Sunday, August 19, 2018

சிவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாத 12 பாவங்கள் என் தெரியுமா..?..


சிவன் அழிக்கும் சக்தி கொண்டவன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் உண்மையில் சிவன் மிகவும் சாந்தம் கொண்டவன். ஆக்கிரம் விதிப்படி பூஜை செய்து உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்களுக்கு சிவனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.
சிவப்புராணத்தில் சொல்லிருக்கும் கூற்றுப்படி, நீங்கள் யாருக்கும் தெரியாமல் செய்யும் பாவங்களுக்கான சம்பளம் கிடைக்காமல் போகாது.
மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது.
அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா?
பாவம் - 1
அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.
பாவம் - 2
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம் - 3
உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்...
பாவம்- 4
ஒருவன் தொடர்ந்து தீய வழியிலே செல்வது, அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.
பாவம்- 5
கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.
பாவம் 6 :
இன்னொருவரைப் பற்றி அப்படமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம்-7 :
வதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும், மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம்- 8 :
ஒருவரின் செய்கையால மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.
பாவம்- 9 :
இந்து சமயம் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவ்ற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.
பாவம் - 10 :
வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.
பாவம் - 11 :
மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவையால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.
பாவம்- 12 :
முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவதும் சிவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...