Thursday, June 27, 2019

தி.மு.க.,வில் சேருகிறார் தங்க தமிழ்செல்வன்?

அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தங்க தமிழ்செல்வன், இன்று, தி.மு.க.,வில் சேருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
dmk,தி.மு.க.,சேருகிறார்,தங்க தமிழ்செல்வன்?

லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பின், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கடும்  மோதல் ஏற்பட்டது. தினகரனை கடுமையாக விமர்சித்து, தங்கதமிழ்செல்வன் பேசிய, 'வீடியோ' வெளியானது. இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கப் போவதாக, தினகரன் அறிவித்து உள்ளார்.


இந்நிலையில், தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க., வில் சேருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை சேர்க்க, அ.தி.மு.க.,வில் கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. தேனிமாவட்ட அ.தி.மு.க.,வினர், அவரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.


இதையடுத்து, தங்க தமிழ்செல்வன், தி.மு.க.,வில்  இணைய உள்ளதாக தெரிகிறது. சென்னையில் இன்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அக்கட்சியில் சேரப் போவதாக வும், பின், இணைப்பு விழாவை, தேனியில் பெரிய அளவில் நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...