Thursday, August 23, 2018

தார்மீக கடமை.

மஹாபாரதமும்,பிதாமகர் பீஷ்மரின் சபதமும் அதனால் அவருக்குக் கிடைத்த இஸ்டமரணம் என்ற வரமும் எல்லோருக்ககும் அறிந்ததே. பாரதப்போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய பீஷ்மர் மரணிக்க முடிவெடுத்தார். கிருஷ்ணபெருமான் தோன்றினார்.
போற்றுதற்குறிய பீஷமரைபார்த்து கூறுகிறார்,. பிதாமகரே , நீங்கள் செய்த சபதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உங்கள் கண்ணெதிரே நடந்த எத்தனை அநியாயங்களை பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தீர்கள்.அன்று பாஞ்சாலியின் துகிலுறுதல்தானே இந்த போருக்கும் இத்தனை உயிர்கள் மடிவதற்கும் காரணம்.அன்று துரியோதனனை நீங்கள் எதிர்த்திருந்தால்...ஆகவே பிதாமகரே,சில தருணங்களில் சபதத்தையும் சட்ட திட்டங்களையும் மீறுவதில் தவறேதும் இல்லை' என்றார்.நம் நாட்டின் பேரழிவுகளின்போது அயல்நாடுகளில் இருந்து பண உதவி பெறுவதில்லை என்ற இந்திய சட்டம் போற்றுதற்குரியது.
ஆனால் கேரளத்திற்கு அரபு நாடுகள் உதவி செய்ய முன்வந்திருப்பது அவர்களின் கடமை, நன்றிக்கடன். கேரளத்தில் வீட்டிற்கு ஒருவராவது அரபு நாடுகளில் வேலை செய்கின்றனர்.அந்த நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகின்றனர். தன்னிடத்தில் வேலை செய்யும் தொழிலாக்கு உதவுவது அவர்களின் தார்மீக கடமை.அதுவுமின்றி கேரளத்தில் செப்பனிடும் பணி...நிறைய பணம் தேவைப்படும்.எனவே இவைகளை மனதில்கொண்டு நம் இந்திய அரசியல் சட்டத்தை தளர்த்துவதற்கு ஏதாவது வழியுண்டா என்று மத்திய அரசு ஆராயவேண்டும். எல்லாவற்றிற்கும், எல்லாகாலங்களிலும் ஒரேமாதிரியான சட்டம் பொருந்தாது.இது ஒரு குடிமகனின் வின்னப்பம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...