Tuesday, October 18, 2011

கனிமொழி அப்டேட்ஸ் மற்றும் இன்னபிற......!

கனிமொழி அப்டேட்ஸ்!
சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை வருகிற 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப் படுவது முடிந்த பிறகே இந்த மனுவை விசாரிக்க முடியும் என்று நீதிபதி திரு.சைனி தீர்ப்பளித்திருக்கிறார். தாத்தா கவலைப்பட்டது போல, பதினைந்து நிமிடங்கள் சிறைக்குள் இருந்தால் ஒரு பூ கூட வாடிவிடும் என்ற மாதிரியாக இல்லாமல், கனிமொழி நன்றாகத் தான்  இருக்கிறார் போல!

ஆக கனிமொழி சிறைவாசம் ஐந்துமாதங்களைத் தாண்டுகிறது! ஆ.ராசா எட்டு மாதங்களைத் தாண்டுகிறார்!
ன்னாச்சு மாறன் விவகாரம்?

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மிக சாமர்த்தியமாக காசு பார்க்கும் வித்தையாக்கிக் காட்டிய கேடி பிரதர்ஸில் இளையவர் வீட்டில் சிபிஐ  சோதனை நடத்தியதாக ஒரு கண்துடைப்பை நடத்தினார்கள். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார்கள்!அப்புறம் மறந்தே போய் விட்டார்களோ

கேடி பிரதர்ஸின் சாமர்த்தியத்தை, தாத்தாவோடு சேர்ந்து இந்த தேசமே ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறது! இந்த வாரம் பானாசீனாவுக்கு நீதிமன்றம் சூடு வைத்தால்,அதை முள்ளுமுனை நொறுங்காமல் அப்படியே கேடி பிரதர்சுக்கு   கைமாற்றிவிட காங்கிரஸ் ரெடி!

அதனால் தானோ என்னவோ, ஜூலை இறுதிக்குள் தாக்கல் செய்யப்படுவதாக சொல்லப்பட்ட மூன்றாவது குற்றப் பத்திரிகையை சிபிஐ, இன்னமும் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் போல!

ஆ.ராசா, பானா சீனாவையும், மன்மோகன் சிங்கையும் சாட்சிகளாகக் கூப்பிடுவது போல சந்திக்கு இழுத்து மிரட்டுகிறாரா? பதிலுக்கு நாங்களும் இன்னொரு குற்றச்சாட்டை, நம்பிக்கை மோசடி அது இது என்றெல்லாம் ஜாமீனில் விட முடியாத செக்ஷன்களாகப் போட்டு மிரட்டுவோமில்லையா?
வெட்டி உதார் தான் இது என்று இரண்டு தரப்புக்குமே தெரியும்! ஏமாற இளிச்சவாய் ஜனங்கள் இருக்கும்போது என்ன கவலை!

வாய்க் கொழுப்பு அரசியல்வாதிகளும்  உச்சநீதிமன்றம் சொல்லப் போவதும்...!


சுப்பிரமணியம் சுவாமி பானாசீனாவையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுமீது தீர்ப்பை உச்சநீதி மன்றம் என்றைக்கு வெளியிடப்போகிறது என்பது இன்னமும் தெரியவில்லை! அனேகமாக, இன்றைக்கு செவ்வாய்க் கிழமை வெளியாகலாம் என்று சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில் நேற்றைக்கு ஒரு குறிப்பைப் பகிர்ந்து கொண்டிருந்தார். 

ஆனால் இன்றைக்கும் தீர்ப்பு வராதாம்!

நீதிபதி லீவ் போட்டு, தீர்ப்பை எழுதிக் கொண்டிருப்பதாக சுவாமியின் இன்றைய ட்விட்டர்  செய்தி சொல்கிறது. பானா சீனாவுக்கு டென்ஷன் உச்ச கட்டத்துக்கு எகிறிக் கொண்டிருக்கிறதோ இல்லையோ, நம்மூர் நீதி மன்றங்களிலும் நீதி கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிற என்னைப் போன்றவர்களுக்கு டென்ஷன் எகிறிக் கொண்டிருக்கிறது!

மாயாவதியும்.... மீரா குமாரும்....!


டம்மிப்பீஸ் மன்மோகன் சிங் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்த ஆண்டு இறுதிக்குள் பதவி இறங்குவது தவிர்க்க முடியாதது போலத்தான் தெரிகிறது.
 
திண்ணை காலியானால், யார் உட்கார்ந்து கொள்வது என்ற போட்டியில் இருந்த பிரணாப் முகர்ஜியும், பானாசீனாவும் ஒருத்தரை ஒருத்தர் நாக் அவுட் செய்து கொண்டதில் சால்வை அழகர் இன்னமும் எழுந்திருக்கவே இல்லை! ஏற்கெனெவே, இந்திரா இறந்தவுடன், அந்த நாற்காலியில் தான் உட்கார வேண்டும் என்று ஆசைப்பட்ட பிரணாபுக்கும் அந்த யோகம் (வேறென்ன? காண்டி வாரிசுகளுக்கு டம்மி, பிராக்சியாக இருப்பதுதான்!) இருக்காது போலத்தான் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. 

ஐமு கூட்டணிக் குழப்பத்தின் டம்மிப்பீசாக, காண்டி குடும்பத்தின் பிராக்சியாக மன்மோகன் ஏழு வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடித்த மாதிரி வேறெவராலும் தாக்குப் பிடிக்க முடியாது என்று தான் தோன்றுகிறது!
 
''மன்மோகன் சிங் மீது மரியாதை வைத்துள்ள போதிலும், அவரது நிலைக்காகப் பரிதாபப்படுகிறேன்''  

என்று பாஜக தலைவர் எல்.கே. அத்வானி கூறி இருக்கிறார்! ஆனால், டம்மிப் பீசாக, காண்டி குடும்பத்தின் முகமூடியாக இருக்க சம்மதப்பட்டே மன்மோஹன் சிங் இத்தனை நாள் அந்த நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்பது இப்போது அம்பலமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த அனுதாபம், பரிதாபம் எதற்காக?
மன்மோகன் சிங் இத்தனை நாள் தன்னை எல்லோரும் ரொம்ப நல்லவன்னே நம்பிட்டாங்கப்பா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்!இப்படி ஒரு விசித்திரமான ஆசாமியை எந்த ஊர் அரசியலிலும் பார்த்திருக்கவே முடியாது என்று அடித்துச் சொல்லலாம்!
சர்ச்சைகளில் அதிகம் சிக்காத ஏ. கே அந்தோணி பெயர் முதலில் அடிபட்டது! ஆனால், மனிதர் ஒரு வாரமாவது தாக்குப் பிடிப்பாரா என்பது சந்தேகம் தான்! இந்த ரேசில் இதுவரை இல்லாத, நாடாளு மன்ற சபாநாயகர் மீரா குமாரின் பெயர் சமீப காலமாக அடிபடத் துவங்கி இருக்கிறது. மாயாவதி வேறு கொஞ்சம் விசிறி விட்டிருக்கிறார்!
அப்பா ஜகஜீவன் ராம், நாடாளுமன்றத்தில் ரொம்ப கூலாக வருமான வரியா? கட்ட மறந்தே போய்விட்டது என்று சொன்னவர்! மகள் டம்மிப் பீசாகத்தான் பிரதமராக உட்கார வேண்டி இருக்கும் என்பதை ஒருவேளை மறந்துபோய் விட்டாரானால்....!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...