Tuesday, August 28, 2018

ஒரு கதை கேள்விப்பட்டிருப்பீங்க...!

ஊரில் யாரும் ஜெயிக்க முடியாத மிகப் பெரிய பயில்வான் இருந்தானாம். அவனை ஜெயித்தால் தன் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதாக மன்னர் அறிக்கை விட்டிருக்கிறார். அந்தப் பொண்ணுக்கு பயந்தோ, இல்லை பயில்வானுக்கு பயந்தோ யாரும் போட்டியை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரிதாக சண்டைப் பயிற்சி இல்லாத சுமாரான உடல்வாகுள்ள ஒருத்தன் போட்டிக்கு நான் தயார். ஆனால், எனக்கு ஒரு மாதம் அவகாசம் வேண்டும். ஒரு மாதம் கழித்த பின் நான் சண்டைக்குக் கூப்பிடும் போது ஏதேனும் காரணம் சொல்லி போட்டியை விட்டு பயில்வான் விலகக் கூடாது என்று நிபந்தனை போட்டானாம். பயில்வானும் மன்னனும் ஒப்புக்கொண்டனர்.
நண்பர்களெல்லாம் துக்கம் விசாரிச்சிருக்காங்க... உனக்கு அறிவிருக்கா? அவனிடம் மோதி உயிரோட எப்படி வருவெ?
நான் ஜெயிப்பது உறுதி. நான் சொல்வது போல் நீங்கள் எனக்கு உதவி செய்தால் என்றானாம் இளைஞன். நண்பர்கள் ஒப்புக் கொண்டனர்.
முதல் வாரம் :
சில நண்பர்களை விட்டு வேறு வேறு சூழ்நிலையில், பயில்வானைத் தற்செயலாகப் பார்க்கச் செய்து என்ன பயில்வான்... கண்ணு ஏதோ மஞ்சளா இருக்கே உடம்புக்கு முடியலையா? என்று கேட்கச் செய்தான். பயில்வான் அடிக்கடி கண்ணாடியைப் பார்க்க ஆரம்பித்தான். லேசாக வருத்தமும் பட்டான்.
இரண்டாம் வாரம்:
என்ன பயில்வான் உங்க உடம்பு பழைய மாதிரி இல்லையே? உடம்புக்கு முடியலையா? தளர்ச்சியா இருக்கீங்களேனு சிலரை விட்டு கேட்கச் செய்தான்.
மூன்றாவது வாரம்:
பயில்வானுக்கு மஞ்சள் காமாலை. உடல்நலம் இன்றி மெலிந்து விட்டார். பழங்களைத் தவிர வேறேதும் சாப்பிடக் கூடாதுனு மருத்துவர் சொல்லி விட்டார் என்று ஊர் முழுவதும் பரப்பி விட்டான்.
நான்காவது வாரம் :
மஞ்சள்காமாலை மிகவும் முற்றி விட்டது. இனி பயில்வான் பிழைப்பதே கடினம் என்று பயில்வான் உட்பட எல்லோருக்கும் செய்தியை நம்பும்படி செய்தான்.
விளைவு....? பயில்வான் நிஜமாகவே அதை நம்பி மிகவும் தளர்ந்து போட்டிக்கு வராமலேயே தோற்று விட்டார்.
ம்ம்ம்... அப்புறம் முக்கியமான ஒரு விஷயம்... இதையும் தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் யாரும் கற்பனை செய்து ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...