தி.மு.க.வில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை கூட்ட அக்கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.அடுத்த மாதம் 18ல் தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகளுக்கு தலா மூன்று எம்.பி. பதவிகள் கிடைக்கும்.தி.மு.க.விற்கு கிடைக்கக் கூடிய மூன்று பதவிகளில் ஒன்று ம.தி.மு.க.வுக்கு தரப்பட உள்ளது. மற்ற இரண்டையும் வழக்கறிஞர் வில்சன் தொழிற்சங்க பேரவை தலைவர் சண்முகம் ஆகியோருக்கு வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கறிஞர் வில்சனை விட வழக்கறிஞர் அணியில் மூத்த நிர்வாகிகளாக சிலர் உள்ளனர். அதே போல் கட்சியிலும் மூத்த நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களும் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு காத்திருப்பதால் கட்சியில் புகைச்சல்கிளம்பியுள்ளது.
இதற்கிடையே காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தருமாறு கத்தோலிக்க பிஷப்கள் சிலர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் பரிந்துரை செய்துள்ளனர். யாருக்கு எம்.பி. பதவி வழங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதனால் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவை கூட்ட ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment