Thursday, August 16, 2018

விதை விதைத்தவர் எம்ஜிஆர்..

எம்ஜிஆர் கலைஞருக்கு மட்டும் உதவவில்லை, முரசொலி மாறனுக்கும் சேர்த்துதான் உதவியுள்ளார்.. இன்று சன்டிவி யின் பிரமாண்ட வளர்ச்சிக்கும் அன்றே விதை விதைத்தவர் எம்ஜிஆர்..
"எங்கள் தங்கம்" திரைபடத்தின் 100வது நாள் விழா 16.1.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. அந்த விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் கலந்து கொண்டனர்..
Image may contain: 2 people, people smiling
அந்த விழாவில் பேசிய முரசொலி மாறன்:
முரசொலி பத்திரிக்கை நஷ்டத்தில் நடைபெற்ற காரணத்தினாலும் மேலும் தொடர்ந்து எங்கள் படங்கள் தோல்வி அடைந்த காரணங்களாலும் எங்களது குடும்பம் கடன்கார குடும்பமாக மாறிவிட்டது வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது..
குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது..இந்த நிலைமையை புரட்சிதலைவர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொன்னேன் . உடனே புரட்சித்தலைவரும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த "எங்கள் தங்கம்" படத்திற்கு பணம் வாங்காமல் நடித்து கொடுத்தது மட்டுமில்லாமல் படத்தை மிகப் பெரிய வெற்றி அடைய செய்து அணைத்து சொத்துக்களையும் மீட்டு கொடுத்துள்ளனர்.
எங்கள் சொத்துக்களை மட்டுமல்லாது எங்கள் மானத்தையும் மீட்டு தந்தவர்கள் புரட்சிதலைவர் மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதாவுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்,...
Image may contain: 2 people, people smiling
அதே விழாவில் திரு கருணாநிதி..
மாறன் பேசும் போது புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்த உதவியை குறிப்பிட்டு பேசினார்..குடுத்து குடுத்து சிவந்த கரம் கர்ணன். அனால் எங்கள் திராவிட கர்ணன் புரட்சி நடிகர் குடுத்து குடுத்து மேனியே சிவந்து விட்டது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் வாழ்கின்ற காரணத்தினால் அவர் வாழும் மாவட்டத்திற்கு செங்கை மாவட்டம் என பெயர் வந்தது நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மாறனின் நன்றி உணர்ச்சியை நானும் வழி மொழிகிறேன்..
படித்ததில் ஒரு வரலாறு....
இன்னும் எத்தனை தலைவர்கள் வந்தாலும்
இனி இந்த பூவுலகில்,
இவர்களை போல ஒரு தலைவர் கிடைக்க போவதில்லை...
வாழ்க புரட்சி தலைவர்...
வாழ்க புரட்சி தலைவி...
வாழ்க அ.இ.அ.தி.மு.க...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...