Monday, October 31, 2011

கலைஞரின் ஏமாற்றும் வாக்குறுதிகள்

கடந்த முறை இலவச கலர் டிவி வழங்கப்பட்டதைப் போல, இம்முறை தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். 

தாய்மார்கள் தங்கள் விருப்பம் போல் கிரைண்டரையோ அல்லது மிக்ஸியையோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில் சனிக்கிழமைதி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதி வெளியிட்டு அதனை வாசித்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

* கல்வியை மாநில அரசின் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்துவோம்.

* கிராமத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடத்த அனுமதியோம்.

* மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு கிடைத்து வருகின்ற வரி வருவாய் நியாயமான முறையில் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* செம்மொழியாயான தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை.

* மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துவோம்.

* திருக்குறளை தேசிய நூலாக்க பாடுபடுவோம்.

* ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் ஆட்சியில் பங்கு கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தக் கூறுவோம்.

* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்.

* விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு செல்லாத வகையில் பாதுகாப்போம்.

* நகர்புறங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும்.

* படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

* வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களை குறிப்பிட்ட காலங்களுக்கு பொருளாதார ஏற்றம் பெற நடவடிக்கை.

* அரசு கல்லூரிகளில் படிக்கும் பி.சி., எம்.பி.சி. எஸ்.சி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

* மகளிர் சுய உதவி கடன் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இதில், ரூ.2 லட்சம் மானியம்.

* மீனவர் நலனுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும்.

* தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை காண மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

* திருச்சி, மதுரையில் மன நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* மதுரையில் காசநோய் மருத்துவமனை.

* மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.

* எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள்.

* நடக்க முடியாத முதிய நோயாளிக்கு வீட்டிலேயே மருத்துவர் மூலம் சிகிச்சை பெற சிறப்பு நடவடிக்கை.

* தரமான இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்கும் வகையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

* அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று சீறுடை.

* அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை அறிமுகம் செய்து, கல்வித் தரத்தை உயர்த்துவோம்.

* தமிழகத்தில் பல்கலைக்கழகமே இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை எட்டுவோம்.

* தமிழகத்தில் வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தர ஏற்பாடு.

* சேது கால்வாய் திட்டத்தை முடிக்க தொடர்ந்து பாடுபடுவோம்.

* முல்லைப் பெரியாறு, காவிரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு கண்டு தமிழக உரிமைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம்.

* மாநகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோவை, மதுரை நகரில் புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை.

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்போம்.

* மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அரசு உள்ளூர் பேருந்தில் கட்டணமில்லா பயணம்.

* முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிக்கு மாத உதவித் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்படும்.

* தலித் கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர் பிரிவில் இடம்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* சிறுபான்மையினருக்கு சிறப்புக் கல்வித் திட்டம்.

* திருநங்கைகள் சுய உதவிக் குழு அமைக்கப்படும்.

* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி வர்த்தகர்கள் ஈடுபட அனுமதி இல்லை.

* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் இனி ரூ.1 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்.

* கலைஞர் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி.

* புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.

* பரம ஏழைகளுக்கு ரூ.1 அரிசி இனி இலவசமாக வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம் தொடரும்.

* தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மாதிரி நீங்க என்ன தான் வாக்குறுதி கொடுத்தாலும் அதுக்காக நீங்க வெளில தான் கடன் வாங்குவீங்க. ஏற்கனவே ஒரு லட்சம் கோடிக்கு மேல கடன் நம்ம மாநிலத்துக்கு இருக்கு. அதா பத்தி நீங்க கவலைபடலேனாலும் நாங்க படனும்ல. எங்களுக்கு உண்மையாவே சுயமரியாதை இருக்கு. இந்த சலுகையெல்லாம் நாங்க உழைச்சி சொந்தமா வாங்கிகுறோம். அதுலேயும் நீங்க கமிஷன் அடிச்சி சம்பாதிப்பீங்க. தி.மு.க.வினர் வெற்றி பெற்ற இடங்களில் அ.தி.மு.க.வினர் வென்றதாக அறிவிப்பு;
கருணாநிதி அறிக்கைஅதுனால நாங்களே எங்கள பாத்துக்குறோம் நீங்க வீட்டுக்கு போங்க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...