Thursday, June 27, 2019

தமிழக சட்டசபை கூடியது- மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல்.

தமிழக சட்டசபை கூடியது- மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல்
















தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற்றது. விவாதத்துக்கு பிப்ரவரி 14-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த மே 30-ந் தேதி பிறப்பித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது. 

சபை கூடியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ்சவர்ணம், ஏ.சுப்பிரமணியம், ந.செல்வராஜ், ஏ.கே.சி.சுந்தரவேல், மு.ராமநாதன், பொ.முனுசாமி, சா.சிவசுப்பிரமணியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. 

மேலும், எம்.எல்.ஏ.க்கள் கனகராஜ் (சூலூர்), ராதாமணி (விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்தும், சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...