Tuesday, October 11, 2011

நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகளா?

சட்டப்பேரவையில் நடந்த பொதுத் துறை ,ஓய்வுதியம்,பணியாளர்கள் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை,திட்டம், ஆகியவற்றின் மானியக் கோரிக்கை விவாதத்தில்,முதல்வர் சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்களுக்கு தொகுதிப்படி,ஓய்வுதியம் போன்றவற்றை அதிகரித்து உள்ளார். வாயெல்லாம் பல்லாக,உறுப்பினர்கள் வாழ்த்தி வரவேற்று மகிழ்து உள்ளனர் . பாவம் ஏழைகளுக்கு இதுவாவது கிடைத்து இருக்கிறதே என நாமும் சந்தோஷப்பட வேண்டியதுதான்! ஏன் எனில்  நம்ம சட்டமன்ற உருப்பினர்களைப்போல்  வேறு யாரும் கஷ்டபடுபவர்கள் வேறு யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்பதால்!   அவர்கள் படும்  கஷ்டங்களை கேட்டால் நமக்கு மட்டுமல்ல, எல்லோருமே கண்ணீர் விடவேண்டியது இருக்கும் 
.                                                                                                  

கட்சியில மெம்பராகி,தலைவர்கள் சொல்லும் கட்சிப்பணியை மட்டும் பார்க்காமல்,தலைவர்களோட தனிப்பட்ட தேவைகளும் கவனிக்கணும்.அறிவிக்கும் எல்லா போராட்டங்களிலும் கலந்துக்கணும்.பொதுக்கூட்டம் மாநாடுன்னு எங்கே நடந்தாலும் ஆளுங்களை கூட்டிட்டு போகணும். அவங்களுக்கு சாப்பாடு முதற்கொண்டு, சம்பளம்,கொட்டர்,பிரியாணி எல்லாம் வாங்கித்தந்து பவரை கட்டி, கட்சியிலே  போஸ்டிங் வாங்கணும். எப்பவும் நம்மை சுத்தி பத்து பேராவது  இருக்குற மாதிரி பார்த்துக்கணும். நம்மைப்போலவே கட்சிப்பணி பார்குறவங்களை பத்திஅப்போ நேரில்போய் அண்ணே நீங்க இல்லாட்டி, நானில்லை! உங்க தெறமை யாருக்கு வரும் என்பதுபோல பாராட்டி தொலைக்கணும்.அவங்களுக்கு தெரியாம, தலைமைக்கு போட்டுக்கொடுத்து,தலைமையிடம் நல்லபேரு வாங்கணும்! 

 தலைவர்களை அவ்வப்போது,தனியாகவும் கூட்டமாகவும் போய்பார்த்து,அவங்க மனசிலும்,அவங்களுக்கு பிடிச்சவங்க மனசிலையும் இடம் பிடிக்கணும்.                தெர்தல்நிதியா? பொதுக்கூட்ட செலவா?  பொதுமக்களை,வியாபாரிகளை மிரட்டி வசூல் பண்ணி தரணும்! போலீஸ், ரவுடிகளை சரிகட்டி கட்ட பஞ்சாயத்தும் செய்யணும். அப்படியும் வழக்கு போட்டுட்டா,அதையும் சமாளிக்கணும்!  

                         

 இப்படி,லோல்பட்டு,கஷ்ட்டப்பட்டு போராடி தெர்தல்வந்தால் சீட்கேட்டு போய்,தலைவரை பார்த்தால், எவ்வளவு காசு வச்சியிருப்பே? எனக்கு எவ்வளவு,கட்சிக்கு எவ்வளவு கொடுப்பே? எவ்வளவு செலவு செய்வே? என்று  கேட்டால்...கொட்டிக் கொடுக்கணும் செஅட் வாங்கணும், ஒருவழியா அதையும் சமாளிச்சி சீட்வாங்கிட்டு வந்துட்டால், கட்சியிலே இருக்குற கோஷ்டிகளை எல்லாம் தாஜா பண்ணனும், அவங்களுக்கு தகுந்தமாதிரி,பேசி செட்டில் செய்யணும்! நாமினேசன் தாக்கல் பண்ணிட்டு, கூழை கும்பிட்டு போட்டுக்கிட்டு, தெருதெருவா,ஊருஊரா நாயிமதிரி தேர்தல்முடியறவரைக்கும் சுத்தணும். சும்மா சுத்திட்டா நம்ம ஜனங்கள் வோட்டு போட்டுடுவாங்களா? கட்சிக் காரங்கதான் வோட்டு கேட்டு நம் பின்னாடி வருவாங்களா?  நோட்டை இரைக்கணும்!  அப்பவும் தேர்தல் நடக்குற நாளிலும் வோட்டு எண்ணுற நாளிலும்! இப்படி செய்து,  ஜெயித்துதாங்க நாங்க சட்டமன்றத்துக்கு போக முடியுது.  

                                                                                                                                                                                                        தொகுதிப்பக்கம் கூட எட்டிப்பார்க்காத  என்போன்றவர்களுக்கு தொகுதிநிதி தராங்க ,சம்பளம் தராங்க, பென்ஷன் தாரங்க..  என்று நீங்கள் கேட்பது சரியா? மககளுக்கு சேவை செய்யறதுக்கோ, நாங்க ஏழை என்பதற்கோ இதுவெல்லாம் தருவதாக சொல்லப்பட்டாலும், எங்க கடந்த கால கஷ்டத்தை பார்த்து, தருவதாக எண்ணி ஆறுதல் அடைவதை விட்டுவிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகளா,அவர்களுக்கு தொகுதிநிதியை ஐயாயிரத்தில் இருந்து பத்தாயிரமாக,அதிகரித்து கொடுப்பது நியாயமா? என்று கேட்பதும்,வேதனைபடுவதும் வேண்டாதசெயல் என்பதோடு, எங்களை மட்டுமின்றி, ஜனநாயகத்தையும் கொச்சை படுத்துவதாகும்!   இப்படிக்கு, சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து பரிதாபம் கொள்ளும் ஜனநாயகத்தின் பிரஜை!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...