Friday, December 1, 2017

இன்று பிரதோஷம்..

வாங்க கோவிலுக்கு போவோம்.
சரி...கோவிலுக்கு போனால் என்ன கிடைக்கும்? எனக் கேட்கிறீர்களா?
குற்றாலத்து அமர்ந்து
உறையும் கூத்தா!
உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல,
கசிந்து, உருக வேண்டுவனே!
என்கிறார் மாணிக்கவாசகர்.
மோட்டு எருமை வாவி புக,
முட்டு வரால் கன்று என்று,
வீட்டு அளவும் பால் சொரியும்
என்கிறார் கம்பர்.
ஒரு கொழுத்த எருமை, குளத்தில் இறங்குகிறது. குளத்திலுள்ள ஒரு மீன், அந்த எருமையின் மடியில் மோதுகிறது. எருமை தன்னுடைய கன்று தான் முட்டுகிறது என்று நினைக்க உடனே எருமையின் மடியிலிருந்து பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. கன்று வீட்டில் இருக்கிறது. குளத்திலிருந்து வீடு வரை பால் பீய்ச்சி அடிக்கிறதாம். பாருங்கள்! அந்த எருமைக்கு (கற்றா) எத்தகைய பெரிய மனதை.
இதன் மூலம் ஈசனை நினைத்து அப்படியே கரைய வேண்டுமென நினைக்கிறார் மாணிக்க வாசகர். அவர் கண்களுக்கு ஆண்டவன் மட்டும் தான் தெரிந்தார். உறவும், ஊரும், பேரும், ஆசானும், அறிவும் தரும் என்று நம்மையும் கோவிலுக்கு கூப்பிடுகிறார் மாணிக்கவாசகர்.
சரி.. வாங்க கோவிலுக்கு போவோம்.
ஈசன் அருள் பெற்று வருவோம்.
ஓம் நமசிவாய

பிரதோச நேரம்
நண்பர்களே....
கோவிலுக்கு போக
முடியாதவர்கள்
இங்கயே....

வேண்டிக்கோங்க.....
நந்தியர்கிட்ட.....
ஓம் நமசிவாய

நமஹ....
Image may contain: 1 person, standing and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...