Wednesday, June 26, 2019

சபரிமலை விவகாரத்தால் தான் தோல்வி; ஒப்புக்கொண்டது மார்க்சிஸ்ட் கம்யூ.,

 'சபரிமலை விவகாரத்தால் தான், கேரள லோக்சபா தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படுதோல்வி அடைந்தது' என, அக்கட்சி கண்டறிந்துள்ளது.





நடந்து முடிந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, கேரளா மாநிலத்தின், மொத்தமுள்ள, 20 இடங்களில், ஒரு இடத்தில் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றது. 19 இடங்களில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றன. தேர்தல் தோல்வி குறித்து ஆராய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய கமிட்டியின், இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டம், திருவனந்தபுரத்தில் நடந்தது.

அதில், தெரிவிக்கப்பட்டுள்ள முடிவுகளாவன: சபரிமலை விவகாரத்தில், நம் கட்சி எடுத்த முடிவு தான், தேர்தலில் தோல்வியை அளித்துள்ளது. குறிப்பாக, நம் கட்சி ஆதரவு பெண்களான, கனகதுர்கா மற்றும் பிந்து, சபரிமலைக்கு சென்றது தான், தோல்விக்கு முக்கிய காரணம். சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயது பெண்கள் செல்ல தடை இருந்த நிலையில், அதை தகர்த்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, முதலில் ஏற்ற, காங்., மற்றும் பா.ஜ., பின், நிலையை மாற்றிக் கொண்டன.




அவ்விரு கட்சிகளும், ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரம், தேர்தலில் எதிரொலித்துள்ளது. எனினும், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.,வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றியாக கருதப்படுகிறது. நாம் மேற்கொண்ட பிரசாரம் தான், பா.ஜ.,வுக்கு தோல்வியை பெற்றுத் தந்துள்ளது. இவ்வாறு, அந்த கட்சி தெரிவித்துள்ளது. இதே கருத்தையே, மாநிலத்தை ஆளும், முதல்வர், பினராயி விஜயன், ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...