Friday, April 28, 2023

1961 --1975 தலைமுறை.

 நம்ம அம்மாங்களை படுத்தாம தட்டில போட்டதை நாம சாப்பிட்டுட்டு .......

நம்ம பிள்ளைங்களுக்கு ஒருவாய் சாப்பாடு ஊட்டிவிட ஒருமணி நேரமா காத்திருந்து.....
நம்ம அப்பா முன்னால மரியாதையா எழுந்து நின்னு பேசின வங்க ஒருசில வீட்டில கைகட்டி தலைகுனிந்து
அப்பா நின்னா அவர் முன்னால உட்கார்ந்து பேசி பழக்கப்படாதவங்க......
நம்ம பிள்ளைங்க அப்பா ஃபிரண்டு மாதிரின்னு அவங்க அப்பா மூஞ்சிக்கு முன்னாடி சோஃபால காலைநீட்டி நிமிந்து.......
ஒருவாய்த் தண்ணிக்காக பாட்டில் கலாச்சாரம் அறியாது ஸ்கூலில் நாம் தவியாய்த் தவித்து........
நம் பிள்ளைகள் அக்காபீனா.தண்ணி பாட்டிலை கூட ஒருமடக்கு கூட குடிக்காமல் திருப்பி கொண்டு வந்து. பாடாய்ப்படுத்தி.......
பெற்றோர் அக்கா தங்கச்சிங்களுக்கு அண்ணா தம்பிங்களுக்கு ஒரே மாதிரி சீட்டிதுணில தச்சு குடுத்த ட்ரெஸ்சையும் போட்டுகிட்டு ட்ரெஸ்கோடையும் சத்தம் போடாம ஏத்துக்கிட்டு .........
பெத்த பிள்ளைக செலக்ட் பண்ற ட்ரெஸ்சையும் நாம போட்டுக்கிட்டு இப்படித்தான் மேக்கப் போடணும்னு அவுங்க சொல்றதையும் நாம கேட்டு்கிட்டு .....
பெற்றோர் முகம் வாடக்கூடாதேன்னு அவங்களை எதிர்த்து பேசாமலும் பிள்ளைங்க கோச்சுக்க போறாங்கன்னு பிள்ளைங்க சொல்றதை எல்லாம் செய்ஞ்சுக்கிட்டு.......
பெற்றோர் குடுக்கும் டீன்ஏஜ் கெடுபிடிகளையும் ஆண் நண்பர்களோட பெண் சினேகிதிகளோட பேசாத போன்ற மொக்கைகளை சகிச்சுக்கிட்டும் ........
வயசான காலத்திலயும் ஃபேஸ்புக் போகாத . உனக்கு வெரம் பத்தாது மோசமான உலகம் அதுன்னு பிள்ளைங்க மிரட்டலையும் வழிஞ்சுக்கிட்டே சமாளிச்சுக்கிட்டு......
மொத்தத்தில
பெற்றோருக்கும் அடங்கி போய் பிள்ளைங்களுக்கும் அடங்கி போன ஒரே தலைமுறை நம் தலைமுறையா தான் இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...