Sunday, October 9, 2011

ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய “ ஜரூர்’ திட்டம்

நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மேலும் ஒரு தி.மு.க.,வின் மாஜி மத்திய அமைச்சர் தயாநிதி, சன் டி.வி., கலாநிதி (கருணாநிதி பேரன்கள்) மீது சி.பி.ஐ., முதல் தகவல்

 அறிக்கையை ( எப்.ஐ.ஆர்., ) பதிவு செய்தது. இதனையடுத்து சென்னை, டில்லி, ஐதராபாத் பகுதியில் உள்ள இவர்களது வீடுகள், சன் டி.வி., அலுவலகங்களில் இன்று ( திங்கட்கிழ‌மை) காலை சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொலை தொடர்பு துறையில் ராஜாவுக்கு முன்பாக அமைச்சராக இருந்து அவரை ஜெயிலுக்கு தள்ளி விட்டு அவர் பிந்தி செல்லவிருக்கிறார் என்பதுதான் கூடுதல் விஷயம். எப்.ஐ.ஆர். அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரிக்கவும் சி.பி.ஐ., முடிவு செய்திருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ.,தயாநிதி விவகாரம் தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கையை விவர அறிக்கையாக தாக்கல் செய்தது. சீல் இட்ட கவரை நீதிபதிகள் ஜி.எஸ்.,சிங்வி மற்றும் ஏ.கே.,கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு தெரிவித்தபோது தயாநிதி மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. எனவே இன்னும் ஒரிரு நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார். இதனையடுத்து சி.பி.ஐ., இன்று எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளது.


ஊழலுக்கு வித்திட அமைச்சர் குழு பரிந்துரையை நிராகரித்தார் : தி.மு.க., கூட்டணியுடன் மத்திய அமைச்சரவை அமைந்ததும் எனக்கு தொலை தொடர்பு துறை தான் வேண்டும் என அடம் பிடித்து பெற்றுக்கொண்டார். மே மாதம் 23 ம் தேதி 2004 முதல் மே மாதம் 15 ம் தேதி 2007 வரை இத்துறைக்கான அமைச்சர் பதவியில் இருந்த போது ஸ்பெக்ட்ரம் அலை வரிசை தனியாருக்கு விற்க பாதுகாப்பு துறை ஒப்புதல் கொடுத்தது. அந்நேரத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான விலையை நிர்ணயிப்பதில் அமைச்சரவை குழுவை பிரதமர் 2006 ஜனவரி மாதம் அமைச்சர் குழு பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கினார் . ஆனால் இதற்கு பொறுக்காத தயாநிதி பிரதமரை, சந்தித்து ( பிப். 1ல் ) பேசினார். பொறுமினார். இதனையடுத்து அவர் பிரதமருக்கு 2006 பிப்., 28 ம் தேதி கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பினார். இதில் தொலை தொடர்பு துறையில் அமைச்சக குழு தலையிடுவதை நான் விரும்பவில்லை. இது எனது துறையில் தலையிடாக இருக்கும் இதனால் நான் சுதந்திரமாக செயல்பட முடியாது என்று கூறி முடித்து கொண்டார். இதனையடுத்து முந்தி வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்டரத்தை விற்க துவங்கினார்.


என்ன குற்றம்தான் செய்தார் தயாநிதி ? : தயாநிதி தனது காலக்கட்டத்தில் ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து இந்த தொழிலில் நிற்க முடியமால் கம்பெனியை விற்றார்.


இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலான விவர அறிக்கையில் சி.பி.ஐ., கூறியிருந்ததாவது:


கடந்த 2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அப்போது, ஏர்செல் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது. ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும்உரிமம் கேட்டு விண்ணப்பித்தன. உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளைவிற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அந்த நெருக்கடியின் விளைவாக, ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், ( 2006, மார்ச் மாதத்திற்கு பின்) ஏர்செல் நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின. இவ்வாறு கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சன் குழுமத்தில் 600 கோடி முதலீடு: ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் , ஸ்பெக்ட்ரம் கைமாறியதும், மேக்சிஸ்ஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் 600 கோடியை முதலீடு செய்தது. இந்த முதலீடு என்ன காரணத்தினால் எந்த ரூபத்தில் நடந்தது என்பது தற்போதைய கேள்வி. இதனையடுத்து சி.பி.ஐ,., தொடர்ந்து பல மாதங்களாக தயாநிதி தொடர்பான விவரத்தை சேகரித்து வந்தது. அவருக்கு நெருங்கிய தொலை தொடர்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களும் தயாநிதி காலம் தாழ்த்திய விஷயத்தை ஒத்துக்கொண்டனர். இந்த அடிப்படையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


பதவியை இழந்த தயாநிதி : தி.மு.க.,வில் டில்லி அரசியல் என்றால் தயாநிதிதான் எதற்கெடுத்தாலும் முன் நிறுத்தப்பட்டு வந்தார். கட்சி தலைவர் கருணாநிதியின் கோபத்திற்கு ஆளானதை அடுத்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் ஜவுளித்துறையை தயாநிதி பெற்றார். இதனால் தொலை தொடர்பு துறை ராஜாவுக்கு போனது.


ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாநிதி மீதான குற்றத்திற்கு ஆதாரம் இருப்பதாக சி.பி.ஐ., தெரிவித்ததையடுத்து எதிர்கட்சிகள் இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தின. பார்லி., கூட்டம் முடங்கியது. இதனையடுத்து வேறு வழி இல்லாமல் கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக மத்திய அமைச்சர் பதவியை இழந்த 2 வது நபர் என்ற இடத்தை பிடித்தார் தயாநிதி. அமைச்சர் பதவியை இழந்ததுடன் முடிந்து விடக்கூடாது, தொடர் குற்ற நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என எதிர்கட்சிகள் மற்றும் ஊழல் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி வந்தனர். சிலர் சி.பி.ஐ.,விசாரணை மீது சந்தேக பார்வை வைத்தனர். ஆனால் காலம் கடந்தாலும் தயாநிதியை தப்பிக்க விடாமல் பெரும் ஆதார திரட்டுடன் எப்.ஐ.ஆர்., பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ.,


4 மாதங்களுக்கு மேல் சிறையில் கனிமொழி : தயாநிதி தனது அமைச்சர் பதவியை இழந்த பின்னர் தி.மு.க.,வில் அடுத்து யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கட்சி வட்டாரத்தில் கடும் எதிர்பார்ப்பு இருந்தாலும், தலைவர் கருணாநிதியோ யாருக்கும் அமைச்சர் பொறுப்பு வாங்கிட இஷ்டம் இல்லாமல் இருந்தார். மேலும் கனிமொழியை வழக்கில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு எவ்விதை உதவியும் செய்யாததால் காங்,.மீது அதிருப்தியில் இருந்த தி.மு.க., இதனையடுத்து தி.மு.க., தரப்பில் யாரும் அமைச்சராக பொறுப்பேற்கவில்லை. ஸ்பெக்ட்ரமில் ஆதாயம் பெற்ற ஸ்வான் கம்பெனி, கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி வழங்கியது என்ற ஆதாரத்தின்படி கருணாநிதி மகள் கனிமொழி கடந்த மே மாதம் 20 ம் தேதி கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 4 மாதங்களுக்கு மேலாக திகார் சிறையில் <உள்ளார். தயாநிதி மற்றும் கலாநிதி விரைவில் கைது செய்யப்படுவர் என பேசப்படுகிறது.


சொந்த உபயோகத்திற்கு 323 தொலைபேசி இணைப்புகள்: தயாநிதியின் வீட்டிற்கு, 323 தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக வழங்கியது தொடர்பான பைல்களை, தொலைத்தொடர்புத் துறை சமர்ப்பிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., உத்தரவிட்டிருந்தது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்த காலத்தில், சென்னையில் உள்ள அவரின் போட் ஹவுஸ் இல்லத்திற்கு, பி.எஸ். என்.எல்., பொது மேலாளர் பெயரில், 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டன.
சன் "டிவி' அலுவலகத்தில் இருந்து பூமிக்கு அடியில் தயாநிதியின் வீட்டிற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக கேபிள்கள் மூலம், இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன. இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம், கட்டணம் அதிகமான ஐ.என்.டி.என்., வசதிகளைக் கொண்டிருந்தன. அதன் மூலம் சன் "டிவி'க்குத் தேவையான தகவல்கள், செய்திகள் மற்றும் "டிவி' நிகழ்ச்சிகள், உலகம் முழுவதிலும் இருந்து வெகு விரைவாகப் பெறப்பட்டன . இந்த புகார் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.


புகார் குறித்து, ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன் விசாரணை நடத்திய சி.பி.ஐ., இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய தொலைத்தொடர்புத் துறையை கேட்டுக் கொண்டது. ஆனால், அந்தத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...