Sunday, June 23, 2019

எந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம்.

எந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம்

















வாரத்தில் உள்ள 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. ஆகவே எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

திங்கள் : திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாளாகும். ஆகவே திங்கட்கிழமைகளில் சிவனை வேண்டி அவருக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது சிறந்தது. அதோடு நீலகண்டனுக்கு விரதம் இருந்தால் பல நலன்களை பெறலாம்.

செவ்வாய் : செவ்வாய் கிழமை துர்க்கை, முருகன் மற்றும் அனுமனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், வாழ்வில் வளம் பெருகும். மேலும் முருக பெருமானை நினைத்து கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் நவகோள்கள் மகிழ்ந்து நன்மையளிக்கும்.

புதன் : புதன் கிழமை விநாயக பெருமானுக்கு உகந்த நாளாகும். எனவே புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாட்டு வந்தால் எந்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்

வியாழன் : வியாழன் கிழமை விஷ்ணு, தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்த நாளாகும். எனவே வியாழக்கிழமை அன்று தட்சணாமூர்த்தி மற்றும் இரண்டு தெய்வங்களை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது சிறந்தது.

வெள்ளி : வெள்ளிக்கிழமை துர்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஆகவே வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து துர்கை அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

சனி : நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. அதோடு ஆஞ்சநேயர், பெருமாள், காளி தேவி ஆகிய தெய்வங்களுக்கும் சனிக்கிழமை உகந்த நாளே. ஆகையால் சனிக்கிழமை அன்று சனிபகவானையும் மற்ற தெய்வங்களையும் வழிபடுவது சிறந்தது.

ஞாயிறு : நவகிரகங்களில் முதன்மையான கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு ஞாயிறு என்று மற்றொரு பெயரும் உண்டு. ஞாயிற்று கிழமைகளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் வழக்கை பிரகாசமாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...