எவனோ ஒருவன் செயின் அறுத்துட்டான்னு சொல்லி ஒரு புகார் வந்தவுடன், புகார் கொடுத்தவங்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு மேலதிகாரிங்ககிட்ட தகவல் சொல்லி திட்டும் வாங்கிட்டு இரவென்றும் பகலென்றும் பாராமல் பசித்த வயிற்றோடும், தூக்க கலக்கத்தோடும் தூக்கம் வராமல் மோப்ப நாய் போல அலைந்து திரிந்து செயின் அறுத்த நாயை பிடிச்சு நகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைச்சா இதுக்கு இத்தனை நாளான்னு ஒரு நக்கலான கேள்வியை கேட்டுட்டு நகையை வாங்கிகிட்டு நடையை கட்டிவிடுவார்கள் கூண்டில் ஏறி சாட்சி கூட சொல்ல வர மாட்டேன் என்று.
சரிதான்னு நகையை பறித்த நாயை கைது பண்ணி ஜெயில்ல போட்டுட்டு வருவோம்.
அன்றைக்கே அவன காப்பாத்த வக்கீல் வருவாரு. அவனை ஜெயில்ல போட்ட அன்னைக்கே நீதிமன்றத்துல பெயிலும் போடுவாரு, அவனை 5~ஆம் நாளிலே வெளியே போய் சம்மந்தபட்ட காவல்நிலையத்துல கையெழுத்து போடுன்னும் சொல்லுவாரு நீதிபதி.
அவன் வரும்போதே ஒரு பெண்கிட்ட செயின் அறுத்துட்டு வந்து வக்கீல் பீஸ் குடுத்துட்டு தலைமறைவாயிருவான் மறுபடியும் காவல்துறை கையெழுத்து போட வரவில்லை என்று அறிக்கை சமர்பிக்கனும் உடனே நீதிபதி வாரன்ட் போட்டு 7 நாள்ல பிடிங்கன்னுவாரு மறுபடியும் அலைஞ்சி திருஞ்சி தேடி காவலர்கள் அவன பிடிக்க போனா அவன் கத்திய வச்சு காவலரை வெட்டுவான்.
வெட்டும் வாங்கி கஷ்டபட்டு பிடிச்சு நீதிமன்றத்துல நிப்பாட்னா வாய்தா போட்டு நீதிபதி அவன வீட்டுக்கு அனுப்பிறுவாரு அவன் அடுத்த வாய்தாவுக்கு வரமாட்டான்.
உடனே மறுபடியும் வாரன்ட் போட்டு பிடிங்கனுவாரு அவன் அதுக்குள்ள 10"பேர்கிட்ட செயின் அருப்பான் அவன ஏன் பிடிக்கலைனு நீதிபதி காவல்துறையினரை நீதிமன்றத்துல நிக்கவெச்சு எல்லோர்க்கும் முன்னாடியும் காவல்துறை தூங்குகிறதான்னு கேவளமா பேசுவாரு. அதுக்கு அப்றம் தனிப்படை அமைச்சு தேடி கஷ்ட்டபட்டு புடிப்போம்.
புடிச்சாந்து ஒப்படைச்சா போலீஸ் உங்களை அடிச்சாங்களான்னு அவனை மரியாதையா கேட்டுட்டு அவரே அவனை பெயில்ல விடுவாரு.
அப்போ அந்த நாய் எங்களை பார்க்கிற பார்வையில் தெரியும் இப்போ என்ன கிழிச்சீங்கன்னு. அவனாவது பரவாயில்லை ஆனா அதே சமயத்தில அந்த நீதிபதியும் எங்களை பார்க்கிற பார்வை இருக்கே?
இன்னைக்கு எனக்கிது டைம்பாஸ்டா போங்கடா போலீஸ் நாய்களா என்பது போல இருக்கும். அவர் என்ன செய்வாரு தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்று சும்மாவா சொன்னாங்க.
ஏற்கெனவே பொய்யை சொல்லி பொழப்பு நடத்தி வக்கீலா இருந்து நீதிபதி ஆகியிருப்பாரா என்று சொல்லி புலம்பி கொண்டே வரும் எங்களை குறைகூறுவதை விட்டுவிட்டு இதில் காவல்துறை ஆகிய நாங்கள் என்ன செய்ய முடியும் என்று யோசித்து முடுவெடுங்கள்.
மக்களே எங்களை குறைகூறுவதை விட்டுவிட்டு உண்மையை உணருங்கள் அப்போது தான் நீதிகளை நிலைநாட்ட முடியும். காவல் துறையின் குமுறல்!
படித்ததில் வலித்தது.
குறிப்பு;இரண்டு தினங்களாக ஒரு வீடியோ வலம் வருகிறது..அதில் நான்கு தடியர்கள் சேர்ந்து ஒரு போலீஸ்காரரை நடு ரோட்டில் அடிக்கின்றார்கள்..அடித்தவர்கள் வசதியான குடும்பத்து பையன்கள்.அதுவும்..?அவர்கள் இஸ்லாமியர்கள்..உடனே தண்டனை கொடுக்கப்பட்டது. யாருக்கு..?யூனிஃபார்ம்மோடு நடு ரோட்டில் பொதுமக்கள் முன்னணியில் அடிவாங்கி காயமும்,அவமானமும் பட்ட போலீஸ்காரருக்கு..
No comments:
Post a Comment