பெண் நீதிபதி அதிரடி – வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால்
பெண் நீதிபதி அதிரடி – வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால்
திருமணத்துக்கு முன் காதலன் ஏமாற்றினால் உறவுக்கு விருப்பம் தெரிவித்த பெண்தான்
திருமணம் செய்வதாகக் கூறி உறவுகொண்டபின் காதலன் ஏமாற்றி னால், உறவுக்கு விருப்பம் தெரிவித்த படித்த பெண்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பாலியல் பலாத்கார வழக்கில்
மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் காதலன் திருமணம் செய்வதாகக்கூறி தன்னை தூண்டி உறவுகொண்டு விட்டு ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட
வேண்டும் என்றுகோரி 21 வயது காதலன்மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மிருதுளா பக்த்கர் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இந்த சமுதாயம் மாறி வருகிறது. அதேவேளையில் பல நடத்தை நெறிக ளை இந்த சமுதாயம் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமணத்தின்போது கற்புடையவளாக இருக்க வேண்டியது
பெண்ணின் பொறுப்பு என்று காலம்காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்த சமுதாயம் பல நம்பிக்கைகளில் இருந்து விடுபட முயற்சித்தாலும், திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவை கண்டிக்கிறது.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.


No comments:
Post a Comment