Friday, August 31, 2018

இது தோணலியே !………………..

இன்று கல்யாணத்திற்கு சென்றேன். சொந்தம். திருமாங்கல்ய தாரணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் செய்து வைக்கும் வாத்தியார் சொன்னது. தாலி கட்டியவுடன் ஓடி வந்து மாப்பிள்ளைக்கு கை கொடுக்காதீங்க. தாலி கட்டுவது ஒரு சம்ப்ரதாயம். பானிக்ரஹணம், சப்தபதி என்பது முக்கியமானது. மாப்பிள்ளை பெண்ணின் கையை பிடித்து இந்த சடங்குகள் முடிந்த பின் மாப்பிள்ளைக்கு கை கொடுங்கன்னு சொன்னார். அப்புறம் செருப்பு காலோடு வந்து ஆசீர்வாதம் பண்ணவேண்டாம். தேவர்களும், முன்னோர்களும் வந்து வாழ்த்தும் நேரம். உங்கள் எண்ணம் அவர்கள் வாழ்வை வளமாக்கும். வெட்டி பேச்சும் வீணான சிந்தனையும் தவிருங்க. அப்புறம் கிட்டே வந்து அட்சதையை போட்டு ஆசீர்வாதம் செய்ங்க. மொய் எழுதிட்டு சாப்பாட்டுக்கு ஓடும் கூட்டத்தை பார்த்து ! ஏன் ! நானே முண்டியடிச்சிக்கிட்டு ஓடி இருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணலாமே.
Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...