Wednesday, June 19, 2019

உண்மை உண்மை முற்றிலும் உண்மை. அரசை ஏமாற்றுவதாக தன்னை மாற்றிக் கொண்டனர்.

ஒரு நாட்டில் ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தார். அவர் தன் மக்கள் அனைவரும் மிக யோக்கியம் / நேர்மை
என நம்பினார்.
இதை தன் மந்திரிகளிடமும் அடிக்கடி கூறுவார்.
இதில் கடுப்பான மூத்த மந்திரி ஒருவர்
"அரசே நீங்கள் நினைப்பது போல எல்லாம் மக்கள் கிடையாது, சந்தர்ப்பம் கிடைத்தால் அனைவரும் தவறு செய்ய தயங்க மாட்டார்கள்" என கூறினார்.
மன்னர் இதை ஒப்பு கொள்ள வில்லை.
இதை நிரூபிக்க வேண்டும் என மந்திரிக்கு கட்டளை இட்டார்..
மந்திரியும் ஒப்பு கொண்டார்.
..
சில நாட்களில் அரசர் ஒரு ஆணையிட்டார்..
" நம் ஊர் கடவுளுக்கு பெரிய அளவில் பால் அபிஷேகம் செய்ய இருக்கிறோம்.
எனவே மக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பாக ஒரு செம்பு பால் தர வேண்டும். இதற்காக ஊரின் நடுவே ஒரு மேடை அமைக்க பட்டு மக்கள் எட்டி பார்க்க இயலாத உயர பெரிய அளவு பானை இருக்கும். அதை சுற்றி திரையும் கட்ட பட்டிருக்கும், மக்கள் அனைவரும் வந்து அந்த பானையில் பால் ஊற்ற வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
அந்த நாளும் வந்தது.
மக்கள் அனைவரும் கையில் துணியால் சுற்றி மூடிய செம்புடன் வரிசையில் நின்று காத்திருந்தனர்.
ஒவ்வொரு நபராக மேடை ஏறி , வேறு யாரும் எட்டி பார்க்க முடியாத அந்த பானையில் ஊற்றி வந்தனர்..
...
எல்லோரும் ஊற்றி முடிந்த பிறகு, திரைகள் நீக்க பட்டு , மன்னரும் அந்த மூத்த மந்திரியும் மேடை ஏறி அந்த பானையை எட்டி பார்த்தார்கள்.
அதை பார்த்த மன்னருக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது.
மந்திரிக்கு சிரிப்பு பொங்கி வழிந்தது.
காரணம் அந்த பானை முழுக்க
பச்சை தண்ணீர் தான் நிரம்பி இருந்தது...
...
காரணம் ஊரே பால் ஊற்றும் போது, நாம் ஒருவர் மட்டும் தண்ணியை ஊற்றினால் தெரியவா போகுது...?
என நினைத்து எல்லா பயலும் பச்சை தண்ணிய ஊத்தி இருக்கிறார்கள்.
...
இப்படிதான் இருக்கிறது நம் நேர்மையும்
.
.
.
.
குடிநீர் பஞ்சம் என்று , அரசை குறை கூறுபவர்கள் எத்தனை பேர், அரசு கூறிய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தங்கள் வீடுகளில் செய்துள்ளீர்கள்.....?
....
அதிலும் சில / பல பேர் வெறும் ஒரே ஒரு துண்டு PVC குழாயை சுவற்றில் பொருத்தி, ஒரே ஒரு cement உரையை தரையில் பதித்து அதில் கொஞ்சம் ஜல்லியை போட்டு, மழை நீர் சேகரிப்பு அமைப்பை தங்கள் வீடுகளில் செய்து விட்டதாக கூறி ஃபோட்டோ எடுத்து உள்ளூர் நிர்வாகத்திடம் கொடுத்து போலியாக கணக்கு காட்டியவர் உங்களில் எத்தனை பேர்....?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...