Wednesday, June 19, 2019

காங்கிரஸ் கட்சிக்கு திருப்பி அளிக்கும் பிஜேபி.

குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டு
ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தலை தனித்
தனியாக நடத்த தேர்தல் கமிசன் உத்தரவிட்டுள்
ளதால் இரண்டு ராஜ்யசபா இடங்களும் பிஜேபி
க்கே கிடைக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிற து.
கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ராஜ்ய
சபா தேர்தலில் வெற்றி பெற்று ராஜ்யசபா எம்பி
யாக இருந்த அமித்ஷா வும் ஸ்மிருதி இரானியும்
லோக்சபா மூலமாக காந்திநகர் மற்றும் அமேதி
தொகுதிகளில் இருந்து தேர்வாகி விட்டதால் அவர்கள் வகித்த ராஜ்ய சபா எம்பி பதவிகளை
ராஜினாமா செய்து விட்டனர்.
இதனால் இந்த இரண்டு இடங்களுக்கு ம் தேர்தல்
நடைபெற இருக்கிறது. நியாயப்படி தேர்தல் நடை
பெற்றால் பிஜேபி காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு ம்
தலா ஒரு இடம் உறுதி என்கிற நிலையே நேற்று
வரை இருந்து வந்தது. ஆனால் தேர்தல் கமிசன்
இந்த இரண்டு இடங்களையும் தனித்தனியாக
மே 28 மற்றும் மே 29 தேதிகளில் காலியானது
என்று அறிவித்ததால் இரண்டு இடங்களுக்கும்
தனித்தனியாக தேர்தலை நடத்துவதற்கு எந்த .
தடையும் கிடையாது.
182 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குஜ ராத்தில் பிஜேபி க்கு 104 எம்எல்ஏக்களும் காங் ரஸ்ஸ் கட்சிக்கு 70 எம்எல்ஏக்களும் இருக்கிறார்
கள்.குஜராத்தை பொறுத்தவரை ஒரு ராஜ்ய சபா
சீட்டுக்கு 60 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்ப டுவதால் பிஜேபி இரண்டு ராஜ்யசபா சீட்டுகளை
யும் தக்க வைக்க வேண்டும் என்றால் பிஜேபிக்கு
120 எம்எல்ஏ க்களின் ஆதரவு வேண்டும்.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதா ல் இப்பொழுது உள்ள நிலையில் பிஜேபி காங்கிர ஸ் இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் உறுதி
யாக கிடைக்கும் என்கிற நிலையே இருந்த்து.ஆ
னால் இப்பொழுது குஜராத்தில் ராஜ்யசபா தேர்
தல் இரண்டு இடங்களுக்கு ம் தனித்தனியாக ஜூலை 5 ல் நடைபெற இருப்பதால் இரண்டு இ டங்களும் பிஜேபிக்கு தான் என்பது உறுதியாகி விட்டது.
உடனே இதெல்லாம் நியாயமா? தர்மமா? என்றெ
எல்லாம் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆனால்
காங்கிரஸ் 2009 ஜூன் மாதத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் காலி யாக இருந்த இரண்டு ராஜ்ய சபா இடங்களுக்குதனித்தனியாக தேர்தலை நடத்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று
பிஜேபிக்கு தண்ணி காட்டிய வரலாறு எல்லாம்
இருக்கிறது.
நியாயப்படி 2009 ஜூன் மாதத்தில் ஜார்கண்ட் டில்
நடைபெற்ற ராஜ்யசபா இடைத்தேர்தலில் இர ண்டு நோட்டிபிகேசனை அளித்து தனித்தனியாக
தேர்தலை நடத்தி பிஜேபிக்கு கிடைக்க இருந்த
ஒரு ராஜ்யசபா சீட்டையும் காங்கிரஸ் பறித்த
வரலாறு இருக்கிறது.
அதனால் நியாயம் தர்மம் என்றெல்லாம் யாரும்
பேச வேண்டாம். இது எங்களுடைய காலம் அன்று
பட்ட அடிகளுக்கு திருப்பி பதிலடி அளிக்கிறோம்
குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலை தனித்தனியாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்
டுக்கு காங்கிரஸ் சென்றுள்ளது.
ஆனால் இதே மாதிரி 2009 ல் ஜார்கண்ட் டில் தனித்தனியாக நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை
தடுக்க உச்சநீதிமன்ற ம் சென்ற பிஜேபிக்கு உச்ச
நீதிமன்றம் போய் வேறு வேலை ஏதாவது இருந்
தால் பாருங்கள் என்று கூறியுள்ள முன் உதார ணம் இருப்பதால் இப்பொழுதும் அதுவே நடை பெறும் என்று நம்பலாம். பார்ப்போம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...