க விரும்பினார். அதை தன் தந்தைக்கு தெரிவித்தார். அதற்கு கலைஞரும் இசைந்தார். தன் சொந்த கம்பெனியான அஞ்சுகம் புரோடெக்சன் மூலம் கிருஷ்னன் பஞ்சு இயக்கத்தில் படமெடுக்க முடிவு செய்யபட்டது.


படத்தின் பெயர் பிள்ளையோ பிள்ளை. படத்துவக்க விழாவிற்கு எம்.ஜி.ஆர்., அழைக்கப்பட்டார். கிளாப் அடித்து அவரே படத்தையும் துவங்கிவைத்தார்.
மு.க.முத்துவின் நடிப்பில் தன் சாயல் இருப்பதையும் கவனிக்க தவறவில்லை எம்.ஜி.ஆர். நடனம், சண்டை என்று எல்லாவற்றிலும் அப்படியே எம்.ஜி.ஆரை பிரதிபலித்தார் முத்து. தனக்கு போட்டியாக ஒருவரை உருவாக்குகிறார்கள் என்பது எம்.ஜி.ஆருக்கு புரிந்துவிட்டது. ஆனாலும், அதை வெளிக்காட்டவில்லை. முத்துவின் அடுத்தடுத்த படங்களில் எம்.ஜி.ஆரின் அபிமானத்திற்குரிய வெண்ணிற ஆடை நிர்மலா, மஞ்சுளா போன்ற நடிகைகளையே முத்துவிற்கும் ஜோடியாக்கினார்கள்.

பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பிரச்சினை பகிரங்கமாய் வெடித்தது.நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்கள் எம்.ஜிஆருக்கு புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகவும் சில இடங்களில் எம்.ஜி.ஆர். மன்றங்கள்  மு.க.முத்து மன்றங்களாக வலுக்கட்டயமாக மாற்றப்படுகின்றன என்றும் புகார்கள் எழுந்தன.

இந்த செய்தியை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்.,  உடனே கலைஞரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்படி மாற்றப்பட்ட மன்றங்கள் எல்லாம் கலைக்கப்படவேண்டும் என்று கலைஞர் அறிக்கைவிட்டார். அதன்பிறகும் பிரச்சினை தொடர்ந்தது.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன.
கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதெல்லாம் சேர்ந்து எம்.ஜி.ஆரை வேதனை பட வைத்தது.

அடுத்த குண்டு சேலம் மாவட்ட தி.மு.க.,தலைவராக இருந்த எஸ்.எஸ். சுப்ரமணியம் மூலம், எம்.ஜி.ஆர். மீது  வீசப்பட்டது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? இந்த முறை கொதித்துவிட்டார் எம்.ஜி.ஆர். அது....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...