Monday, October 31, 2011

ஏமாந்த விஜயகாந்த் !


சிந்தியுங்கள் மக்களே, கடவுளோடும், மக்களோடும் கூட்டணி வைத்திருக்கும் தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் மக்களே என்று தமிழகம் முழுவதும் வீதி,வீதியாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கெஞ்சாத குறையாக வாக்கு வேட்டையாடியும் விஜயகாந்த்,  பிரேமலதா ஆகியோரின் கோரிக்கையை மக்கள் நிராகரித்து விட்டது தேமுதிகவினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த மக்கள்தானே 29 எம்.எல்.ஏக்களை நமக்குக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது அதே மக்கள் நமக்கு ஏன் பட்டை நாமம் போட்டுள்ளனர் என்ற குழப்பத்தில் விஜயகாந்த் அண்ட் கோ உள்ளனர்.

ஆனால் மக்கள் கணக்கு எப்போதுமே வேறு மாதிரி தான். தேமுதிகவை ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சியாக மக்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

மக்களே, மக்களே என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் ஊர் ஊராகப் போய்க் பிரச்சாரம் செய்தும் மக்கள் வாக்களிக்காமல் போனதற்கு முக்கியக் காரணங்களை ஆராய்வோம்.

1. முதலில் தேமுதிகவை மக்களுக்கான கட்சியாக, அதாவது மக்கள் கட்சியாக இன்னும் விஜயகாந்த் மாற்றவில்லை. 

2.மக்களுக்கான போராட்டங்களை தேமுதிக முறையாக சரியான நேரங்களில்  நடத்தத் தவறி விட்டது.

3. தனக்கென்று வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே விஜயகாந்த் செயல்பட்டது.

4. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வர வேண்டும் என்ற மக்களின் அடிப்படை எதிர்ப்பார்ப்பை அவர் மதிக்கத் தவறி விட்டார்.

5. அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக சாடி வந்த விஜயகாந்த், மறுபடியும் அதிமுகவிதாமே கூட்டணி வைத்தது மக்களுக்கு பிடிக்கவில்லை.

6. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோகமான வாக்குகள் கிடைக்க திமுக மீதான மக்களின் கடும் அதிருப்தியும், கோபமுமே காரணம். அதை சரியாக கணிக்காமல் தன்னுடைய கூட்டணிதான் இந்த வெற்றிக்கு காரணம் என நினைத்தது.

7. திமுகவை விட மேலான கட்சியாக தேமுதிக உருவெடுத்த போதிலும், சரியான எதிர் கட்சியாக சட்டமன்றத்தில் செயல் படாதது.

8. நடக்கும் ஜெ தலைமையிலான ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே பேசுவேன் என்று தெனாவெட்டாக விஜயகாந்த் பேசியது.

9. ஒரு எதிர்க்கட்சியாக பொறுப்பாக நடந்து கொள்ளாமல் இருந்தது.

10. யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாக ஒரு நல்ல அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல் தேமுதிக செயல்பட்டதால் தான் மக்கள் ஒதுக்கிதள்ளியுள்ளனர்.

தேமுதிக ஒரு பொறுப்பான மக்கள் கட்சி, மக்களாகிய நம் குரலே தேமுதிகவின் குரல், நமக்கான கட்சிதான் தேமுதிக என்ற நிலை வரும் போதுதான் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். அந்த ஆதரவும்  நிரந்தரமாகும், அப்போதுதான் தேமுதிக உண்மையான மாற்றுக் கட்சியாக மாற முடியும் என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உணர வேண்டும். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...