Monday, March 28, 2016

பின்னணி பாடகி ஜானகி அம்மா

இன்று  ஒரு தகவல் - பின்னணி பாடகி ஜானகி அம்மா
நாற்பதுவருடங்களுக்கும் மேலாக பாடிவரும் எஸ்.ஜானகி பதினைந்து மொழிகளில் கிட்டத்தட்ட இருபதாயிரம் பாடல்களைப் பாடிய சாதனையாளர். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்கம், ஒரியா, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கொங்கணி, துளு, சௌராஷ்டிரா, படுக மொழிகளிலும் ஜெர்மன் மொழியிலும் ஜானகி பாடியிருக்கிறார். ஐந்துதலைமுறை நாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இதில் ஸ்ரீதேவிக்கு மட்டும் ஐந்துமொழிகளில் பின்னணிபாடியிருக்கிரார்.
ஜானகியின் பாடலின் சிறப்பம்சம் என்ன?
ஜானகி பாடுகையில் அந்தக் கதாநாயகியே அப்படத்து உணர்ச்சிகளுக்கு ஏற்ப இயல்பாகப் பாடுவதுபோல ஒலிக்கிறது அப்பாடல். அப்பாடலின் வரிகலிலும் இசையிலும் உள்ல உணர்ச்சிகள் எந்தவிதமான செயற்கையான நாடகத்தன்மையும் இல்லாமல் மிக இயல்பான அழுத்ததுடன் வெளிப்படுகின்றன. ஜானகி பாடி நம் நெஞ்சில் நிலைக்கும் ஏதாவது பாடலை  எடுத்து இந்தக் கோணத்தில் சிந்தனை செய்து பார்த்தால் இது புரியும்.

balamuralikrishna and raaja

balamuralikrishna and raaja

ilayaraja about Symphony - Idhayam Pogudhey

Paruruvaaya Video Song | Ver 2 | Thaarai Thappattai | Ilaiyaraaja | Bala...

Paruruvaaya Video Song | Ver 2 | Thaarai Thappattai | Ilaiyaraaja | Bala...

Hero Intro Theme Video Song | Thaarai Thappattai | Ilaiyaraaja | Bala | ...

Hero Intro Theme Video Song | Thaarai Thappattai | Ilaiyaraaja | Bala | ...

Paruruvaaya Song with Lyrics | Thaarai Thappattai | Ilaiyaraaja | Bala |...

Paruruvaaya Song with Lyrics | Thaarai Thappattai | Ilaiyaraaja | Bala |...

நலம் தரும் சிவப்பரிசி
சிவப்பரிசி ஓர் அற்புதமான அரிய உணவு.
இதன் மருத்துவ குணங்களைப் பற்றி கி.மு.400-லேயே நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது.
சீனாவில் 3 ஆயிரம் ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது.
ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது.
கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது.
ஆகவே, இதை, ‘காட்டு அரிசி‘ என்றும் சொல்வார்கள்.
அதனால் தான் சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.
நம் நாட்டில் கர்நாடகம், பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம்.
இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் ‘மட்டை அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பது தான் உண்மை.
இமாசல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது.
ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு.
வெளியே இருக்கும் உமி, உள்ளே இருக்கும் தவிடு, கரு, கடைசியாக உள்ளே இருக்கும் மாவுப்பொருள்.
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன.
நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடுகிறோம்.
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் சிறப்பு மிக்கது.
இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதன் சக்தியை நாம் பெற முடியும்.
மேலும் வேறு எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி1, பி3, பி6 ஆகிய வைட்டமின்களும், இரும்புச் சத்து, ஜிங்க், மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும், மிகுதியான நார்ச்சத்தும் சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன.
இந்த அரிசியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால், இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது.
மேலும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன.
இவற்றைவிட, சிவப்பு அரிசியில் ‘மானோகோலின் கே’ என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது.
இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைக்க உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.
செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான், இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது.
அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.
‘சிவப்பு பூஞ்சண அரிசி’ என்று இதற்குப் பெயர்.
இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித அலர்ஜிகளுக்கு சிவப்பு அரிசி மிகவும் உகந்தது.

Ntamil.com's photo.
like emoticon
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.
இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.
குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.
காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா?
இல்லை,
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.
அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.
அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!
ஆச்சர்யம்தான்.
அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?
தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.
ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?
இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.
மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.
அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.
அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!
இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..
படித்ததும் பகிரவும். இது நமது கலாச்சார உண்மை.

Sunday, March 27, 2016

அன்பு எங்கோ

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.
தந்தை சொன்னார். " என் கையை கெட்டியமாக பிடித்துக்
கொள் மா ", ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது, பத்திரம் மா " என்று.
உடனே, மகள் சொன்னால் அப்பனா "நீங்க என் கைய புடிச்சிகங்க பா".
இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்றார் தந்தை?
நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால்
கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என்
கையை விடமாட்டீர்கள் அப்பா என்றால் மகள்.
உண்மையான அன்பு எங்கோ, அளவு கடந்த
நம்பிக்கையும் அங்கே..
பிடித்தால் ஷேர் செய்யுங்கள்.

அதிமுக விற்கு திமுக மாற்று இல்லை ! மறதி உள்ள பொதுமக்களிடம் இதை சேர்க்க வேண்டும்.

1) இருவருமே மதுபான தயாரிப்பாளர்கள்
2) இருவருமே கல்லூரி நடத்தி பணம் பாரப்பவர்கள்
3) இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்.
4) குடும்ப , நட்பு கூட்டத்திறகாக தமிழக நலனை விட்டு கொடுத்தவர்கள்
5) அராஜக ஆட்சி செய்தவர்கள்
6) ஊழல் செய்தவர்கள்
7) நல்லவரகளை அரசியல் , சமூக நல இயக்கங்களிலிருந்து ஓரம் கட்டியவர்கள்
8) நில அபகரிப்பு செய்தவர்கள்
9) பொதுமக்களை அச்சுறுத்தி அரசியல் செய்தவர்கள்
10) தலைமையே தமிழகம் என்று அவர்கள் துதிபாடி அடிமை அரசியல் செய்பவர்கள்
11) தமிழக வாழ்வாதார பிரச்சனைகள் எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் இல்லையென்றால் அமைதி காப்பவர்கள்
12) ஓட்டுக்கு காசு என்ற கேவல அரசியலை கொண்டு வந்தவர்கள்
13) இலவசங்கள் என்ற பெயரில் தமிழகத்தை பின்னோக்கி அழைத்து சென்றவர்கள்
14) சென்னை , கடலூர் , சிதம்பரம் , காஞ்சிபுரம் ,திருவள்ளூர் வெள்ளத்திறகு முழு காரணமான உட்கட்டமைப்பு இல்லாமைக்கு முழு பொறுப்பாளர்கள்
15) விவசாயம் முன்னேற ஏதும் செய்யாமல் நடுவில் உள்ள இடை தரகர்கள் லாபம் அடையும் வண்ணம் அரசியல் செய்தவர்கள்
16) ஒவ்வொரு ஆண்டும் தமிழக பங்கு மத்திய பங்கிலுருந்து குறைந்தாலும் அதைப்பற்றி பேசாமல் அமைதி காத்தவர்கள்.
17) இவருக்கு கும்பகோணம் மகாமகம் , வளர்ப்பு பிள்ளை திருமணம் என்றால் அவருக்கு என்னில் அடங்கா பாராட்டு விழாக்கள் ,தனக்கு தானே சூட்டிய பட்டங்கள் , செந்தமிழ் மாநாட்டையும் தன் குடும்ப மாநாடாக ஆக்கிய அவலங்கள்.
18) இருவருமே அரசு கல்லூரி ,கல்வி நிலையங்களை அழித்தவர்கள்
19) மக்களுக்கான அரசியல் செய்யாமல் மக்களை கேடயமாக வைத்து அரசியல் செய்பவர்கள்.
20) இவருக்கு விழுப்புரம் பஸ் எரிப்பு என்றால் அவருக்கு மதுரை தினகரன் ஆபிஸ் எரிப்பு
21) இவருக்கு சொத்து குவிப்பு வழக்கு என்றால் அவருக்கு 2 ஜி , பி ஸ் என் எல் என கணக்கில் அடங்கா ஊழல்
22) மின் உற்பத்தியில் ஊழல் , அரசு போஸ்டிங்கில் ஊழல் , அனைத்து அரசு துறைகளி்ல் ஊழல் , துணை வேந்தர் போன்ற மரியாதைக்குரிய பதவிகளில் ஊழல் என ஊழலை நம் வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கியவர்கள்
23) தொழிற்சாலைகளை காசு கரக்கும் பண நிலையங்களாக மாற்றி இன்று தொழில் முதலாளிகள் தமிழகத்தை விட்டு ஓடும் வண்ணம் அரசியல் செய்தவர்கள்
24) திறமையான அதிகாரிகளை பணி செய்யவிடாமல் அச்சுறுத்தி அரசியல் செய்பவர்கள்
25) தமிழக கணிம வளங்களை தனியாருக்கு
வாரி கொடுத்தவர்கள்
26) இவர்கள் வசம் உள்ள சொத்துகள் எல்லாம் யார் வீட்டு பணம் ? யார் சிந்திய வியர்வை ?
27) இவர்கள் பயணிக்க நம்மை ஒரு மணி நேரம் காக்க வைப்பவர்கள் யார் ?
28) இன்று இது என் பிரச்சனை என்று பொதுமக்களால் தைரியமாக பேச முடியாது போனதிற்கு காரணம் யார் ? அரசியலா வேண்டாம் நமக்கு ஏன் வம்பு என்று நம்மை பயப்பட வைத்தது யார் ?
29)கல்வியில் சிறந்த , உலக நாடுகள் எல்லாம் அழைத்து அரவணைக்கும் மக்களை கொண்ட தமிழகத்தை ஒரு தலைசிறந்த ஆராயச்சி சார்ந்த தொழில் துறை மாநிலம் ஆக்காமல் 5000-7000 என்று அன்றாடங்காயச்சிகளாக எங்கள் வீட்டு பிள்ளைகளை தினம் 12 மணி நேரம் உழைக்கும் வண்ணம் தொலை நோக்கில்லா அரசியல் செய்தது யார் ?
30) நம் அழிவிற்கு காரணம் யார் ? பத்திரிக்கை டிவி என அனைத்து பொது தலங்களை தங்கள் அதிகாரத்தில் வைத்து உண்மைகளை மறைப்பது யார் ?
திமுக விற்கு அதிமுக வோ , அதிமுக விற்கு திமுக வோ மாற்று இல்லை. அதிமுக , திமுக இரண்டும் ஒன்று தான்....

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை !!!

மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.
இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர். செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.
இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…!
பொருட்கள் அளவு
1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்
மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. எங்கும் தேடி அலைய வேண்டாம். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இது எல்லாம் வல்ல போகர் பெருமான் மக்களுக்கு துன்பத்திலிருந்து விடுபட அருளியதாகும்

மனதே மயங்காதே !

மனதும் அறிவும் பல நேரங்களில் ஒரே பாதையில் பயணிப்பதில்லை. எதிர் எதிர் திசையைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. மனம் சொல்வதை அறிவு மதிப்பதில்லை. அறிவு உரைப்பதை மனம் அலட்சியமே செய்கிறது. இரண்டுக்கும் இடையில் சிக்கி இழுபடும் நிலைதான் மனிதர்க்குள் , இது அதிசயமல்ல. எதையுமே யோசிக்காமல் எப்படி ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக மனி தர்கள் செய்கிறார்கள்/பேசுகிறார்கள்/நடந்துக்கொள்கிறார்கள்.
அப்படி நங்கள் இருக்க வேண்டாம் என்றாலுமே ஏன்? என்ற கேள்வி எழுந்துவிடாமல் இருப்பது இல்லை நமக்கு. அழுத்தமாக உள்ளம் சொல்லுவதை கொண்டு நடந்துக்கொள்ளுங்கள் என்று பல அறிஞர்கள் கூறி இருக்கிறார்கள்.
அறிவு சரியாக செய்கிறதா? இல்லை உள்ளம் சரியாக செய்கிறதா? உள்ளம் கேட்பதை மட்டும் கேட்டு நடந்துகொண்டால் பல விஷயங்களில் நான் சந்தோஷமாக இருப்பேன் அல்லது இருந்து இருப்பேன் என்று தோன்றும். ஆனால் எல்லாவற்றிற்கும் அறிவுடன் உட்கார்ந்து பேசும் போது, மிஞ்சுவது சந்தோஷம் இல்லை, ஒரு மயான அமைதி அல்லது எல்லாமே பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற தள்ளிவைப்பு அல்லது என்னை விட பிறரின் செய்கைகளுக்கு முதலிடம் என்று அறிவால் நான் படும் பிரச்சனை அதிகம். உள்ளம் பல நேரங்களில், பல இடங்களில் என்னை ஆட்டிப்படைத்தாலும், அறிவு என்னை ஆக்கரமிப்பது அதிகமாகிக்கொண்டே போகிறது. காரணம் இன்று இன்டெர் நெட் மூலமாக பல கேள்விகளுக்கு விடை எளிமையாக கிடைகிறது.
அறிவின் அடங்காத குழந்தைதான் மனசு!!! அப்படி என்று வைத்துக் கொள்ளலாமா? மனது அலை பாயும் என்பது நமக்கு தெரியும் ! ஆனால் அறிவு அலைபாயுமா என்ன ? அறிவும் மனதும் ஒத்துப் போகும் போது நமக்கு கிடைப்பது தெளிவு! அவ்வாறு ஒத்துப் போகாத தன்மையினாலேயே இன்றைய உலகின் பெரும்பான்மை அழிவுக்கு காரணமாகிறது .  அவன் சிந்தனையை நிறுத்துத மறுதலிக்கிறது . என் செய்வது இதில் வெல்ப
மனதுவர் யார் ...?
இறுதியில் மனது அறிவை வென்றுவிடுகிறது. அறிவும் மனதும் சண்டை போட்டுக்கொள்ளும்போதுதான் ஒருவன் சிந்தனையாளன் என்பதை அவனுக்கு அது உணர்த்துகிறது . அறிவு அவன் உறக்கத்தை நினைவுகூறுகிறது. எளிமையான அணுகுமுறையும் வெவ்வேறு வித குணங்கள். இத்தனை திறமையுடனும், அதே நேரத்தில் எளிமையாகவும் இருக்க தன்மையான மனதும், அறிவும் ஒருவருக்கு தேவை.
நமக்குப் புதிதாக ஒரு துன்பம் வந்து விட்டால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என நம் மனதும், அறிவும் தேட ஆரம்பித்துவிடுகின்றன. அக்கணத்தில், நம் மனதில் இருப்பதெல்லாம் எப்படியாவது அத்துன்பத்திலிருந்து வெளிவந்து விடவேண்டும் என்பது மட்டும் தான். அதை மட்டுமே சிந்திக்கும் நம் மனதும், அறிவும் உளைச்சலுக்கும், சோர்வுக்கும், அழுத்தத்திற்கும் உள்ளாகின்றன. பல சமயங்களில் படபடப்பின் உச்சக்கட்டத்துக்குப் போய் கைகால்களெல்லாம் உதற ஆரம்பித்து விடுகின்றன . இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவருக்குக் கேட்கும் அளவுக்கு நம் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து விடுகிறது. இவ்வாறு பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில், துன்பத்திலிருந்து வெளிவர நாம் எடுக்கின்ற அவசர முடிவுகள் இன்னும் பல துன்பங்களைக் கொண்டு வருவதைக் கேள்விப்பட்டிருப்போம். அல்லது நாமே அனுபவத்தால் உணர்ந்திருப்போம. எனவே துன்பங்களைக் களைவதை விடவும் அவற்றை எதிர்கொள்ளும் வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அவற்றில் நான் சொல்ல விரும்புவது துன்பங்களைப் பற்றிய நமது கண்ணோட்டம், மனப்பாங்கு மாற வேண்டும். மனதையும் சிந்தனையையும் தெளிவாக வைத்திருக்க நாம் தயாராக இருக்கவேண்டும். நல்ல நூல்களை கற்றும் , நல்ல சொற்பொழிவுகளை கேட்டும் , அறிவை பெருக்குவோம்.

இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டையுமே ஒரே கண்ணோட்டத்தில் எடுத்துகொள்ளும் மனப்பான்மை வரும்.

இன்பமும் துன்பமும் புலன்களின் எண்ணங்களே! ஆகையால் புலன்களை, தியானத்தின் மேல் திருப்பினால், இன்பமாக இருக்கலாம் !!
இன்பங்களும் துன்பங்களும் மனிதர்களாக ஏற்படுத்திகொண்ட ஒரு மாயையான சிந்தனையாகும். நடக்கும் நிகழ்ச்சிகள் தனக்கு சாதகமாக இருந்தால் அதை இன்பம் என்றும், பாதகமாக இருந்தால் துன்பம் என்றும் ஒருவர் செயற்கையாக, மனதின் தவறான உந்துதலில் அல்லது மனதின் தவறான சிந்தனையானால் எடுத்து கொள்கிறார்.
எனவே ஒருவர் துன்பம் என்று தன்னை மனதாலும் உடலாலும் கஷ்டபடுத்தி கொள்கிறார் என்றால் அது மனம் சார்ந்த பிரச்னை அல்லது சிந்தனை என்று அடித்து கூறலாம். இந்த மனம் சார்ந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு மனதை சரியாக சிந்திக்க செய்வதுதான்.
தியானத்தின் மூலம் ஒருவர் மூளையினுடைய அலைகளை ஒழுங்கு படுத்தபடுத்தி எது உண்மை, எது போலி என்று சிந்திக்க செய்ய முடியும் . அப்படி சிந்திக்கும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற மாயைகளுக்கு வேலை இல்லை.
துன்பங்கள் என்று மனிதன் நினைத்து கொண்டு இருக்கும் செயல்கள் எதுவும் நிரந்திரம் அல்ல. அதே போன்று இன்பம் என்று மனிதர்கள் நினைத்து கொண்டு இருக்கும் எந்த செயல்களும் நிரந்திரம் அல்ல. மனது தெளிவாக அல்லது சரியாக சிந்தனை செய்யும்போதுதான்.இதனை நாங்கள் உணருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. குடும்பத்தில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒத்து சென்றால்தான் குடும்ப வாழ்க்கை பிரகாசிக்கும். இந்த உலகத்தில் பெரும்பாலானோர் பிறக்கும்போதே பணக்காரர் ஆக பிறக்கவில்லை. உண்ணும் உணவுக்கும், உடுக்கும் ஆடைக்கும் வழியே இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவும் நாமும் இந்த உலகத்தில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கைதான் அவர்கள் இன்றும் பணக்காரர்களாக இருக்கின்றனர். இன்று தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை ஒரு பொருட்டாக அல்லது துன்பமாக அவர்கள் எடுத்து கொண்டிருந்தால் அவர்கள் பிற்காலத்தில் பெரிய பணக்காரர் ஆக இருந்திருக்க முடியாது அல்லது இருக்க முடியாது.
துன்பம் என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது, துன்பம் என்னும் வியாதியை தியானம் என்னும் மருந்து கொண்டுதான் அந்த மருத்துவர் குணபடுத் துவார்.தியானத்தின் மூலம் மனது சரியாக சிந்திக்க முடியும்.
மனது சரியாக சிந்திக்க செய்யும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற பாகு பாடு இல்லை. இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டையுமே ஒரே கண்ணோட்டத்தில் எடுத்துகொள்ளும் மனப்பான்மை வரும். எனவே தேவையில்லாத விருப்பு, வெறுப்பு, எல்லா நிகழ்வுகளையும் சாதரணமாக எடுத்து கொள்ளும் மனப்பான்மை தியானம் செய்வதின் மூலம் வரும் என நம்பலாம்.

Saturday, March 26, 2016

கல்வி இன்று வியாபாரம்...

நட்டம் இல்லாத தொழில் செய்ய வேண்டுமா ?
கல்வி நிறுவனம் தொடங்குங்கள் என்று ஆலோசனை கூறும் அளவிற்கு இன்று கல்வி வியாபாரம் ஆகியுள்ளது.
எப்படி பார்த்தாலும் வருடத்திற்கு 20,000 வரை கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் LKG சேர்க்க.நான் சொன்ன இந்த கட்டணம் கடைநிலையில் உள்ள தனியார் பள்ளிகளில் மட்டுமே. வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் கல்வி கட்டணம் பெறும் பள்ளிகளும் உண்டு.
கல்வி வியாபாரம் ஆனதிற்கு காரணம் அரசு மட்டுமே காரணமா என்றால் இல்லை. இந்த பெற்றோர்களே முதல் காரணம். என் மகன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கிறான் அல்லது CBSE
பள்ளியில் படிக்கிறான் என பெருமைக்காகவே பலரும் தனியார் பள்ளிகளைத் தேடி போகிறார்கள். தரமான கல்வி வேண்டும் அதனால் தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம் என்கிறார்கள்
எனக்கு ஒரு சந்தேகம்..
தரமான கல்வி என்றால் என்ன என்று எந்த பெற்றோர்களுக்காவது தெரியுமா ? நிச்சயமாக இல்லை. முதல் மதிப்பெண் பெற்றால் சிறந்த பள்ளி சிறந்த கல்வி முறையா?
இந்திய கல்வி முறை தரமான கல்வி முறையா என்றால் அதுவே ஒரு மிகப்பெரிய கேள்வி.. !!
இதிலும் தனியார் பள்ளிகள் தேர்ச்சி பெறும் மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்போம் என்கிறது. காரணம் 100% தேர்ச்சி காட்ட வேண்டுமாம்! நன்றாக படிக்கும் (மனப்பாடம்) செய்யும் மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொண்டு அவர்களை தேர்வில் வெற்றி பெற வைப்பது தான் இந்த தனியார் கல்வி நிறுவங்களின் வேலையென்றால் அப்போது உங்கள் பார்வையில் படிக்காத அல்லது மனப்பாடம் செய்து தேர்வு எழுத தெரியாத குழந்தைகளை என்ன செய்வது ?
இந்த கேள்விக்கு எந்த தனியார் கல்வி நிறுவனத்திடமும் பதில் இருக்காது. காரணம் அவர்களுக்கு 100% தேர்ச்சி, அதை விளம்பரம் செய்து பள்ளியை வளர்த்து பணம் பண்ண வேண்டும் என்பதே நோக்கம்.
கல்வியை சேவையாக வழங்கினால் மட்டுமே இந்த நாடும் நம் மாணவர் சமுதாயமும் முன்னேற்றம் அடையும்.
நிச்சயமாக 99% தனியார் நிறுவனங்கள் கல்வியை சேவையாக செய்ய மாட்டார்கள்..
ரசே அனைத்து மாணவர்களுக்கும் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாத ஒரு கல்வி தர வேண்டும்.

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?


லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள்.சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.
"துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே" என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் . பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ,ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது " என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

Friday, March 25, 2016

Vijay tv super singer season 5 final who is real winner

சரீரம் சரிவர இயங்க வேண்டும் என்றால் நாடிகள் சரியாக வேலை செய்ய வேண்டும்.

Venkatesh Bhattachariya's photo.
மோதிர விரலினால் வைத்துக் கொண்டால் சாந்தி, மன அமைதியும் கிட்டும். நடுவிரலினால் வைத்துக் கொண்டா ஆயுள் ஸம்ருத்தியாக் இருக்கும். பெருவிரலினால் வைத்துக் கொண்டால் சக்தி கிட்டும். ஆள்காட்டி விரலினால் வைத்துக் கொண்டால் பக்தி, முக்தி கிட்டும். பிளாஸ்டிக் பொட்டு வைத்துக் கொள்வதை விட நல்ல தரமான குங்குமத்தை வைத்துக் கொள்வதினால் கிருமி நாசமாகும். குங்குமத்தை தினந்தோறும் வைத்துக் கொள்ளுங்கள். நெற்றிப் பொட்டில் குங்குமத்தை வைத்தால் ஞான சக்கரத்தை பூஜை செய்ததாகும். அழகு, அலங்காரத்தில் ஒரு பாகம் மட்டுமே அல்லாது இவையெல்லாம் குங்குமத்தை வைத்துக் கொள்வதில் உள்ள அம்சங்கள். நாடிகள் சேரும் பாகங்களில்… நம் சரீரம் சரிவர இயங்க வேண்டும் என்றால் நாடிகள் சரியாக வேலை செய்ய வேண்டும். சரீரத்தில் இரண்டு முக்கியமான நாடிகள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘இட’ இரண்டாவது ‘பிங்கள’. இந்த இரண்டு நாடிகளும் நெற்றிப் பொட்டில் ஒன்று சேரும். சரீரத்தில் உள்ள அனைத்து நாடிகளுக்கும் இணைப்பாக நெற்றிப் பொட்டில் உள்ளது. இந்த இடத்தை ‘ஸுஷும்ன” நாடி என்று கூறுவர். இந்த இட்த்தில் குங்குமமோ, சந்தனமோ, விபூதியோ வைத்துக் கொள்வதன் மூலம் நாடியின் வேலை சீராக இருக்கும் என்பது ஐதீகம். அதே போல் குங்குமம் வைத்துக் கொள்வதன் மூலம் த்ருஷ்டி தோஷம் அண்டாது. குங்கும்ம் வைத்துக் கொண்டவர்களுக்கு எதிராளி மானசீகமாக வசியமாகி விடுவர். அதே போல் குங்குமத்தில் உள்ள சிவப்பு நிறம் நமக்குள் மனோசக்தி, தியாக மனப்பான்மை, பயமின்மை, பரோபகார குணம் இவற்றை அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது.

வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான்.

1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?
2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?
3. தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?
4. பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?
5. தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?
6. எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?
7. கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை , காமராஜர்,எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?
8. இந்துக்களை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூற அஞ்சுகிரீர்களா ?
9. நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டுவெடிப்புகள், கொள்ளைகள்,ஹவாலா திருட்டுக்கள் இவற்றில் இந்துக்கள் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா அதை மேடையில் பட்டியளிடும் துனிவுஇருக்கிரதா ?
10. இந்துக்களிடையே ஜாதி வெறியைதூண்டி பிறித்தாழ நினைக்கும் கருமர்களே பிற மத ஜாதிவேறுபாடுகளை மூடிமறைப்தேன் மேடையில் நாபேச நடுங்குதேன்?
11. சிவனும் இல்லை அல்லாவும் இல்லை ஏசுவும் இல்லை என உங்கள் அறிவிப்பு பலகையில் எழுத தைரியம் உள்ளதா?
12. உங்கள் மனைவிகளையும் உங்கள் கட்டுமரங்களின் துனைவிகளையும் பொதுமேடையில் வைத்து தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த முடியுமா?
13. இந்துக்கள் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?
14. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?
15. குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?
16. ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லீம்கள் பர்தா அனிகிறார்கள்.ஹிந்துக்கள் தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும் பர்தா கழட்டும் நிகழ்ச்சி நடத்தும் ஆண்மை இருக்கிறதா?
17. பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?
18.ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?
19. பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?
20. ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் தூற்றி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?.
முடிந்தால் இதற்கு பதில்கூறி தெளிவு பெறுங்கள். உங்களை இனங்கண்டுள்ளனர் மக்கள் உங்கள் அடக்கு பேச்சை கேட்டு ஏமாந்த காலம் கடந்தகாலமாயாச்சு,

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை அடையாளம் காட்டுகிறதா? படித்துத்தான் பாருங்களேன். !

படித்துத்தான் பாருங்களேன். !
A
உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.
B
உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
C
உங்கள் பெயர் C என்ற எழுத்தில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.
D
உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.
E
உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.
F
உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.
G
உங்கள் பெயர் G என்ற எழுத்தில் தொடங்கினால், நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
H
உங்கள் பெயர் H என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.
I
உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.
J
J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.
K
உங்கள் பெயர் K என்ற எழுத்தில் தொடங்கினால், ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.
L
உங்கள் பெயர் L என்ற எழுத்தில் தொடங்கினால், வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.
M
M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.
N
N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.
O
அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.
P
உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பத— தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.
Q
Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.
R
உங்கள் பெயர் R என்ற எழுத்தில் தொடங்கினால், உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.
S
S என்பது கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.
T
உங்கள் பெயர் T என்ற எழுத்தில் தொடங்கினால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
U
உங்கள் பெயர் U என்ற எழுத்தில் தொடங்கினால், அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும்.
V
உங்கள் பெயர் V என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.
W
உங்கள் பெயர் W என்ற எழுத்தில் தொடங்கினால், கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.
X
உங்கள் பெயர் X என்ற எழுத்தில் தொடங்கினால், சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.
Y
சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.
Z
உங்கள் பெயர் Z என்ற எழ தொடங்கினால், இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்...குறிப்பு பெயரில் எழுத்துக்கள் சேர்க்கை NO, SAD, LO, LL, END, LAS, LES, WAR, SEEK, இம்மாதிரி தீய அர்த்தம் கொண்ட சேர்க்கை இல்லாமல் பெயர் அமைந்தால் நலம்

படித்ததில் பிடித்த கதை:

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.
“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.
அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.
உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.
அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.
நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். செக்கு மாடுகள் அல்ல.

Thursday, March 24, 2016

படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும்


கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்..?
ஒரு அறிவியல் பூர்வமான அலசல்!

எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான
லொகேஷன்.
இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும்.
இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி.
பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின்
கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா..?
அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு
கதவுகள் இருக்கும்.
இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி.
ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது
அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த
விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு ( இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும்
ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள
இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த
எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும்.
பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு
(கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும்
கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
இதை ரெகுலராய் உட்கொண்டவர் களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை
புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின்
ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது
அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை
வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள்
இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம்.
இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும்
எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும்,
ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு
உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம்.
கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான்.
நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால்
மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை
ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை
எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி.
சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில்.

வாழ்க தமிழ்....................

"எதுக்கெடுத்தாலும் தமிழ்... தமிழ் என்று ஏன் இந்த ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் " என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஏன் இந்த இனவெறி என்று கேட்கிறார்கள். இது வெறும் மொழி தானே? என்று சர்வச் சாதரணமாக நினைக்கிறிர்கள்.
தமிழ் வெறும் மொழியா?தமிழ் வெறும் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கருவியா?
அப்படி என்ன இருக்கு தமிழில்?
அகத்தியம், தொல்காப்பியம், ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றினை, பரிபாடல், பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம், மதுரைக் காஞ்சி, முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப் பாலை, பெரும்பாணாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி போன்ற நூல்களை எல்லாம் படித்து அதிசயிக்கும் நாம். அவற்றை படைத்தவர்களை போற்றி பாடும் நாம், அப்பேற்பட்ட படைப்புகளை உருவாக்கிய அன்றைய தமிழ் சமூகத்தை பற்றி சிந்தித்து பார்த்தோமா?
சற்று சிந்தித்து பாருங்கள்
திருவள்ளுவன் என்றொருவனை ஈன்றெடுத்த தமிழ் சமூகம் எப்படி வாழ்ந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள் .
அந்த சமூகத்தின் வாழ்வியல், அறம், வீரம், கொடை என்று அனைத்தையும் சற்று சிந்தித்து பாருங்கள்.
வள்ளுவன் என்றொருவன் வாழ்ந்த காலத்தில் எமது முன்னோர் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்..
மதங்கள் தோன்ற முன், தோன்றிய எம் இலக்கணங்களின் சிறப்புகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
சமூக ஏற்ற தாழ்வுக்கு வழி வகுக்காத நெறிகள்.
இன்றளவும் மெய்சிலிர்க்க வைக்கும் தத்துவங்கள்.
சமூக மேன்பாட்டை மனதில் கொண்டு இயற்றப்பட்ட மறைகள்.
வாழ்வியலை பகுத்து தொகுத்த நூல்கள்
தாம் வாழ்ந்த சூழலை அவதானித்து அதை வருங்காலத்திற்கு கடத்த பதிவு செய்ய வேண்டும் என்ற பக்குவம் கொண்ட அறிஞர் பெருமக்கள்.
என்று இத்தனை வியக்க வைக்கும் அம்சங்கள் கொண்ட நாகரிகத்தின் சொந்தக்காரர் நாம்.
இத்தகைய பெருமையும் சிறப்பும் கொண்ட மொழியை வேறெங்கும் காணோம்.
ஆனால் இன்றோ, எம் முன்னோர் கற்று தந்த வாழ்வியலை மறந்துவிட்டோம். அவர் கற்று தந்த அறத்தை மறந்துவிட்டோம். அவர்கள் போற்றிய வீரத்தை மறந்துவிட்டோம். கடைசியாக அவர்களின் விலாசமாக, அடையாளமாக எம்மிடம் இருக்கும் கடைசி நினைவு சின்னம் இந்த மொழி தான்.
இதையும் மறந்துவிட்டால், இழந்துவிட்டால்; நாளை எம் வரலாறையும் இழப்போம், நம் முன்னோரின் நினைவுகளை இழப்போம். நமது பெருமைகளை இழப்போம், எம் மண் மீது நாம் கொண்ட உரிமைகளை இழப்போம், எமது அடையாளத்தை இழப்போம், எமது அரசியல் அங்கீகாரத்தை இழப்போம், கடைசியாக நம்மையே நாம் இழப்போம்.
மதம் இல்லாமல் வாழலாம். பிற இனத்தவரால் தம் மொழியில்லாமல் கூட வாழலாம். ஆனால் தமிழர் ஒருபோதும் தமிழ் இல்லாமல் தமிழராய் வாழ முடியாது. தமிழ் எம் உயிரின் ஆதாரம். உன் நா தமிழ் மறந்தால்,உன் அடையாளத்தை நீ மறப்பாய். உன் எண்ணத்தில் இருந்து தமிழ் விலகினால், உன் எண்ணம் அதன் வேர்களை இழக்கும்.
நீ நீயாக இருக்க வேண்டும் என்றால், தமிழை படி, தமிழை போற்று, தமிழில் பேசு, தமிழில் எழுது, தமிழை கொண்டாடு, நாளைய தலைமுறைக்கு தமிழை எடுத்து செல்.
வாழ்க 

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...