Wednesday, August 15, 2018

மெரினாவில் #இடம் #ஒதுக்கக்கோரி #முதல்வரின் #கையை #பிடித்து #கெஞ்சினேன்.

ஸ்டாலின்.
கோடானு கோடி தொண்டர்களின் மரியாதைக்கும் ஆழ்ந்த அன்புக்கும உரியவராகத் திகழ்ந்தவர்தான் எங்கள் புரட்சித் தலைவி அம்மா...!
ஆனால்... என்ன நடந்தது... அம்மா அவர்கள் 75 நாட்கள் மருத்துவனை வாசத்திற்க்குப் பிறகு திடீரென ஒரு நாள் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டார்.
அந்த வேதனை... கட்சிப் பிளவு... இவைகளால் சராசரி அதிமுக தொண்டன் வேதனையிலும் சஞ்சலத்திலும் மூழ்கி இருந்த சமயம்... ஒரு திடீர் ஆசுவாசம் போல சட்டன்றத்தில் அம்மா அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி வந்து சேர்ந்தது.
உங்களுக்கோ ... உங்கள் கட்சியினருக்கோ அம்மா அவர்களை மற்றவர்களுக்கு பிடித்ததைப் போன்று பிடிக்கனும்... நேசிக்கனும் என்ற கட்டாயமில்லை. அதை யாரும் எதிர் பார்க்கவுமில்லை.
அம்மா அவர்களால் எம்எல்ஏக்கள் ஆன... மந்திரிகளான இன்றைய ஆட்சியாளர்கள் அவருக்கு செலுத்தும் ஒரு சிறிய நன்றிக கடன் போல ... அவரது படத்தை சட்டமன்றத்தில் திறக்க நினைத்தார்கள்.... தவறில்லையே....?
உங்களுக்குப் பிடிக்காவிட்டால் .. நீங்கள் சும்மா இருந்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியைக் கூட புறக்கணித்திருக்கலாம்.
ஆனால் .... நீங்கள் செய்ததென்ன....?
அவர் ஏ-1 குற்றவாளி... அவரது படத்தை சட்டமன்றத்தில் திறக்க ஆட்சியாளர்களை அனுமதிக்க கூடாது...என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது.... நியாயமான செயல்தானா...?
சொல்லுங்கள் செயல் தலைவரே...!!!!
எத்தனை அதிமுக தொண்டர்களின் மனம் இன்று நீங்கள் குமுறியதைப் போல அன்றைக்கு குமுறி இருக்கும்....?
எத்தனை பேர் வேதனைப்பட்டிருப்பார்கள்....?
அதை நீங்கள் உணர்ந்தீர்களா செயல் தலைவரே....?
வயது மூப்பால் உங்கள் தலைவர் சட்டமன்றத்துக்கு வர இயலாமல் இருப்பதால்... அதற்க்கு சிறப்பு அனுமதி கோரி நீங்கள் கொண்டு வந்த சிறப்புத் தீர்மானத்தை இதே எடப்பாடியார் அரசு பாரபட்சமினறி நிறைவேற்றித் தரவில்லையா.. செயல் தலைவரே....?
அப்படி இருந்தும் நீங்கள் படத்திறப்பு விவகாரத்தில் நடந்து கொண்டது முறைதானா..? நியாயம்தானா...?
உங்கள் தலைவர் வயதின் மூப்பில் இருப்பதை ஒரு நிமிடம் கவனத்தில் கொண்டாலாவது நீங்கள் இதைத் தவிர்த்திருக்கலாம்.
இனியாவது... அடுத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் ... பிறரது உணர்வுகளைக் காயப்படுத்தாமல் நீங்களும் உங்களது தொண்டர்களும் செயல்படுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...