ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் திமுக அஞ்சாது. எங்கள் மீது எத்தனை பொய் புகார்கள் கொடுத்தாலும் திமுக அதை சட்டப்படி சந்திக்கும் என்றெல்லாம் பிலீம் காட்டிய கருணாநிதியின், திமுக எம்.பி.க்கள், கட்சிகாரர்கள் இன்று ஜனாதிபதியிடம் சென்று அழுது இருக்கின்றார்களாம்.
அதாவது ஜெயா அரசினால் எங்கள் கட்சிக்கே ஆபத்து வந்து விடும், ஆகையால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று புலம்பி விட்டு வந்திருக்கின்றார்கள். எதையும் சட்டப்படி சந்திக்க தயார் என்று சொன்னாரே ஒருவர். அது, என்னாயிற்று?
திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்படுவதால் பயந்து நடுங்கும் தலைமை எங்கே நாளை நமது வீட்டிற்கே வந்து ஸ்டாலின், அழகிரியையும் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சமே இந்த ஜனாதிபதி சந்திப்பிற்கு காரணம்.
தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தற்போது சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஈழத் தமிழர்களும், நம் தமிழக மீனவர்களும் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டு கொல்லப்பட்ட போது எங்கே சென்றார்கள் இந்த ஈனத் தமிழர்கள் (திமுக எம்.பி.க்கள்), அன்றும் இதை போன்றே ஜனாதிபதியிடம் காத்திருந்து மனு கொடுத்திருந்தால் அவர்களுக்கு நாம் கோயில் கட்டி கும்பிட்டிருக்கலாம். ஆனால் தற்போது தனது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்போதும், தொடர் கைது நடவடிக்கைகளிலும் நொந்து போய் நிர்கதியாய் நிற்கின்றது திமுக.
ஜெயா அரசு தனது கட்சிக்காரர்களை கைது செய்யும் போது கூட கவலைப்படாத கருணாநிதி தற்போது தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி சிக்குவாரோ என்ற அச்சத்திலும், அழகிரி மகன் ஒலிம்பஸ் கிரானைட் வழக்கிலும் கைது செய்யப்படுவாரோ என்ற அச்சமே இன்று ஜனாதிபதி மாளிகை வரை நடக்க வைத்திருக்கின்றது.
ஜெயா அரசு தனது மகனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கைகளை கண்டு ஆத்திரப்படும் கருணாநிதி அன்று கூடவே இருந்து கழுத்தறுத்த காங்கிரஸ், தனது துணைவியாரின் மகளை கைது செய்த போது மௌனம் சாதித்ததன் பின்னணி என்ன?
அப்போது கூட என் மகளை கைது செய்ததற்கு உங்களை பலி வாங்காமல் விட மாட்டேன் என்று கொடுத்துகொண்டிருக்கும் ஆதரவை திரும்ப பெற்று இருக்கலாம். ஆனால் முடியாது? ஏனெனில் ஆதரவை திரும்ப பெற்றவுடனேயே அழகிரியின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களே என்ற அச்சமே...
அதுமட்டுமில்லாமல் மத்தியில் இப்போது இவர்கள் ஆதரவு பெற்ற கட்சிதான் ஆட்சி புரிகின்றது. ஆனால் பிரதமரை, சோனியாவை பார்க்காமல், அங்கே சென்று புகார் அளிக்காமல் இந்திய குடியரசுத் தலைவரை சந்திக்க காரணம் என்ன? 356 ஐ பயன்படுத்தலாம் என்ற எண்ணமா?
ஒருவேளை கனிமொழியை விட அதிகப்படியான ஊழலை அழகிரி மகன் செய்து விட்டாரோ என்று நினைக்கத் தூண்டுகின்றது... ஊழலில் அதிகம் சாதித்தது துணைவியாரின் மகளா? அல்லது சொந்த மனைவியின் பேரனா? என்று விரைவில் பட்டிமன்றம் நடத்தி கூட பார்த்து விடலாம்.
ஒலிம்பஸ் கிரானைட்சுக்கு உரிமம் வழங்கிய போது 10 சதவிகிதம் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அங்கீகாரம் கொடுக்கப்பட்டும் அது 100 சதவிகிதம் வரை சுரண்ட பட்டிருப்பதாக தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்திருக்கின்றார். இதையே ஒரு சாதாரண குடிமகன் செய்தால் இதுவரை விட்டு வைத்திருப்பார்களா? அவன் மீது குண்டர், தடா, கடா, பீடா என்று வழக்குகள் போட்டு குவித்திருப்பார்களே.
உண்மைகளை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்து அழகிரி சபதம் போட்டு விட்டார்...தன மீதோ அல்லது தன மகன் மீதோ குற்றம் நிருபிக்கா விட்டால் ராஜினாமா செய்யத் தயாரா? என்று அனல் பறக்கும் வசனங்கள், பேட்டிகள் கொடுத்தார்..இதற்க்கு என்ன சொல்ல போகின்றார்கள். இதை எல்லாம் மனதில் கொண்டே இந்த அவசர ஜனாதிபதி சந்திப்பாக இருக்கும் என்று பொது மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
ஆனால் அது மட்டும் போதாது, எந்த பாவமும் அறியாத வினோத், கோபி மற்றும் பாண்டியனை உயிரோடு எரித்து கொன்ற வழக்கினையும், நெல்லை சப் -இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் வெட்டி கொன்ற வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகின்றோம்.
கருணாநிதியின் கடந்த கால ஆட்சியில் இலவசமாக இரண்டு ஏக்கர் நிலம் என்று அறிவித்தார்கள். ஆனால் அது ஏழை பொது மக்களுக்கு அல்ல, கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு என்று இப்போதுதான் புரிகின்றது. அது மட்டுமல்ல நேற்று முன்தினம் கே.என். நேருவின் தம்பி கொச்சிக்கு தப்பி செல்ல முயன்று இருக்கின்றார்...அப்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டு உள்ளார். அவர் தவறே செய்ய வில்லை என்றால் சட்ட ரீதியாக சந்தித்து இருக்கலாமே...ஏன் தலைமறைவாக செல்ல வேண்டும் என்றும் மக்கள் கேள்விகள் கேட்கின்றார்கள்.
மின்வெட்டு என்பது சமீபத்தில் சற்று குறைந்திருக்கின்றது. இப்போது அம்மா எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகளை ஏன் கருணாநிதி எடுக்க வில்லை. தமிழ்நாடே இருளில் மூழ்கிய காலங்கள் பல இருக்கின்றது. தமிழ் நாட்டை இருளில் மூழ்கச் செய்து விட்டு இவர்கள் நில அபகரிப்பு மற்றும் கொள்ளைகளிலும் ஈடுபட்டு இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் இப்போதைய நிலவரம்.
உடனே சில பதிவர்கள் இந்த அம்மா மட்டும் ஒழுங்கா? சொத்து குவிப்பு வழக்கில் இன்னமும் வாய்தா வாங்க நினைக்கின்றதே என்றும் கேட்டிருக்கின்றார்கள். நியாயம்தான்...ஆனால் பொது மக்கள் இப்போது விழித்து கொண்டு விட்டார்கள். அவருக்கும் விரைவில் இதே நிலை ஏற்பட வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது. பார்க்கலாம். ஆனால் தற்போது ஒட்டுமொத்த தமிழகமும் காணாமல் போய் விடுமோ என்ற பயம் இருக்கின்றது. அந்த அளவிற்கு நிலப்பறிப்பு சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றதே...இதற்காகவாவது இந்த கடுமையான நடவடிக்கைகள் தேவை.
உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை வரவேற்கின்றேன்...நன்றி.

No comments:
Post a Comment