Friday, April 21, 2023

காதலிக்க கற்றுக் கொ ள் ளுங்கள்.

 சில நேரங்களில் கெடுதல் என்று நாம் நினைப்பது கூட கடைசியில் நல்லதாக முடியும். எல்லாம் முடிந்த பிறகு பார்க்கும்போதுதான் அது சாபமல்ல, வரம் என்று தெரியவரும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் அதுபோல நடந்தது. 1966-ம் ஆண்டில் அவருக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்தது. அதனால், ஏற்பட்ட நன்மை என்னவென்றால் உடல் மெலிந்து இளமையாகத் தோற்றமளிக்க ஆரம்பித்துவிட்டார். அப்படி ‘சிக்’கென அவர் தோன்றிய படம், அவரது படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்றான தங்கை.

ஹிந்தியில் தேவ் ஆனந்த் நடித்த Bazzi படத்தின் ரீமேக். ஆக்க்ஷன் ஹீரோவாக சிவாஜி அடியெடுத்து வைத்த படம். கேட்டவரெல்லாம் பாடலாம் பாடலில் டி-ஷர்ட்டுடன் ஸ்லிம்மாக இருப்பார். படத்தில் கே.ஆர்.விஜயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடக்கும் பார்ட்டியில் இந்தப் பாடல். ‘கமான்.... க்ளாப்ஸ்..’ என்றவுடன் எல்லாரும் கைதட்ட டி.எம்.எஸ். சின் ‘ஹே... எஹே..’ குரலில் சிவாஜி ஸ்டைலாக தலையசைக்கவும் நமக்குள் குஷி குபுக்கிடும். பாடல் முழுவதும் அழகாக ஸ்டெப் போட்டு நளினமான மூவ்மென்ட்ஸ்.
‘சீட்டுக் கட்டு ராணி மாப்பிள்ளை தேடி ஊர்வலம் போனாள்...’ என்று சிவாஜி பாடும்போது நாணத்துடன் சிரித்து தலை கவிழும் கே.ஆர்.விஜயா க்யூட். கடைசியில் பார்த்தால் தோழியின் வயது 60-க்கு மேலாம். மெல்லிசை மன்னரின் இசைக்கு கவியரசர் ஜாலியாக எழுதியிருக்கிறார். அந்த வரிகள் முடியும் சமயத்தில் தன்னை மறந்து பாடிக் கொண்டே பின்னாடியே நகர்ந்து செல்லும் சிவாஜி, போலீஸ் டிரஸ்ஸில் இருக்கும் பாலாஜியின் மீது மோதிவிட்டு, ‘தெரியாமல் இடித்துவிட்டேன்’ என்பதுபோல் கும்பிடுவார். ‘பரவாயில்லை, இதிலென்ன?’ என்று பாலாஜியும் வலது கையை லேசாக உயர்த்தி அதை ஏற்றுக் கொள்வது இயல்பு.
இந்தப் பாடலுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையில் வந்தது. மக்களின் பிரதிநிதி ஒருவர் தேர்வு செய்த மெட்டு இது. முதலில் சில மெட்டுகள் போட, எல்லாமே நன்றாக இருந்ததால் எதைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறார்கள். பிறகு அங்கு வந்த தபால்காரர் ஒருவரிடம் மெட்டுகளை போட்டுக் காட்ட அவர் தேர்வு செய்த மெட்டுதான் இது.
மேஜர் சுந்தரராஜன் அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஒரு படத்தில் சிவாஜியுடன் அவர் நடிக்கும்போது போதுமான ரியாக்க்ஷன் காட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாதிரி இருந்தீர்களே? என்ற கேள்விக்கு சுந்தரராஜன் அளித்த பதிலில், ‘சிவாஜி நடிக்கும்போது அதை வேடிக்கைதான் பார்க்க முடியும். வேறு என்ன செய்ய முடியும்?’ என்று கூறினார்.
அந்த மாதிரி இந்தப் பாடலில் சிவாஜியின் நடிப்பை வேடிக்கை பார்த்து முக்கியமான ஒரு காட்சியை கவனிக்கத் தவறிவிடாதீர்கள். ‘அந்தப்புரம் போனேன்.. ராணி முகம் பார்த்தேன்’ வரிகளுக்கு முன்னதாக, சிரித்துக் கொண்டிருந்த பாலாஜியின் முகம் திடீரென சீரியசாகும். பார்த்தால் கே.ஆர். விஜயா சிவாஜியை விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருப்பார். இதைக் கவனித்த பாலாஜியின் பார்வை வலதுபுறம் திரும்பும். ‘அப்படிப் போகுதா கதை?’ என்பதுபோல சிவாஜியை கே.ஆர்.விஜயா விரும்புவதைப் புரிந்து கொள்வார். இரண்டு பேரின் மன உணர்வுகளை அவர்களின் பார்வைகளை வைத்தே திருலோகச்சந்தர் வெகு அழகாகக் காட்சிப்படுத்தி இருப்பார். பார்வைகளில்தான் எவ்வளவு விதவித அர்த்தங்கள்?
சாதாரணமாக பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்களின் பார்வைகளைக் கூர்ந்து கவனியுங்கள். அதற்காக வெறித்துப் பார்க்காதீர்கள். நம்மை மற்றவர்கள் தவறாக நினைக்கக் கூடும். நம்மைச் சுற்றிலும் என்னதான் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளப் பார்க்கிறோமே தவிர நமக்கும் தவறான நோக்கமல்ல. சும்மா... அப்படி... கவனிக்காத மாதிரி இருந்து கவனித்து மற்றவர்கள் பார்வைகளைப் பாருங்கள். பிறகு, எதேச்சையாகத் திரும்புவதுபோல அந்தப் பார்வைகள் செல்லும் திசைகளைப் பாருங்கள். பார்வைகள் நமக்கு ஆயிரம் கதைகளைச் சொல்லும்!
May be an image of 1 person
All reac

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...