Sunday, August 26, 2018

"உன்னுடைய தோற்றமே உன்னுடைய வருங்காலத்தை முடிவு செய்கின்றது." என்று ஓர் அறிஞன் கூறினான்.
அவன் கூறியது உண்மை என்பதில் ஐயம் இல்லை.
நம்முடைய தோற்றத்தைக் கண்டதும் ஒருவன் கொள்ளும் முதல் எண்ணமே அவனை நம்மீது நட்புக் கொள்ளவோ, கொள்ளாமவிருக்கவோ செய்து விடுகிறது.
ஒருவனைப்பற்றி நாம் முன்னர் அறியாதிருக்கும் நிலையில் திடீரென அவனைச் சந்திப்பின் அவன் மீது நமக்கு ஒருவித விருப்போ வெறுப்போ ஏற்படக் காரணம் என்ன?
சிலரைக் கண்டதுமே நாமாக வலியச் சென்று நட்பு செய்யவும்,
மற்றும் சிலரைக் கண்டதும் வெறுப்புற்று வெருண்டோடவும் காரணம் என்ன?
அவர்களின் தோற்றம்தான்.
எனவே
ஒருவன் தன்னுடைய தொழிலில் எவ்வளவு திறமை பெற்றிருந்த
போதினும் சரி,
அவன் மிகவும் சிறப்பு வாய்ந்த ஓவியப்புலவனாகவோ, காவியப்புலவனாகவோ இருந்த போதிலும் சரி,
அவன் நல்ல தோற்றத்துடன் விளங்கவில்லையாயின் ,
" முகத்தைப் பார், விளக்கமாற்றுக் கட்டை போன்று இருக்கின்றது " என்று காளமேகப்புலவரைப் பார்த்து ஒரு பெண் கூறியது போன்று,
மக்கள் கூறாவிட்டாலும் மனதிற்குள்ளாவது அவனை வெறுப்பார்கள்.
நம்முடைய குரல் எவ்விதம் இருக்குமென்பதை நாம் அறியாதது போன்று,
நாம் பிறர் கண்ணுக்கு எவ்விதம் தோற்றமளிப்போம் என்பதைப் பற்றியும் பெரும்பாலோர் அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.
இளமையில் அவர்கள்
தாய் தந்தையர்களிடமிருந்து பெற்ற சீராட்டுக்களையும், பாராட்டுக்களையும் மறந்துவிடாது
மனதில் வைத்துக் கொண்டு தங்களைத் தாங்களே பெருமையாக எண்ணிக் கொள்கிறார்கள்.
எனவே தங்களைக் கண்ணாடியில்
நாள்தோறும் பார்த்தபோதினும்,
பிறருடைய கண்களைக் கொண்டு தங்களுடைய முகத்தைப் பார்க்காததனால்,
அவர்களுக்கு அவர்களுடைய குறை தெரியாமல் போய்விடுகிறது.
ஆனால் புகைப்படம் பிடித்து வந்ததும் அவர்களுடைய எண்ணங்களெல்லாம் அக்கணத்திலேயே
துகள் துகளாகிவிடுகின்றன.
தன்னுடைய உருவத்தைப் பார்ப்பதற்கே அவர்களுடைய கண்கள் கூசுகின்றன.
தாங்கள் தங்களுடைய தோற்றத்தை அழகுபடுத்தாததற்கு,
தங்களையே குறை கூறிக் கொள்வதற்குப் பதிலாகப் புகைப்படம் எடுத்தவனைக்
குறை கூறத் துவங்கிவிடுகிறார்கள்.
வேறு சிலர் தங்களைக் குறைவாக நினைத்துக் கொண்டு,
தங்களுடைய தோற்றத்தை அழகுபடுத்துவதில் சிறிதேனும் கருத்தைச் செலுத்துவதில்லை.
நாம் என்ன செய்தும் என்ன பயன்?
நம் உதடுதான்
தொங்கிக் கொண்டிருக்கிறதே,
பற்கள் தாம் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றனவே என்று தங்களுடைய
சிறு சிறு குறைகளையெல்லாம் பெரிதாக எண்ணித்
தங்களின் தோற்றத்தைப் பற்றி அக்கறை செலுத்தாதிருந்துவிடுகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...