அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழனிசாமி, முனுசாமி ஆகியோர் நீக்கப்படுவதாக, பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்த பன்னீர்செல்வம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, காலை 8.40 மணியளவில், தன் ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது, பழனிசாமி -- பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

அதிகாரம்
இதில், பழனிசாமி அணியை சேர்ந்த, தி.நகர் பாண்டிபஜார் ஜெயலலிதா பேரவை செயலர் லோகநாதன் உள்ளிட்ட பலர் பலத்த காயம் அடைந்தனர்.பின், பொதுக்குழுவில் தன்னை நீக்கிய தகவல் வெளியானதும் பன்னீர்செல்வம் பேட்டி:அ.தி.மு.க., சட்ட விதிப்படி, ஒன்றரை கோடி தொண்டர்கள், என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, என்னை நீக்க பழனிசாமிக்கோ, முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை. கட்சி விதிகளுக்கு புறம்பாக, தன்னிச்சையாக, என்னை நீக்குவதாக அறிவித்தவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.பழனிசாமி, முனுசாமி இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தொண்டர்களுடன் இணைந்து, உரிய நீதியைப் பெறுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
![]() |
போலீசில் புகார்
இந்நிலையில், அ.தி.மு.க., தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரவு கொடுத்த புகாரில், ''பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி புகுந்து, பொருட்களை சூறையாடினர். ''மேலும் கட்சியின் ஆவணங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும்,'' என, கூறியுள்ளார்.

No comments:
Post a Comment