உலகத் தொழில் ஆய்வு ஆலோசகராக பயிற்சி பெற்று வரும் பிரபு பேசுகிறேன்.
எனது வியாபார வளர்ச்சி சந்திப்புகளில், என்னிடம் அதிகம் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு, தொழில் வியாபார விரிவாக்கம் தொடர்பாக நான் கூறிய ஆலோசனைகளைக் கொண்டு இங்கு பதிவிடுகிறேன்.
"தொழில் தொடர்புகளால் மட்டுமே ஒரு தொழில் விரிவடையும்."
நமது ஆசிய சந்தையில் மிகப்பெரிய வியாபார சக்திகளாக இருப்பவர்கள் இந்தியர்கள். ஆனால் சில்லறை வர்த்தகத்தில் சீனர்களுடன் போட்டி போடுவது மிகக்கடினம்.
அவர்களின் ஒன்றுபட்ட வியபார ஒற்றுமையே அவர்களின் இத்தனை பெரிய வெற்றிக்குக் காரணம்.
இந்திய தொழிலதிபர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். இங்கு அனைத்து பெரிய வியாபாரங்களும் அவர்களுக்குள் மட்டுமே நகர்கின்றன. ஆனால் சீனர்களின் சில்லறை வர்த்தகத்தின் பெரும் தொழிலதிபர்களை எண்ணிவிடுவது என்பது முடியாது.
அம்பானி, அதானி, டாடா மற்றும் ஆதித்யா பிர்லா குடும்பம் போன்ற பெயர் தெரிந்த இந்திய தொழில் மேதைகள் உலகெங்கும் தங்களுக்கென தொழில் ஆளுமைகளை எல்லாம் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் தனிக்காட்டு ராஜாக்கள் என்றால், சீனர்கள் குழுக்களாக கூட்டமாக இணைந்து உலகத்தில் தங்களுக்கென எல்லைகளை விரித்து வெற்றி பெறும் வியாபார ராஜ தந்திர நரிகள்.
இங்கு தமிழர்களின் தொழில்துறையைப் பற்றிப் பேசவேண்டுமானால், நம்மை பொருத்தவரை 80% தமிழ் தொழில் முனைவோர்களுக்கு நீண்டகால தொழில் திட்டமென்ற ஒன்று கிடையாது.
தொழில் தொடர்பு விரிவாக்கம் (Business Contacts Establishments Factors) என்ற தொழில்கலை நுணுக்கம் தெரியாது. அடுத்த மூன்று வருடத்திற்க்கு மேல் அவர்களின் தொழில் நகர்வைப் பற்றிய தெளிவு அவர்களிடம் கிடையாது.
தென் இந்திய தொழில் முனைவோர்களின் சாதனையாளர் பட்டியல் சொற்ப எண்ணிக்கையில் காலியாகவே இருக்க, தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடுதல்களின் முக்கியத்துவமும், வழிகாட்டுதல்களும் பெரும்பாலானோர்க்கு புரியாமல் போனதே மிகப்பெரிய காரணம்.
பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து நகரும் நமக்கு வணிக கட்டமைப்பை உருவாக்கும் வழிமுறைகள் தெரியாமல் போனது ஒன்றும் அதிசயமில்லை. இலாபத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படும்படியான அரசின் தொழில் கொள்கைகள், முதலீட்டு கடன் மற்றும் பொருளாதார வாய்ப்புகள், சந்தைப்படுத்துதலின் சிக்கல்கள் என பலதும் நமது நாளைய வியாபார திட்டமிடுதலை பாதிக்கும் காரணிகளாக இங்கு இருக்கவே செய்கிறது.
எப்படி தொழிலை திட்டமிட வேண்டும்? ஏன் திட்டமிட வேண்டும்? சந்தைப்படுத்தலை எப்படி வெற்றிகரமாக செய்வது?
ஒரு சிறு தொழிலை திட்டமிடுவது என்பது, அதன் வளர்ச்சியை திட்டமிடுவதே தவிர அதன் இலாபத்தை திட்டமிடுவதல்ல.
எப்பொழுது நம் தொழிலின் மாத வருட மற்றும் பத்தாண்டு முன்னற்றத் திட்டங்கள் நம் கைகளில் இருக்கிறதோ அன்றே நமது தொழில் வளர தொடங்குகிறது என்று பொருள்.
அப்படிப்பட்ட தொழில் விரிவாக்கத் திட்டத்தை தயார் செய்து அதனை நடைமுறை வணிகத்துடன் ஒன்றிணைக்கும் (Merging Plans) போது உங்களின் வியாபார வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. அன்று இலாப விகிதமும் உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் வங்கிக் கணக்கில் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
ஒரு நல்ல தொழில் முனைவோராக நீங்கள் பயணிக்க "ஒரு தொழில் ஒரே நாளில் வளர்ந்துவிடாது" என்ற மந்திரத்தை அடிக்கடி சொல்ல ஆரம்பியுங்கள்.
வளர்ந்த பிறகு "வியாபாரம் என்பது ஒரே நாளில் வீழ்ந்துவிடக்கூடியது" என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.
இங்கு தொழில் என்பது நீங்கள் கட்டமைக்கும் வணிக கட்டமைப்பு. வியாபாரம் என்பது இலாப நஷ்டம் சம்மந்தப்பட்டது.
என்னிடம் பேச முயற்ச்சிக்கும் நிறைய தொழில் முனைவோர்கள், நான் பேச ஆரம்பிக்கும் முன்னமே அவர்களின் அனைத்து பொருட்களையும் என்னிடம் ஒப்பித்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள்.
ஒரு பொருளை கொள்முதல் செய்வதோ, முதலீடு செய்வதோ அல்லது தயாரிப்பது மட்டுமோ உங்களை ஒரு சிறந்த வியபாரியாக மாற்றிவிடாது.
பொருளை சந்தைப்படுத்துதலையும் (Marketing), வளர்ச்சிப்படுத்துதலையும் (Promotion) ஒன்றிணைந்த்த கலையே ஒரு தொழிலின் ஆணிவேர்.
உங்களின் பொருள் அல்லது சேவை உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், சந்தைக்கு (Selling Market) அது வெறும் விற்பனைக்காக வந்த பொருள்(Product).
வியபார தொடர்புகளிடம் சரியான சந்திப்பு அணுகுமுறையை (Business Approach) கையாண்டு, உங்கள் பொருளின் தனித்தன்மையை நோக்கி அவர்களின் கவனத்தை ஈர்க்கச்செய்து பின்பு சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை ஒவ்வொன்றாக (Marketing Opportunities) உருவாக்குபவர் மட்டுமே சிறந்த தொழில் முனைவோராக வெற்றி பெற முடியும். தவிர, மொத்தமாக கூவி விற்ப்பவர்கள் அல்ல.
ஒன்றுமே இல்லாத ஒரு பொருளை சீனர்கள் இடத்திற்கு தகுந்தார் போல விற்பார்கள். நாம் அப்படியில்லை. "Target Audience" என்ற வார்த்தையே நம்மூரில் பெரும்பாலும் தெரிவதில்லை.
தரமான சரியான பொருளாக அது இருந்தாலும் அதனை தொடர்புகளை விரிவாக்கி (Contacts Utilization) சந்தைப் படுத்தத் தெரியாமல், உள்ளூர் வணிக இடையூறுகளை யோசித்து உட்கார்ந்திருந்தால் ஒன்றும் நடக்காது.
இதையெல்லாம் ஒவ்வொன்றாக சரி செய்ய, உங்களது பொருளின் "End Consumer" யார்? அவர்களை எப்படி ஈர்ப்பது? எப்படி இடத்திற்க்குத் தகுந்தாற்போல் உங்கள் பொருளை சந்தைப் படுத்துவது? எப்படி "Presentation Aspects" - ஐ கையாள்வது என்று ஒவ்வொன்றாக புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே ஒவ்வொரு தமிழர் தொழிலும், அதனால் தமிழர் பொருளாதரமும் உயர ஆரம்பிக்கும். அதற்கான முயற்ச்சியில் தொடர்ந்து நாம் இருப்போம்.
No comments:
Post a Comment