Thursday, June 27, 2019

புதிய தலைமைச் செயலர் யார்.

தமிழக அரசின் புதிய தலைமை செயலராக சண்முகம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இப்பதவியில் உள்ள கிரிஜா வைத்தியநாதன் 2016 டிசம்பரில் பொறுப்பேற்றார்; வரும் 30ல் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை செயலரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தி வந்தது. இந்த பட்டியலில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் புதிய தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது நிதித் துறை கூடுதல் தலைமை செயலராக உள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தே சண்முகம் நிதித்துறை செயலர் பொறுப்பை கவனித்து வருகிறார். கிரிஜா வைத்தியநாதன் 2017 டிசம்பரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தலைமை செயலர் பொறுப்பை கூடுதலாக சண்முகம் கவனித்துள்ளார்.முதல்வரின் செயலராக உள்ள செந்தில்குமாரிடம் நிதித்துறை செயலர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல சட்டம் ஒழுங்கு பிரிவு புதிய டி.ஜி.பி.யாக திரிபாதி நியமிக்கப்படுவது குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், சண்முகம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...