Friday, August 24, 2018

" அழகுக்கும் மதிப்பிருக்கிறது, உடைக்கும் மதிப்பிருக்கிறது."

சிகாகோவிலுள்ள ஆசிரியர் ஒருவர் தம்முடைய பள்ளியில் மாணவர்களுக்கென " அழகு மூலை "
என்று ஓரிடத்தை ஒதுக்கி
அதில் கண்ணாடிகளும்,
அழகிய புகைப்படங்களும் வைத்திருந்தார்.
அங்குக் கன்னி மேரியின் அழகிய சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் ஓய்வு நேரங்களில்
அங்குச் சென்று மகிழ்ச்சியுடன் பொழுது போக்கினர்.
அங்குத் தோற்றம் வழங்கிய அழகானது மாணவர்களுடைய பண்பிலும்,
தன்னுடைய சாயலைப் பதிய வைத்தது. எனவே
அவர்கள் அழகிய பண்புள்ளவர்களாக
மாறி விட்டனர்.
குறும்பு செய்து வந்த
ஓர் இத்தாலியச் சிறுவன் சில நாட்களில் அமைதி உருவினனாக மாறிவிட்டான்.
இதைக் கண்ட ஆசிரியருக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை.
அவர் அவனை அணுகி,
" நீ எப்படி இவ்வளவு விரைவில் நல்ல பையனாக ஆனாய்? " என்று கேட்டார்.
அதற்கு அவன் கன்னி மேரி சிலையைச் சுட்டிக்காட்டி,
" அவள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நான் எப்படி குறும்புத்தனம் செய்ய இயலும்? " என்று கூறினான்.
மனிதர்களின் ஒழுக்கத்திற்குப் பெரும்பாலும் உணவளிப்பவை கண்களும் காதுகளும் தாம்.
பறவைகளின் அமுத கீதமும்,
மலர்களின் நறுமணமும்,
துள்ளி ஓடும் நீரோடையும்,
சில்லென்று வீசும் காற்றும்,
மனிதனுடைய பண்புகளை
உருவகப்படுத்துவதில்,
அவன் பள்ளியில் பயிலும்
கல்வி போன்று பெரும்பங்கு எடுத்துக் கொள்கின்றன.
அழகை நுகர்வதானது
மனிதனுடைய பண்பையே
அழகு மயமாக ஆக்கிவிடுகிறது.
" அழகுக்கும் மதிப்பில்லை,
உடைக்கும் மதிப்பில்லை என்று கூறுவது அபத்தமானது.
" அழகுக்கும் மதிப்பிருக்கிறது,
உடைக்கும் மதிப்பிருக்கிறது." என்று கூறுகின்றார் ஓர் அறிஞர்.
அழகான காலை வணக்கங்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...