Saturday, July 9, 2022

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பல சாதனைகளை செய்தவர் "சான்டோ" சின்னப்ப தேவர்.

 சிறுவயதில் இருந்தே முருகன் மீது அளப்பறிய பக்தி கொண்டவர்.

வாலிப வயதில் வறுமையில் வாடியபோது ஓட்டலில் இரண்டு இட்லிகள் தின்பதற்கு மட்டுமே கையில் காசு இருக்குமாம்.
அவர் ஓட்டலில் இரண்டு இட்லிகளை வாங்கி அதற்கு பத்து தரம் சாம்பார் வாங்குவாராம். அப்படித்தான் வயிறை ரொப்பி கொள்வாராம்.
ஒரு தரம் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது அவர் வாங்கின பத்து ரூபாய் கடனுக்காக,அவர் கழுத்தில் துண்டை போட்டு ஒருத்தர் இழுத்து,"மரியாதையாக பணத்தை வச்சுட்டு வேறு வேலையை பாரு"என சொல்லவும் கூட்டம் கூடி அவமானத்தால் கூனி குறுகி நின்று இருக்கிறார் தேவர்.
துண்டை கழுத்தில் போடுவது என்பது மிக கேவலமான விசயம்.இரண்டு நாளில் தருகிறேன் என வாக்கு கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு வருகிற தேவர் நேராக கோபத்துடன் மருதமலை முருகனை காண படியேறுகிறார்.அப்ப மிகச்சிறிய கோயில்தான் மருதமலை!
"முருகா!ஏன்டா இப்படி கஷ்டப்படுத்துற!இப்படி அவமானப்படுத்துற!எதாவது ஒரு வழியை காண்பிடா"என முருகனின் கோபமாக பேசி விட்டு கோபமாக படியில் இறங்கி இருக்கிறார்.
எப்பவும் தேவர் முருகனிடம்,நண்பரிடம் பேசுவது போல்தான் பேசுவார்.
படியில் இறங்குகிறார் ஒரு சிகரெட் பெட்டி கிடக்கிறது அதை எடுத்து பார்க்கிறார்,உள்ளே பத்து ரூபாய் இருக்கிறார்.
தன்னை அறியாமல் கண்கலங்கி அழுகிறார்.
கடனை அடைத்த அவர் உடனே சென்னை கிளம்பி முருகன் அருளால் மிகப்பெரிய உயரத்திற்கு வருகிறார்!
மிகப்பெரிய உயரத்திற்கு வந்த பிறகு தேவர்,தன் படத்தில் மருதமலை முருகனை நினைத்து வைத்த பாடல் வரிகள்,
"சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன்!
நான் மறவேன்!!
பக்தி கடலென
பக்தி தருகிட வருவேன்!!
நான் வருவேன்!!
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...