Sunday, June 23, 2019

சூடா டீ குடிச்சதும் நாக்கு புண்ணாகிடுச்சா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்...

இன்றைய அவசர உலகில் நாம் அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும் அவசரத்தில் எல்லாமே அவசரமாக செய்வது வழக்கம்.
இதில் நாம் காலை எழுந்ததும் அவசர அவசரமாக டீ அல்லது காப்பி குடிக்கும்போது நாக்கு வெந்துபோய் புண்ணாகிவிடும்.

அதுமட்டுமின்றி ஒருவரது நாக்கு வெந்து போய்விட்டால், சுவைமொட்டுக்கள் பாதிக்கப்பட்டு, உணவின் சுவை தெரியாமல் போகும் என சொல்லப்படுகின்றது.
இதனால் எந்த ஒரு உணவையும் சரியாக சாப்பிட முடியாமல், நாக்கு ஒருவித எரிச்சலுடனேயே காணப்படும்.
அந்தவகையில் சூடான உணவுப் பொருளால் வெந்து போன நாக்கை விரைவில் சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
நாக்கு வெந்து இருந்தால், ஐஸ் கட்டிகள், ஐஸ் க்ரீம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் குடியுங்கள்.
நாக்கில் உள்ள காயத்தை சரிசெய்ய வெதுவெதுப்பான உப்பு நீரை வாயில் ஊற்றி 30 நொடிகள் கொப்பளித்து, பின் துப்புங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், நாக்கில் உள்ள புண் குணமாகிவிடும்.
நாக்கு சூடான உணவுகளை உட்கொண்டு வெந்து போயிருந்தால், தேனை நாக்கில் தடவி சிறிது நேரம் உட்காருங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள்.
கற்றாழை ஜெல்லை வெந்து போன நாக்கில் ஒரு நாளைக்கு பலமுறைத் தடவுங்கள். இல்லாவிட்டால் கற்றாழை ஜெல்லை ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைத்து, பின் அதை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.
1/2 கப் தயிரை குளிர வைத்து, அதனை மெதுவாக சில நொடிகள் வாயில் வைத்தவாறு சாப்பிடுங்கள். இப்படி ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள். இதனால் நாக்கில் உள்ள புண் விரைவில் குணமாகும்.
1 டீஸ்பூன் சர்க்கரையை நாக்கில் உருகும் வரை வைத்திருக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்ய நாக்கு புண் சரியாகும்.
புதினாவை அரைத்து நாக்கில் தடவி சில நிமிடங்கள் உலர வைத்து, பின் குளிர்ந்த நீரால் வாயைக் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள்.
வெஜிடேபிள் கிளிசரினை நாக்கில் தடவி, சிறிது நேரம் அப்படியே உட்காருங்கள். பின் குளிர்ந்த நீரால் வாயைக் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்யுங்கள். இல்லாவிட்டால் கிளிசரின் வகை மௌத் வாஷைக் கொண்டு ஒரு நாளைக்கு பலமுறை வாயைக் கொப்பளியுங்கள்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...