Tuesday, October 11, 2011

தமிழக உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.வெற்றிபெறுமா?

உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டி  இட விரும்புவோர்களிடம்,மனுக்களை பெற்று வருகின்றன,இன்று எல்லகட்சிகளும்.கடந்த முறை  உற்சாகத்துடன் களம் கண்ட தி.மு.க.வும் மனுக்களை பெருகிறது. ஆனால், முன்பு இருந்த உற்சாகம் தி.மு.க தொண்டர்களிடம் இல்லை என்கிறார்கள். காரணம் ஆட்சி இல்லை. பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் யார்யார் உள்ளே இருப்பார்கள்,யாரெல்லாம் வெளியே இருப்பார்கள் என்று சொல்லமுடியாத அவலம் தி.மு.கவுக்கும்,அதன் தொண்டர்களுக்கும் உள்ளது. செப்டம்பர் 15 - தேதியை முப்பெரும் விழாவாக தவறாமல் கொண்டாடிவந்த கட்சியான தி.மு.கவுக்கு இந்த ஆண்டு அதனைக்கூட உரியகாலத்தில் கொண்டாட முடியாத நிலை ஏற்ப்பட்டு உள்ளது,அக்கட்சியின் துரதிஸ்டம் எனலாம். 
                                                                                                                                                                           சட்டமன்ற  தேர்தலில் தோல்வியை சந்தித்த திமுக எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது வெற்றிபெறுமா? அல்லது முந்தைய தேர்தலைப்போலவே தொல்வியடைய்மா? என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக பேசப்படுகிறது!  ஆள்பலம்,அதிகாரபலம்,பணபலத்துடன் கடந்த தேர்தல்களை சந்தித்தது போல இம்முறை திமுகவால் முடியாது என்பது நிதர்சனமாகும்!  பணபலத்தை வைத்து ஜனநாயகத்தை கைக்கொண்ட முந்தைய தேர்தல்களில் கூட திமுகவின் வெற்றியென்பது,நூலிழை வெற்றி ஆகவே இருந்துள்ளது. இப்போது,அதிகாரமும் இல்லை.ஆள்பலமும் இல்லை. தவிர ஆட்சியில் இருக்கும் அண்ணா திமுக மீது பெரிதாக மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் தெரியவில்லை. போதாகுறைக்கு இலவச திட்டங்களை இந்த ஆட்சியையும் செய்துவருகிறது.    
                                                                                                                                                                                                                               சட்டமன்ற தேர்தலில் திமுக  தோல்வியடைந்ததற்கு  சொல்லப்பட்ட காரணங்களில்,  ஒன்று தி மு கவின் கீழ்மட்ட நிர்வாகிகள் கூட ஊழலில் திளைத்தும்,பொதுமக்களிடம் வெறுப்பை சம்பாதித்ததும் ஆகும்.  உள்ளாட்சித் தேர்தலில் இவர்களே போட்டியிடுவார்கள்,கட்சியும் இவர்களுக்குத்தான் வாய்ப்பளிக்கும்
.
                            இவர்கள் மீதுள்ள வெறுப்பு உணர்வு மாறாமல் இருப்பதும், வெற்றிபெற்றாலும்  உள்ளாட்சியில் பெரிதாக எதுவும் செய்ய முடியாது  என்பதாலும் திமுக உள்ளாட்சித் தேர்தலிலும்  தோல்வியையே சந்திக்கும்! எனத் தெரிகிறது. கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி,விடுதலை சிறுத்தைகள் விலகி சென்றுள்ளதையும் பார்க்கும் பொது அப்படித்தானே எண்ண வேண்டியுள்ளது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...