Thursday, April 27, 2023

🧿''மன உறுதி இருந்தால் தான்..''🧿

 ♻️மன உறுதி என்பது உறுதியான முடிவான, வலுவான மன விருப்பம் என்கிற பண்பு நலனாகும்.


♻️ஓர் அற்புதமான கருவில் இருந்து தான் ஒரு சிறந்த புத்தகம் உருவாகிறது.


♻️அதேபோல் மனிதனுக்கு மன உறுதி இருந்தால் தான் அவனுக்கு சிறந்த வாழ்க்கை அமையும்’ என்று அமெரிக்க எழுத்தாளர் லூயி லேமுர் (Louis L'Amour) உதிர்த்த பொன்மொழி..


♻️திடமான மன உறுதியினால் நெருக்கடியையும், பெருங்கேட்டையும், துன்பத்தையும் கண்டு பின் வாங்காமல் துணிச்சலுடனும், உறுதியுடனும், மனவலிமை உடனும் சமாளிக்க முடியும்.


♻️நடைபெறுகிற நிகழ்ச்சிகளிலோ, சூழ்நிலைகளிலோ முடங்கிப் போய் விடாமலும், அழிந்து போய் விடாமலும் எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.


♻️ஒருவர் தமது குறிக்கோளை வெற்றிகரமாக அடைவற்கு உதவுவது மனஉறுதி.


♻️எதிர்பாராத பாதிப்புகள் தாக்குகிற போது பொறுமை உடனும், மனவலிமை உடனும் அதனை எதிர்கொள்வதற்கு மனஉறுதி ஒருவரைப் பண்படுத்துகிறது.


♻️மனசக்தியை வழங்குவது மனஉறுதி தான். எல்லாவிதமான விளைவுகளையும் எப்படிப்பட்ட நெருக்கடிகளையும் சந்திக்கின்ற உறுதியை உருவாக்குகிறது.


♻️நெருக்கடிகள் ஏற்படும் போது மனம் சோர்ந்து விடாமல் சமமாக எடை போட்டு அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.


♻️துன்பம் ஏற்படுகிற போது அதைப் பார்த்துப் புன்னகையை வீசுகிற கொடையையும், தனி நபருக்கு எதையும் தாங்கும் சக்தியையும் வழங்குவது மனஉறுதி தான்.


♻️மனஉறுதி ஒருவர் உள்ளத்தைத் தன்னம்பிக்கையால் நிரப்புகிறது. வாழ்வில் சோதனைகளைச் சந்திக்கிற துணிச்சலைக் கொடுக்கிறது.


♻️தன்னம்பிக்கையினையும், மன முதிர்ச்சியையும், மனநிறைவையும் வளர்ப்பது மனஉறுதிப் பண்பு தான். இதனால் ஒருவர் துணிச்சல் மிக்கவராகி அமைதி பெறுகிறார்.


மனோதிடம் இருக்கும் மனிதனால் என்ன செய்ய முடியும்?


♻️எதையும் செய்ய முடியும்! ஒருவரின் லட்சியத்தை, கனவை நனவாக்க முதல் தேவை மனஉறுதி. இது இல்லை என்றால் எந்தச் சாதனையும் சாத்தியம் இல்லை.


♻️மன உறுதியோடு, முயற்சி, அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பு, ஒழுங்கு எல்லாம் சேர்ந்து கொள்ளும் போது கனவு நனவாகிறது;


♻️ஒருவர் தான் அடைய நினைக்கும் இலக்கை அடைந்து விடுகிறார். ஆக, எதுவும் சாத்தியம், சாத்தியமில்லை என்பது மனிதனின் மன உறுதியில் தான் அடங்கி இருக்கிறது.


😎ஆம்.,நண்பர்களே..,


🏵️ஒரு செயலுக்காக உழைக்கிறோம் என்றால் தடைகள் தாண்டி வெற்றி பெற மனஉறுதி மிக அவசியம்.


மனஉறுதி இருந்தால் தான் இறுதிவரை போராடி வெற்றி பெறலாம்.


4ஒவ்வொரு நாள் காலையிலும் மனஉறுதியுடன் தன்னம்பிக்கையுடன் எழுந்திருங்கள்.


உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள்.


╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...