Wednesday, October 12, 2011

ஷேர் மார்க்கெட்டில் தயாநிதி செய்த தில்லாலங்கடி.

கடந்த 10ந்தேதி தென்னிந்தியாவின் பிரபலமான மீடியா மன்னரும், பெரும் தொழிலதிபருமான கலாநிதி, முன்னால் மத்திய அமைச்சர் தயாநிதி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் 8மணிக்கு மத்திய புலனாய்வு அமைப்பு சோதனைக்கு புகுந்தது. சகோதரர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்தே இந்த விசாரணையை நடத்தியது.
 
மாறன் வீடுகளில் சோதனை தொடங்கிய நேரத்தில், மும்பையில் பங்கு வர்த்தம் தொடங்கியது. பங்கு வர்த்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சன் நிறுவனம் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ்சின் பங்குகள்க்கு விலை சோதனை தொடங்கியது. அன்றைய சன் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 262 ரூபாயாக இருந்தது. படிப்படியாக மிக வேகமாக 244 ரூபாய்க்கு வந்தது. அதாவது 18 ரூபாய் குறைந்திருந்தது. பங்கு வர்த்தகம் மாலை 3:20க்கு முடியும் போது சன் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 264.50 ரூபாயாக இருந்தது.
 
எப்படி இது சாத்தியமானது ?.
 
சன் நிறுவனம்மல்ல எந்த நிறுவனத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்த புகுந்தாலும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்துள்ள பங்குதாரர்கள் அச்சம் ஏற்பட்டு தங்களிடம்முள்ள பங்குகளை அவசர அவசரமாக விற்க்கதொடங்குவார்கள். இதனால் விலை குறைவு ஏற்படும். மீண்டும் அந்த நிறுவனத்தின் பங்கு விலை ஏற சில தினங்கள் பிடிக்கும் இதுதான் நடைமுறை. ஆனால் சன் நிறுவனத்தில் ரெய்டு நடந்துக்கொண்டுயிருக்கும் போதே எப்படி கடும் சரிவை சந்தித்த பங்குகளின் விலை லாபத்தில் போய் நின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யம்.
 
அது தான் மாறன் சகோதரர்களின் பிஸ்னஸ் அ தில்லாலங்கடி மூளை.

 
சி.பி.ஐ ரெய்டுக்கு வரப்போகிறார்கள் என்பது டெல்லியில் விசாரணையை மாறன் சகோதரர்கள் எதிர்க்கொண்டபோதே அறிந்துக்கொண்டார்கள். விசாரணை என உள்ளே நுழையும் போது மீடியாக்கள் வாயிலாக உலகம் முழுவதும் செய்தி பரவும். அப்போது தங்களது நிறுவனங்களின் பங்குகளின் விலை வீழ்ச்சி தொடங்கும் என்பதை யூகித்தனர். இதை முறியடிப்பது எப்படி என்பதை ஆராய தொடங்கியது இந்த பிஸ்னஸ் பெருச்சாளிகளின் மூளை. சக பெரு முதலாளிகளிடம் இதுப்பற்றி ஆலோசனை நடத்தினர்.
 
முடிவில். ரெய்டு தகவல் மீடியாக்கள் வெளியிடும் போது முதலில் அமைதி காப்பாது. பின் படிப்படியாக தேசிய மீடியாக்களான ஆங்கில சேனல்கள், வர்த்தக சேனல்கள், இந்தி சேனல்களில் ரெய்டு பற்றிய செய்திகளை குறைக்க வைத்து பங்கு வர்த்தகத்தில் அதிகம் ஈடுபட்டுள்ள வடஇந்திய மக்களுக்கு நம்பிக்கை தருவது.
 
அடுத்ததாக ஷேர் மார்க்கெட்டில் விளையாடுவது. விளையாட்டை தயாநிதி பார்த்துக்கொள்வது. அதனால் தான் அவர் ரெய்டு நேரத்தில் வீட்டில் இல்லை. இந்த விளையாட்டு மிகவும் ஆபத்தானது. சறுக்கினால் சாம்ராஜ்யம் சரிந்துவிடும். 

சன் நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளில் 70 சதவிதம் பங்கு அதன் உரிமையாளரான கலாநிதி அவரது மனைவி காவேரி ஆகியோரின் பெயர்களிலேயே உள்ளன. மற்ற 30 சதவித பங்குகள் பொதுமக்களிடம் உள்ளன. இந்த 30 சதவித பங்குகளில் தான் நண்பர்கள் மூலம் ஷேர் மார்க்கெட்டில் விளையாடியுள்ளார்கள். 

எப்படி?. 

பொதுமக்கள் ரெய்டு தகவல் கேள்விப்பட்டு தங்களிடம் உள்ள பங்குகளை விலையை குறைத்து விற்க அறிவிப்பு வெளியிட தொடங்கினர். 11 மணிக்கு சன் நிறுவனத்தின் ஷேர்கள் மதிப்பு கரடி வகையில் அதாவது இறங்கு முகத்தில் இருந்தது. அதனை மாறன்களால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் அந்த பங்குகளை வாங்க முடிவு செய்தனர். விற்பனையாளர்கள் குறிப்பிட்ட விலைக்கே உடனுக்குடன் வாங்க தொடங்கினர். பின் மெல்ல ஷேர் விலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி விற்க தொடங்க சன் நிறுவனத்தின் விலை குதிரை மதிப்பாக அதாவது நட்டத்திலிருந்து லாபத்தை நோக்கி போக தொடங்கியது.
 
அதேநேரம், வட இந்திய, ஆங்கில மீடியாக்களில் ரெய்டு பற்றிய தகவல் மெல்ல குறைய ஆரம்பித்ததும் வர்த்தகத்தில் இருந்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அவர்களும் ஷேர்களை வாங்க தொடங்கினர். எதிர்பார்த்ததை விட வேகமாகவே சரிவில் இருந்து மீண்டு குதிரை பாய்ச்சல் காட்டியதில் சந்தை மூடும்போது மார்க்கெட் திறந்து 260 ரூபாய் என இருந்த சன் ஷேர் மதிப்பு மூடும் போது 262 ரூபாயாக லாபத்தில் வந்து நின்றது.

இந்த தில்லாலங்கடி வேலையால் 20 ரூபாய் சரிவை ஈடுகட்டி 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. அன்று மட்டும் 22 ரூபாய் ஒரு பங்கின் விலையை  உயர்ந்தியுள்ளனர். இதே டெக்னிக்கை கலாநிதி தலைவராக உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்திலும் நடத்தியுள்ளனர். அன்றைய தினத்தில் மட்டும் சர்ச்சையில் சிக்காத பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தே இருந்துள்ளன.
 
இந்த பங்கு வர்த்தக தில்லாலங்கடியை செபி எப்படி கண்டுக்கொள்ளாமல் விட்டது என்பது மிகப்பெரிய ஆச்சர்யம். தங்களது சாம்ராஜ்யம் சரியாமல் சேதாரத்தோடு நிறுத்திக்கொண்டுள்ளனர் மாறன் பிரதர்ஸ்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...