Thursday, July 14, 2022

குள்ள நரிகள் கூக்குரலிடுவதில் ஆச்சர்யமில்லை!

  புதிதாக கட்டப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில் நிறுவப்பட்டுள்ள, இந்திய அரசின் தேசிய சின்னத்தை, பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். பிரதமர் எதைச் செய்தாலும், அதில் குற்றம் குறை காணும் எதிர்க்கட்சித் தலைவர்கள், 'தேசிய சின்னத்தில் இடம் பெற்றுள்ள நான்கு சிங்கங்கள் கோபமாகச் சீறுவது போல அமைந்துள்ளன. சிங்கங்கள் சீறுவது போல இருப்பது அபத்தமாக இருக்கிறது; அவை சாந்தமாக இருப்பது போல சிலை வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும்' என, காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அட ஞானசூன்யங்களா... சிங்கத்தின் சிறப்பே அதன் சீற்றம் தானே? 'சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும், அதன் சீற்றம் குறைவதுண்டோ...' என்று தானே கவியரசு கண்ணதாசன் பாடல் எழுதியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் தான் இப்படி சொல்கின்றனர் என்றால், கம்யூனிஸ்ட் தோழர்கள், 'இந்தியா மதச் சார்பற்ற நாடு; அப்படி இருக்கும் போது, தேசிய சின்னத்தின் திறப்பு விழா நடக்கும் முன், அந்தணர்களை வைத்து பிரதமர் யாகங்கள் வளர்த்தது மன்னிக்க முடியாத செயல்' என்று விமர்சனம் செய்திருக்கின்றனர்.
எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன், அந்தக் காரியம் நல்லபடியாக நடக்க யாகங்கள் செய்வது ஒன்றும் பஞ்சமாபாதகம் இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட்களுக்கு, இது தெரியாமல் போனதில் நமக்கு வியப்பில்லை.
அசோக சக்கரவர்த்தி, சாரநாத் என்ற இடத்தில் ஸ்தாபித்த துாணில் இருக்கும் நான்கு சிங்கங்கள், நின்ற நிலையில் இருப்பது தான் நம் தேசிய சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர் வழிபட்ட அன்னை காளி தேவியின் வாகனமாக இருப்பதும் சிங்கமே.
பக்த பிரகலாதனின் தந்தை இரண்ய கசிபுவை, பாதி சிங்கமாகவும், பாதி மனிதனாகவும் நரசிம்ம அவதாரம் எடுத்து தான் கொன்றார் பகவான் விஷ்ணு. இன்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பிரதமர் மோடி சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
சிங்கம் போல பீடு நடை போட்டு வரும் பிரதமர் மோடியைப் பார்த்து, குள்ள நரிகளான எதிர்க்கட்சித் தலைவர்கள் அவ்வப்போது கூக்குரலிடுவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. சிங்கத்தை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், நரித்தனமான செயல்களைத் தானே செய்வர். அவர்களின் கூற்றுக்களை புறந்தள்ளுவதை தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...