Thursday, October 6, 2011

திகார் சிறை என்ன விருந்தினர் மாளிகையா ?


சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பார்களே அதைப்போல் போல்,  சிறைச்சாலைகளில்(?) அடைக்கப்பட்ட குற்றவாளிகளும், சமமாகவே நடத்தப்படவேண்டும் அல்லவா? 
குற்றம் செய்த ஒவ்வொரு வரும் கைதிகள் தான். அவர்கள் செய்த குற்றத்தைப் பொறுத்தே, சிறைகள் இருக்கவேண்டுமே தவிர, பதவி, பணபலம், அரசியல் பலம்,  ஆள்பலம், செல்வாக்கு போன்றவற்றால் அல்ல.

அரசின் மிகப்பெரிய பொறுப்பிலும் , அதிகாரத்திலும் இருந்தவர்களும், பிரபல தொழிலதிபர்களும் சிறையில் இருந்தால், அவர்களுக்கு மின்விசிறி,(AC),செய்தித்தாள்,தொலைக்காட்சி,  கழிவறை என, கூடுதளாக பல வசதிகள் செய்து தரப்படுகின்றன.


நாட்டையே உலுக்கிய, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பல ஊழல்வாதிகள், வி.வி.ஐ.பி., கைதிகள் என்னும் விதிவிலக்கில், பல சிறப்பு சலுகைகளை அனுபவிப்பது நியாயமே அல்ல. 

பல வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட விசாரணைக் கைதிகளானாலும், கொலைக் குற்றமே செய்திருந்தாலும் இவர்கள் இவ்வாறு வேண்டிய பல வசதிகளை, சிறையில் பெற்றுக் கொள்வதற்கு, நம் சட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஓட்டைகளே காரணம்.


முன்னாள், இந்நாள் அமைச்சர்களும், கைதிகளைத் தேடிப் போகும்போது, சிறை காவலர்கள், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம், தனிக்கவனம் செலுத்தவே செய்வர். இது கிரிமினல்களை ஊக்குவிக்கும் செயல். 

இதனால், சிறைப் பணியாளர்களில் பலர் , கைதிகளிடம் விலைபோகும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது . தாம் செய்த குற்றத்தை தவறு என உணர வைக்கவும், மற்றவர் அதே தவறைச் செய்யாமல் இருக்கவும் தான்,  குற்றவாளிகளை சிறையில் தள்ளப்படுகின்றனர். 

இவர்களும், மற்றவர்களைப்போல் தண்டனை அனுபவிக்க வந்த  கைதிகளேயன்றி, பல வசதிகள் அனுபவிப்பதற்கு அழைத்த நம்வீட்டு விருந்தினர் அல்ல. இம்மாதிரி, சிறைகளில் குற்றவாளிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கச் செய்யும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும். 

சிறை விதிகளை மீறும் சிறைத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளை இனங்கண்டு, அரசு அவர்கள் மீது, கடும் தண்டனை வழங்க வேண்டும். செய்வார்களா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...