Friday, April 28, 2023

வலி_வலி..................

 வலியிலே கொடிது

அன்பில் பிணைந்திருந்த
நிராகரிப்பின் வலியா... ?
நிராகரிப்பிலும் கொடிது
உறவின் நிலையிலும்
பற்றற்று இருப்பதின் வலியா... ?
பற்றற்று இருத்தலினும் கொடிது
அணைத்து தேற்றுபவர் இல்லாமல் இருத்தலின் வலியா... ?
தேற்றுவர் இல்லாதினும் கொடிது
தனித்து இருப்பதின் வலியா... ?
தனித்து இருத்தலினும் கொடிது
தானாய் இயங்க முடியா நிலையில் இருத்தலின் வலியா... ?
அந்நிலையினும் கொடிது
உணவை உட்கொள்ள இயலாத நோய்
தாக்கத்தின் வலியா... ?
நோய் தாக்கத்தினும் கொடிது
அதை தீர்க்க பணமில்லா
ஏழ்மை நிலையில் இருப்பதின் வலியா... ?
ஏழ்மை நிலையிலினும் கொடிது
கவனிப்பாறற்ற மூப்பு நிலையின் வலியா ... ?
மூப்பு நிலையினும் கொடிது
அன்பின் நிராகரிப்பு வலியா... ?
துவங்கிய இடத்திலேயே
துவண்டு போய் முடிதலே
வலியென்றால்...
வலிக்கு வழிவிடாது
வளியுடன்
இருக்க ஆயத்தமாவோம்!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...