சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் 2007-நவம்பர் மாதத்தில் இருந்து தனது போக்குவரத்தை தொடங்கியது. அதன் பிறகு அங்கு ஏராளமான கடைகள் , வீடுகள் புற்றீசல் போல முளைத்தன. இது பிரபல சென்னை சில்க்ஸ் துணிக்கடை வரை தொடர்ந்தது.
12 வருட காலங்கள் மெளனமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு தற்போது அனைத்து கட்டிடங்களையும் இடிக்கும் பணி நடக்கிறது. சென்னை சில்க்ஸ் இடிபடுமா அல்லது பணத்தால் சமாளிக்குமா? தெரியவில்லை.
இத்தனை ஆண்டுகள் அரசாங்கம் , அரசு அதிகாரிகள் என்ன செய்தார்கள்? அனுமதியின்றி எப்படி கட்டிடங்கள் உருவாகின? இப்போது எத்தனை குடும்பங்கள் பாதிப்படையும்? மக்கள் மற்றும் அரசின் பொறுப்பில்லாத்தனம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்குமா?
No comments:
Post a Comment