Saturday, August 18, 2018

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம். அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும். காசு கொடுத்தால் முழுபக்க விளம்பரம்.



செவி வழியே சேகரித்த செய்திதான். இருந்தாலும் அந்த கருவை வைத்து என் பேனா விரல் கொண்டு என் ரசனைக்கு ஏற்ப உங்கள் பார்வைக்கு.
ஒரு காலணி தயாரிக்கும் நிறுவனம் தன் தொழிலை விரிவாக்கம் செய்ய நினைத்தது.
அதற்கான ஆலோசனையும், அதே சமயத்தில் புதியதாக ஆட்கள் தேர்வும் நடந்தது.
ஆலோசனைகளின் முடிவில் சாதாரண கிராமங்களுக்கும் அதன் தொழிலை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் ஒரு பழைய ஊழியரையும் புது ஊழியரையும் அனுப்பி வைத்து அறிக்கை சமர்பிக்க சொன்னார்கள்.
அங்கு சென்ற அன்று மாலையே புது ஊழியர் தன் நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இங்கு நம் தொழிலை விரிவாக்கம் செய்ய முடியாது என்றும், ஏனெனில் இந்த கிராமத்து மக்கள் யாரும் காலணிகளே அணிவதில்லை ஆதலால் அவர்களுக்கு தேவையும் இல்லை என்றும் சொன்னார்.
அதற்கடுத்து புதிய ஊழியரும் தொடர்பு கொண்டு, நம் தொழிலை விரிவு படுத்த சரியான சந்தையே இங்குதான் உள்ளது. ஆனால் அதை வெற்றிபெற வைக்க எனக்கு நம் நிறுவனத்தில் தேங்கிக்கிடக்கும் காலணிகளில் 1000 ஜோடி இலவசமாகவும், 6 மாத காலஅவகாசமும் கேட்டார்.
நிறுவனம் ஆச்சரியமடைந்து உங்களைவிட அனுபவத்தில் முதிர்ந்த அவரே முடியாது என சொல்லும்போது உங்களால் மட்டும் எப்படி சாத்தியப்படும் என்று கேட்டனர்.
அதற்கு அவர் விளக்கினார். ஒரு பொருளை பற்றி அறியாதவர்களுக்கு அந்த பொருளை இலவசமாக கட்டாயமாக திணித்துவிட்டால், அதை பயன்படுத்திய மக்களை அதற்கு பழக்கப்படுத்தி அடிமையாக்கிவிட்டால் போதும். தானாக நம் தொழிலை நடத்திக்கொண்டு போகலாம். அதற்காகதான் இலவச காலணியும், கால அவகாசமும் கேட்டேன் என அந்த புது ஊழியர் சொன்னார்.
சரி அதை ஏற்காதமக்களும், எதிர்ப்பாளர்களும் இருந்தால் என்ன செய்வது?.
இங்குதான் நம் தந்திரம் வேலையே செய்யப்போகிறது. எதிர்ப்பாளர்கள் இருந்தும் ஏழைகளும், ஏற்பாளர்களும் இருக்கவே செய்வார்கள். அவர்கள் தான் நம் இலக்கு.
பிறகுதான் இருக்கவே இருக்கிறதே கூலிக்கு மாரடிக்கும் கூட்டம். அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும். காசு கொடுத்தால் முழுபக்க விளம்பரம். நிபந்தனைக்கு உட்பட்டது என்ற சிறிய வரிகளோடு. இந்த விளம்பரத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற நழுவலோடு.
இன்னும் கொஞ்சம் சேர்த்து காசு கொடுத்தால் அந்த பொருள் காலத்தின் கட்டாயமா? அல்லது திணிப்பா? அதன் தரம் எப்படி? என்ற தலைப்பில் ஒரு விவாதம் வைத்து மக்களை திசை திருப்பினால் போதும் என்று அந்த ஊழியர் சொன்னபோது நிறுவனம் வாயடைத்து நின்றது.
இதுபோன்று நம்மிடம் திணித்ததில் சில...
1. உங்க பேஸ்டுல சூடு, சொரனை இருக்கா.
2. உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ஊட்டச்சத்துமிக்க.....
3. உங்களுக்கு நீளமான கூந்தல் வளரவும், முடி கொட்டுவதிலும், அடர்த்தியாகவும் உங்களை பாதுகாக்கும்.
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.
கடைசியாக இதுபோன்று திணிக்கப்பட்டதுதான் நம் நாட்டு அரசியலும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...