Friday, June 21, 2019

ரூ.5 கோடி கடனுக்கு 100 கோடி சொத்து ஏலமா?: வங்கி கடனாளி ஆனார் விஜயகாந்த்.

வங்கி கடனை அடைக்காததால், விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லுாரி ஏலத்திற்கு வந்துள்ளது.
 வெறும் ரூ.5 கோடி, கடனுக்கு,  100 கோடி ,சொத்து ஏலமா?,வங்கி கடனாளி, ஆனார், விஜயகாந்த்

சென்னை, சாலிகிராமம், கண்ணபிரான் காலனியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் வீடு உள்ளது. இந்த வீடு மற்றும் நிலத்தின், தற்போதைய சந்தை மதிப்பு, 3.04 கோடி ரூபாய். இதேபோல, அவருக்கு சொந்தமாக, காவேரி தெரு மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள நிலம், குடியிருப்பு மற்றும் வணிக கட்டத்தின் மதிப்பு, 4.25 கோடி ரூபாய்.


காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூரில், 24 ஏக்கரில் உள்ள, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லுாரியின் கட்டடம் மற்றும் நிலத்தின் மதிப்பு, 92.05 கோடி ரூபாய். ஆண்டாள் அழகர் கல்வி அறக்கட்டளை சார்பாக, சென்னை, அண்ணா சாலையில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளது. கடனை முறையாக செலுத்தாததால், 5.25 கோடி ரூபாய் பாக்கி வைக்கப்பட்டு உள்ளது.


இந்த கடனை பெறுவதற்கு, ஆண்டாள் அழகர் கல்வி அறக்கட்டளைக்கு, விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் ஜாமீன்தாரர் களாக இருந்துள்ளனர். எனவே, கடனை செலுத் தாதால், கடனீட்டு சொத்துகளை ரொக்கமாக்கு தல் விதியின் கீழ், விஜயகாந்தின் சொத்துக் களை ஏலம் விடுவதற்கு, ஐ.ஓ.பி., முடிவெடுத்து உள்ளது.இது குறித்த அறிவிப்பு, விளம்பரமாக முறைப்படி வெளியிடப்பட்டு உள்ளது. வரும், 26ல், வங்கி வளாகத்தில், இந்த ஏலம் நடக்கவுள்ளதாக தெரிகிறது. 



விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலத்திற்கு  வந்துள்ளது, அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தே.மு.தி.க., தலைமை நிர்வாகிகள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.


இதெல்லாம் நம்பற கதையா?


சமீபத்திய லோக்சபா தேர்தலில், ஆளும் கட்சியுடன் கூட்டு சேர, தே.மு.தி.க., தரப்பில் பேரம் பேசப் பட்டதாக புகார் எழுந்தது. தற்போது, சொத்துக்களை விற்கும் நிலையில் இருப்பதாக காட்டினால், தேர்தலில், விஜயகாந்தும், பிரேமலதாவும் ஆதாயம் அடையவில்லை என்ற எண்ணம் தோன்றும். இதற்காகவே சொத்துக்கள் ஏலம் என்ற, நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம் என, தே.மு.தி.க.,வினர் கூறுகின்றனர்.


அவர்கள் மேலும் கூறியதாவது:விஜயகாந்த் கண் அசைத்தால், அவரது கடனை அடைக்க, அவரின் நண்பர்கள் தயாராக உள்ளனர். கல்வி அறக்கட்டளைக்கு, 5 கோடி ரூபாய் கடன், பெரிய விஷயம் இல்லை.வாங்கிய கடனை விட, ஏலத்திற்கு வந்துள்ள சொத்துக்களின் மதிப்பு, பல மடங்கு அதிகம். சமீபத்தில், விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள படத்திற்கு, பூஜை போடப்பட்டுள்ளது. கடன் தொகையை விட, மிக அதிகமாக, இந்த படத் தயாரிப்புக்கு முதலீடு செய்யப்படவுள்ளது.


விஜயகாந்தின் மைத்துனர், சுதீஷ், மாதவரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்று வருகிறார். இதில், இரண்டு குடியிருப்புகளை விற்றாலே, கடனை செலுத்தி விடலாம். எனவே, விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலத்திற்குவந்துள்ளதாக கூறுவது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சாதாரண 'பைவ் சி' பிரச்னை தான்!
 
தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கூறினார். சென்னை சாலிகிராமம் வீட்டில் அவர் அளித்த பேட்டி:ஆண்டாள் அழகர் கல்லுாரியின் மேம்பாட்டிற்காக இந்த கடனை வாங்கினோம்; கடனை முறையாக செலுத்தி வருகிறோம். இப்போது கல்லுாரியில் 'அட்மிஷன்' நடக்கிறது. இரண்டு மாதம் அவகாசம் அளித்தால் கடனை செலுத்துவதாக வங்கியில் தெரிவித்தோம். அவர்கள் ஏற்காமல் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 



எங்கள் கல்லுாரிக்கு மட்டுமல்ல; மாநிலம் முழுவதும் உள்ள 300 பொறியியல் கல்லுாரிகளின் நிலைமை இது தான். நல்லவர்களுக்கு பிரச்னை வரும்; இறுதியில் தர்மம் வெல்லும். தர்மருக்கே சோதனை வந்தது நம் அனைவருக்கும் தெரியும். இது சாதாரண 'பைவ் சி' பிரச்னை தான். வெறும் ஐந்து கோடி ரூபாய் தான். அதற்கு சட்ட ரீதியாக விரைவில் தீர்வு காண்போம். 



விஜயகாந்தின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவர் இப்போது சினிமாவில் நடிப்பது இல்லை. திருமண மண்டபம் இடிக்கப்பட்டதால் நிரந்தர வருமானம் இல்லை; கல்லுாரி வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. மூத்த மகன் இப்போது தான் தொழிலை ஆரம்பித்துள்ளார்.

இளைய மகன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து உள்ளார். எப்பாடு பட்டாவது இந்த கடனை நாங்கள் அடைப்போம். இந்த சோதனையில் வெற்றி பெறுவோம். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...