Thursday, October 20, 2011

சுப்ரமணியம் சுவாமியிடம் மாட்டிக் கொண்டாரா தி.மு.க. ‘பிரமுகர்’?

டில்லி பத்திரிகையாளர்களிடையே நேற்றில் இருந்து சுப்ரமணியம் சுவாமி பற்றிய ஒரு பேச்சு பரவலாக அடிபட்டுக் கொண்டு இருக்கிறது. “சுவாமி அடுத்ததாக தி.மு.க. ‘பிரமுகர்’ ஒருவரைக் குறிவைத்திருப்பதாக கூறுகிறார். அந்த நபரைப் பற்றிய ஒரு ஆவணம் தனது கையில் கிடைத்திருக்கிறது என்றும் சொல்கிறார் அவர்” என்பதே அந்தப் பேச்சு.
இப்போதெல்லாம், நடப்பு அரசியலை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் நபரே சுப்ரமணியம் சுவாமிதான். இவர் எந்த நேரத்தில் எந்த ஆவணத்தைத் தூக்கிப் போடுவார் என்று தெரியாமல் பல அரசியல்வாதிகள் திணறிக்கொண்டு இருக்கின்றனர். கடந்த இரு வாரங்களாக முழுவதும் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தவரும் இவர்தான்.
சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த நிதியமைச்சக நோட், மத்திய அரசிலேயே புயலைக் கிளப்பி, இப்போது சற்று ஓய்ந்த நிலையில் உள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கு, மத்திய அரசை இன்னமும் சங்கடத்தில்தான் வைத்திருக்கின்றது.
இப்படியான நிலையில்தான், சுவாமியிடம் வேறு ஒரு பைல் சிக்கியுள்ளது என்ற பரபரப்பு டில்லியில் அடிபட்டுக்கொண்டு இருக்கின்றது. அது தி.மு.க. பிரமுகர் ஒருவரைப் பற்றியது என்று கூறப்படுவதால், தயாநிதி மாறன் பற்றியதா அல்லது கருணாநிதியே அதில் சிக்கிக்கொள்ளப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு டில்லி வட்டாரங்களில் உள்ளது.
“சுவாமி சர்ச்சைக்குரிய பைல்களைத் தேடிப் போவதில்லை. பைல்களே சுவாமியைத் தேடி வருகின்றன” என்று டில்லி அரசியல் வட்டாரங்களில் சொல்வார்கள். அது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால், இவர் தி.மு.க. பிரமுகர் பற்றி ஏதோ கிளறுகிறார் என்ற கதை அடிபடும் நேரத்தில், தி.மு.க. தலைமையே டில்லியில் ‘எதையோ’ தேடிப் போகப் போகின்றது என்று மற்றொரு தகவலும் உண்டு.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நாளை (சனிக்கிழமை) டில்லி செல்லப் போகின்றார் என்று சொல்கிறார்கள். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...