Friday, October 7, 2011

கருணாநிதி திடீரென அடித்தது ஸ்டண்டா? ஸ்பெகுலேஷனா?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மூவர் பற்றி திடீர் அறிக்கை ஒன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் இருந்து வெளியாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. “மற்றைய அரசியல் கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்களில் பிசியாக இருக்க, திடீரென இதுபற்றி ஏன் அவர் பேசத் தொடங்குகிறார்?” என்ற கேள்வியே சந்தேகத்துக்கு காரணம்.
முன்னாள் முதல்வரைப் பொறுத்தவரை, தேர்தல் சமயத்தில் அதற்கு உபயோகமாகும் விஷயங்களைத் தவிர வேறு விஷயங்கள் பற்றிப் பேசுவது வழக்கமில்லை.
கருணாநிதியின் அறிக்கை என்ன சொல்கிறது? “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டுகளுக்கும் மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை  விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும். அதற்காக தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநனருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அனைவரும் கேட்டுக்கொண்டு பல நாட்களாகியும், தமிழக அரசு அதைச் செய்வதாகத் தெரியவில்லை.
தமிழக அரசு அதைச் செய்ய முன்வராத நிலையில், மத்திய அரசாவது இவர்கள் மூவரையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு உதவிட வேண்டும் என்று பிரதமரையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவி சோனியாவையும் தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை எழுப்பியுள்ள 4 கேள்விகள்:
1- தி.மு.க.வின் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில், இந்த மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தி.மு.க. முன்னிலைப் படுத்தப் போகின்றதா?
2- தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநனருக்கு அனுப்பவில்லை என்பதை தனது பிரச்சாரத்தில் ஹைலைட்டாக காட்ட விரும்புகிறாரா?
3- தமது முன்னாள் கூட்டாளியான காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் சமயத்தில் மறைமுகமாக நெருக்கடி கொடுக்க நினைக்கிறாரா?
4- அல்லது ஒருவேளை, இம் முவரின் தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாக ‘காற்றுவாக்கில்’ தகவல் கிடைத்திருக்கிறதா?
மேலேயுள்ள 4 கேள்விகளில் முதல் 3 கேள்விகளில் ஏதாவதுதான் காரணமாக இருந்தால், அது தேர்தல் ஸ்டண்ட். 4வது கேள்விதான் காரணமாக இருந்தால், “பார்த்தீர்களா, தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. நான் கோரிக்கை விடுத்து டில்லியை சம்மதிக்க வைத்துவிட்டேன்” என்று சொல்லிக் கொள்ளலாம்.
பைனான்சியல் வட்டாரங்களில் இதைத்தான், ஸ்பெகுலேஷன் என்று சொல்வார்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...