Wednesday, August 15, 2018

வாழ்க்கைக்கு அவசியமான 10 எளிய மருத்துவ குறிப்புகள்:

நாம் வாழ்விற்கு உகந்த எளிய மருத்துவகுறிப்புகளை பார்ப்போம்.
கல்யாணமுருங்கை இலையில் கீரை மசியலாக செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
மாங்கொட்டையிலுள்ள பருப்பைக் காயவைத்துத் தூளாக்கி, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி, ரத்தபேதி, மூல நோய் குணமாகும்.
வெகு நாட்களாக ஆறாத புண்கள் விரைவில் ஆற, மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துத் தடவலாம்.
சின்ன வெங்காயம், கடுகு இரண்டையும் சேர்த்து அரைத்து, வலியுள்ள மூட்டுக்களில் தடவினால், மூட்டு வலி குணமாகும்.
அன்னாசிப் பழ இலையை சாறு பிழிந்து அருந்தினால், வாந்தி, வயிற்றுக்கடுப்பு, காமாலை ஆகியவை குணமாகும்.
ஞாபக மறதியை குணப்படுத்தி, உடலில் நீரின் அளவை சரியாக்கும் ஆற்றல் மரவள்ளிக் கிழங்கிற்கு உண்டு
பீட்ரூட் சாறினைக் குடித்தால் ரத்த அழுத்தத்தை குறையும்.
ரத்தசோகை நோய் ஏற்படுவதைத் தவிர்க்க தினமும் சிறிதளவு ராஜ்மாவை சமைத்து சாப்பிடலாம்.
இஞ்சிச் சாறை வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறிவிடும்.
முருங்கை விதையை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றிவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...